Sunday 21 May 2023

நாய்களும் உயிர்கள் தான்!

 

நாய்களைக் கொல்லுவதையே தொழிலாகக் கொண்ட அரசாங்க ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களைப்பற்றியான ஏகப்பட்ட  புகார்கள் வந்தாலும் அது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதாக இல்லை! அவர்களது வேலையை அவர்கள் செய்கிறார்கள்.  அவ்வளவு தான்!

ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான  செய்தியைக் கேட்டு அதிர்ந்து தான் போனோம். வயதான மனிதர் ஒருவர்  "எனது நாயைப் பிடிக்காதீர்கள்!" என்று கெஞ்சியும்  அந்த ஊழியர்கள் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக வளர்க்கும் ஒரு பிராணியை விட்டுப் பிரிய அந்த 85 மனிதரால் முடியவில்லை. அப்போது நடந்த வாக்குவாதத்தின்  போது அந்த வயதான மனிதர் தவறி கால்வாய்க்குள் விழுந்து மரணமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பட்டாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம்,  நாய் தான் என்றாலும் கூட,  கொஞ்சம் அந்த ஊழியர்களுக்கு மனிதாபிமானம் இருக்க வேண்டும்.  ஒரு சிலர் நாய்களைக் தங்கள் குழந்தைகளைப் போல வளர்க்கின்றனர். அந்த மனிதர்களின் குரலுக்கு அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு நாய்களைச் சுட்டுத தள்ளுவதும், வீதிகளில் கட்டி இழுத்துக் கொண்டு போவதும் மிக மிக மனிதாபிமானமற்றச் செயல். சரி மனிதாபிமானம் தான் இல்லை. நாய்பிமானமாவது  இருக்க வேண்டும்!

அந்த ஊழியர்களின் அதிகாரிகளும் எதனையும் கண்டு கொள்வதில்லை. நாய்களை அடித்தும், இழுத்தும்கொண்டு போவதை, துன்புறுத்துப் படுவதை புகார் அளித்தாலும், ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் எல்லாமே வீண் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

ஒன்று நமக்கு விளங்குகிறது.  மனிதன் விலங்காக மாறிக் கொண்டிருக்கிறான்.  விலங்குகள் மனிதனாக மாறிக் கொண்டிருக்கின்றன!  அந்த அளவுக்கு விலங்குகள் பாசத்தைக் கொட்டுகின்றன.  மனிதனுக்கு எதுவுமே இல்லை. ஒரு ஜடம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

எப்படியோ ஓரு மனிதரின்  உயிர் போனது  போனது  தான். அதே போல அவரது நாய் மட்டும் என்ன வாழவா போகிறது

No comments:

Post a Comment