Sunday, 10 July 2016
சட்ட நடவடிக்கையா?! ஐயோ தாங்கமுடியல!
நமது சமூகத்தில் ஏன் இத்தனை வழக்கறிஞர்கள் என்பது இப்போது புரிகிறது! நமது இளைஞர்கள் ஏன் இந்த வழக்கறிஞர் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது!
ம.இ.கா.வில் சேர்ந்தால் சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்பதாகவே நமது இளம் வழக்கறிஞர்கள் நினைக்கிறார்கள் போல் தொன்றுகிறது!
இந்த ம.இ.கா.வினரை நினைக்கும் போது இவர்கள் என்ன படித்தவர்களா? பண்பில்லாதவர்களா? பொறுக்கித்தின்னும் கூட்டமா? புறம் போக்குகளா? எதுவும் விளங்கவில்லை! அவ்வளவு அட்டுழியங்கள்! நமது இனத்தின் அவமானச் சின்னங்கள்!
எத்தனை நாளைக்குத் தான் இவர்கள் செய்கின்ற அட்டுழியங்களை நாம் பொறுப்பது?
மக்களூக்குத் தொண்டு செய்ய இவர்கள் நாம் தேர்ந்து எடுத்தால் இவர்களோ பொண்டாட்டி பிள்ளைகளுக்குத் தொண்டு செய்கிறார்கள் இவர்களுக்கு எல்லாக் காலத்திலும் கூடவே ஒரு வழக்கறிஞர் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு. திருடுவதற்கு முன்னர் சட்ட ஆலோசனைகளைக் கேட்டுவிட்டுத் தான் இவர்கள் திருடுகிறார்கள் போல் தெரிகிறது!
இப்படி மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இவர்களின் கல்வி பயன்படுகிறது என்றால் - பணத்தைத் திருடுவதற்குத்தான் இவர்கள் கல்வி பயன்படுகிறது என்றால் - அவர்கள் படிக்கின்ற கல்வியை வாழ்த்தி வரவேற்கவா முடியும்?
ஓர் உண்மையை எப்படி அவர்களால் மறக்க முடியும்?. தெய்வம் நின்று கொல்லும் என்று தமிழன் சும்மாவா எழுதி வைத்தான்! ஒரு செல்வந்தனின் மகன் மேல்மாமாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டானே அப்போது அவன் அப்பன் கொள்ளையடித்து சேர்த்த பணம் அவனைக் காப்பாற்றியதா?
தமிழ்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான அரசாங்கப்பணம் என்ன ஆயிற்று என்று ஒருவனும் வாய்த் திறக்கமாட்டேன் என்கிறானே - அவன் பிள்ளைகளுக்கு நோய் வந்தால் அந்தப் பணம் அவர்களைக் காப்பாற்றிட முடியுமா? சாதாரண நோயைக்கூட அசாதாரணமாக ஆக்கிவிடை இறைவனால் முடியாதா?
வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ பேர் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு இந்தத் தமிழ் இனத்துக்காக உழைக்கிறார்கள். ஆனால் இவர்களோ அரசியலை வைத்துக் கொண்டு - பதவியில் இருந்து கொண்டு - இப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே - தெய்வம் பார்த்துக் கொண்டு தான் இருக்கும் என நினைப்போ!
எடுத்ததற்கெல்லாம் சட்டம்! சட்ட நடவடிக்கை! போங்கடா! நீங்களும் உங்கள் அரசியலும்! ஒரு நாள் சட்டையில்லாமல் வீதிக்கு வருவீர்கள்! அது தான் உங்களுக்கு, உங்கள் விதி எழுதிய சட்டம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment