Monday 11 February 2019

கேள்வி - பதில் (92)

கேள்வி

வருகின்ற தமிழக நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசனின் "மய்யம்" கட்சி அனைத்துத் தோகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறாரே!

பதில்

"அனைத்துத் தொகுதிகளிலும்" என்பது அவரின் பலம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு முன்னோட்டமாகத்தான் அவர் அதனை எடுத்துக் கொள்ளுவார் என்று நான் நினைக்கிறேன்.

அத்தோடு "நாம் தமிழர் கட்சி"  யும் இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது.  வழக்கம் போல. 

பொதுவாக இந்த இரு கட்சிகளுமே எந்த அளவுக்கு மக்களின் செல்வாக்கைப்[ பெற்றிருக்கின்றன என்பது கேள்விக் குறியே. கமலஹாசன் சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர், நாம் தமிழர் கட்சி நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சி. ஆனால் மக்களிடையே செல்வாக்கு உள்ள ஒரு கட்சி என்றால் அது தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தான்.

பொதுவாக தமிழக ஊடகங்கள் திராவிடக் கட்சிகளுக்குத் தான் பக்கபலமாக இருக்கின்றன. பொது மக்களிடம் அவர்கள் கேட்கும் கேள்விகள் கூட  "உங்கள் வாக்கு தி.மு.கா. வா, அண்ணா தி.மு.கா. வா" என்னும் பாணியில் தான் இருக்கும். திராவிடம் என்ற சொல் இல்லாத கட்சிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். விஜயகாந்த் கட்சி கூட திராவிடம் என்னும் சொல்லைத் தான் பயன்படுத்துகிறது.

ஆக, ஊடகங்களே திராவிடக் கட்சிகளைத் தான் ஊக்குவிக்கின்றன. தமிழ் தேசியம் என்பதெல்லாம் அவர்களுக்கு வேண்டாதவை.  கமலஹாசனின் மைய்யம் "திராவிடம்" இல்லாத கட்சியாக வருவதால் ஊடகங்களின் புறக்கணிப்பும் இருக்கத்தான் செய்யும்.

அப்படி கமலஹாசனின் கட்சி ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில் மக்களின் ஆதரவு மட்டும் இருந்து அவர் ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்றால் நிச்சயமாக அது வருங்கால தமிழகத்திற்கு நல்லதொரு அறிகுறியாக இருக்கும்.

இப்போது மக்கள் எந்த அளவுக்கு விழிப்படைந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. காஜா புயல் சமீபத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு. ஆனால் இது எந்த அளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் தெரியவில்லை. அவர்களுக்குக் கையூட்டு பெரிய அளவில் கிடைத்தால் அனைத்தையும் மறந்து விடுவார்கள்!

அனைத்துத் தொகுதிகளிலும் சரி அவர் ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் நான் மகிழ்வேன்!

No comments:

Post a Comment