Sunday 3 February 2019

மீண்டும் கேமரன்மலைக்கு வருவோம்...!

ஆமாம்! நாங்கள் மீண்டும் கேமரன்மலைக்கு வருவோம்! அது எங்கள் தொகுதி, நாங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்! என்கிறார் ம.இ.கா. வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

"இப்போது அத்தொகுதி இரவலாகத்தான் அம்னோவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனை மீண்டும் நாங்கள் பெறுவோம். வெற்றி பெற்றவர் தகுதியான வேட்பாளர். அதனால் வெற்றி உறுதிசெய்யப்பட்டது" என்கிறார் அவர்.

ஆக அவர் ஒன்றை ஒப்புக் கொள்ளுகிறார். தகுதியான வேட்பாளரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் - இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை!  அது தான் நம்முடைய நிலைமையும் கூட!

அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. வின் வேட்பாளர் தான் அங்குப் போட்டி  இடுவார் என்பது நல்ல செய்தி.  ஆனால் அடுத்த தேர்தல் வரை யார் இருப்பார், யார் இருக்கமாட்டார்  என்பதெல்லாம்  நமக்குத் தெரியாத செய்தி! அரசியலில் எதுவும் நடக்கலாம். ஒன்றும் அதிசயம் அல்ல!

 பூர்வக்குடியினர் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் சாராதவர்கள். இப்போது தான் முதன் முதலாக அரசியலுக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறர்கள்.  அவர்களுக்கு வேறு இடம் தேசிய முன்னணி ஒதுக்கப் போவதில்லை. காரணம் அவர்கள் மலாய்க்காரர்கள் அல்லர்.  எந்த ஒரு மலாய்க்காரர் தொகுதிலும் அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள். அதனால் கேமரன்மலை தவிர்த்து அவர்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது.  அதனால் அவர்கள் அந்தத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்.  இனி பூர்வக்குடியினர் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுப்பார்கள் என்று யாரும் கனவு காண முடியாது!  இருக்கின்ற ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு  பூர்வக்குடிகள் எங்கே போவார்கள்?  இப்படி ஒரு தொகுதி அவர்களுக்குக் கிடைக்கும் என்று அவர்கள்  நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!   அவர்கள் தொடர்ந்தாற் போல வஞ்சிக்கப்பட்ட மக்கள்.    தேசிய நீரோட்டத்தில் அவர்களின் பங்கு இல்லை. வாராத வந்த மாமணி - விட்டுக் கொடுப்பார்களா பூர்வக்குடிகள்?       

எப்படி இருப்பினும் ம.இ.கா. தலைவரின் நம்பிக்கையை நாம் பாராட்டுகிறோம். ஏதாவது ஒரு வழி கிடைக்காமலா போய்விடும்?  அவர்களிடையே ஒரு ம.இ.கா. கிளை உருவாகலாம்!  அங்கிருந்து ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படலாம்! அரசியலில் எதுவும் நடக்கும். 

மீண்டும் வருவோம் என்பது நம்பிக்கை. வர வேண்டும் என்பதே எங்களது  கோரிக்கை! வருக! வருக!    

No comments:

Post a Comment