Friday 22 February 2019

கேள்வி - பதில் (93)

கேள்வி 

நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. வை குடும்ப நிறுவனம் என்பதாகக் கூறியிருக்கிறாரே!

பதில்

இந்தக் கருத்து ஒன்றே போதும்  அவருடைய அரசியலை  புரிந்து கொள்ள! கலைஞர் இருந்த  போது  இப்படி  ஒரு  கருத்தைச்  சொல்ல  அவரால்  முடியவில்லை! இப்போது  தான்  அவருக்கு நேரம்  வந்திருக்கிறது! இப்படிப் பட்டவர்களை  நாம்  எப்படிப்  புரிந்து கொள்ளுவது?  ஆள்  இருக்கும்  போது  ஒரு  மாதிரி  பேசுவதும்  ஆள் இல்லாத  போது  ஒரு  மாதிரி  பேசுவதும் - இவருடைய அரசியலை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!

முதலில்  கமல் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு.க. என்பது ஒரு கட்சி அல்ல! அது ஒரு மாபெரும்  குடும்ப நிறுவனம்!  அந்த நிறுவனத்திற்கான தலைவர்கள்  அனைவரும்  கலைஞரின் வாரிசுகளே1 இப்போது  தான்  முதன்  முதலாக  ஸ்டாலின், கருணாநிதிக்குப் பின்னர் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

நிறுவனத்தை பலமாகக்  கட்டிக் காத்து வளர்த்தவர் கலைஞர். அவர் இருந்த வரையில்  வாரிசுகள் தங்களது  பகைமையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இனி மேல்  அதற்கான வாய்ப்புக்கள்  நிறையவே  உண்டு. அதுவும்  வருகின்ற  தேர்தலில்  ஸ்டாலின்  தனது தலைமையை நிருபித்தே  ஆகவேண்டும்.  வாழ்வா  சாவா போரட்டம்!  தோற்றுப்  போனால்  வாரிசுகள்  வெளிப்படையாகவே  அடித்துக்  கொள்ளுவார்கள்! வெற்றி பெற்றால் ஸ்டாலின் தலைமைத்துவம்  கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்கும். 

எது எப்படி இருப்பினும்  எல்லாமே தற்காலிகம்  தான். ஒரு குடும்ப நிறுவனத்தில் என்னன்ன நடக்குமோ அத்துணையும் இந்தக் கட்சியிலும் நடக்கும்! வாரிசுகள் ஒருவர் இருவர் அல்ல. கலைஞரின் குடும்பம் பெரிசு. அது போலவே வாரிசுகளின் சண்டையும் பெரிசாகத் தான் இருக்கும்.

கலைஞர் மிகத் திறமைசாலி. 'தமிழ்! தமிழ்!'   என்று  பேசியும், எழுதியும் தமிழர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டார்! பின்னர் சாராயத்தையும் ஊற்றிக்கொடுத்து தமிழர்களின் மூளையை மழுஙகடித்தார்! 

கமல் இவைகளையெல்லாம் அறியாதவர் அல்ல. ஆனாலும் அவர் இருக்கும் போது  அவரால் உண்மையைப் பேச முடியவில்லை. அப்படிப் பார்த்தால் கமல் காலம், நேரம்  பார்த்து  பேசுபவர்  என்று தான்  பொருள்படும். ஆனால் இது அரசியல் அல்ல, சந்தர்ப்பவாதம்! அரசியலுக்குத் தேவை உண்மை, நேர்மை - தொண்டுக்குத்தான் முக்கியத்துவம். தொண்டைக் கிழிய பேசுவதல்ல!

No comments:

Post a Comment