ஏன் இந்தத் தயக்கம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!
பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாயிரம் ஏக்கர் நில விவகாரம் பற்றி வருகின்ற செய்திகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை.
ஒரு சிறிய குழுவினர் அரசாங்கத்திற்கே சவால் விடுகின்றனர் என்று நினைக்கும் போது அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது! அந்த அளவுக்கு அவர்கள் பெரிய மனிதர்களா? அனைவரும் முன்னாள் ம.இ.கா.வினர். ம.இ.கா. வினர் என்றாலே நமக்குத் தெரியும். பெரும்பாலும் இந்திய மக்களிடமிருந்து நிறைய சாபத்தை விலைக்கு வாங்கியவர்கள்! இவர்கள் வாங்கிய சாபங்களுக்கு முடிவே இல்லை! இன்னும் வாங்கிக் கொண்டே இருக்கிறார்களே அது தான் வலியைத் தருகிறது. அந்த அளவுக்கு அவர்களின் மனம் மரத்துப் போய்விட்டதா! சாபங்கள் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்கிறார்கள். முதல் தலைமுறையிலேயே நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்!
இருக்கட்டும். இப்போது சிவநேசன் குழுவினர் எதற்கு யாருக்குப் பயப்படுகிறார்கள் என்பது தான் நமக்குப் புரியவில்லை. பதவியில் இல்லாதவன் பகமையைக் காட்டுகிறான்! அந்த அளவுக்கு அவனுக்கு என்ன செல்வாக்கு?
நமக்கு, என்ன நடக்கிறது என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை. இந்த அளவுக்கு சிவநேசன் விட்டுக் கொடுக்கிறார் என்றால் ஏமாற்றுக்காரன் மிகவும் பலசாலியாகத் தெரிகிறான்! பொதுவாக திருடர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள பல வழிகளை வைத்திருப்பார்கள். ஏதோ ஒன்று இவர்கள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என்றே தோன்றுகிறது.
வெளியே இருந்து பார்க்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ஏன் இவர்கள் மேல் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இன்னும் பிரச்சனையைக் கொண்டு போகாமல் இருக்கிறார்கள் என்னும் சந்தேகம் தான். ஊழல் தடுப்பு ஆணையம் தான் இவர்கள் மேல் சரியான நடவடிக்கை எடுக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக சிவநேசன் அறிவித்திருக்கிறார். இந்த நில விவகாரம் மட்டும் அல்ல இவர்கள் மேல் இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. காரணம் இவர்கள் மா.இ.கா.வினர். அது ஒன்றே போதும். இவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பது இந்த உலகமே அறியும்! அவர்களின் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் வெளிக் கொணர வேண்டும்.
ஒரு சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய - பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்க வேண்டிய - உதவிகளைத் தடுத்து நிறுத்தும் இந்தச் சமூகத் துரோகிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
இவர்கள் சமூகத் துரோகிகள். எந்தவொரு தயவு தாட்சண்யம் பார்க்காமல் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயக்கம் வேண்டாம்! உங்கள் பின்னாள் இந்தச் சமுதாயம் நிற்கிறது என்பதை மறக்க வேண்டாம்!
No comments:
Post a Comment