Saturday 9 February 2019

பதாகையில் தமிழ்க் கொலை!

சீனர்கள்,  அவர்கள் பயன்படுத்தும் பதாகைகளில் சீன மொழிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது நாம் அறிந்தது தான். அவர்கள் மொழியை அவர்கள் பின் தள்ளமாட்டார்கள்.

நமக்கு அது போன்ற பிரச்சனைகளெல்லாம் இல்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை என்பது தான் முக்கியம். அதனால் தான் நாம் பல இடங்களில் நமது மொழியை இழக்கிறோம். அதைப் பற்றி ஓரிரு முறை பேசுவோம் பின்னர் சகஜ நிலைக்கு வந்து விடுவோம்! நம்மிடையே மலையாளிகள், தெலுங்கர்கள், சீக்கியர்கள் என்று பல பிரிவினர்கள் உண்டு என்றாலும் அவர்களுக்குத் தேவையானால் மட்டும் அவர்கள் தமிழைப் பயன்படுத்துவார்கள் - ஏதோ தேவை கருதி - இல்லாவிட்டால் பயன்படுத்த மாட்டார்கள்.

சீனர்கள்,  வாழ்த்துகள் - குறிப்பாக சீனப் புத்தாண்டு வாழ்த்துகள் - தங்களது பதாகைகளில் வெளியிடுவது என்பது எப்போதும் உண்டு. ஆனால் அவர்கள் தமிழ் அறிந்தவர்களிடம் கேட்டு பிழையற்ற தமிழை எழுத வேண்டும் என்பதை அறியாதவர்கள். அதனால் தான் அவர்களின் பதாகைகளில் பிழையுள்ள தமிழையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்போது ஒரு புதிய நடைமுறையை நாம் காண்கிறோம். மொழிபெயர்ப்பு என்றால் உடனே கூகலுகுப் போ என்கிற நிலை ஏற்பாட்டுவிட்டது! கூகலின் மொழிபெயர்ப்பு  எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அதனை நாம் ஒரு மொழிபெயர்ப்பாக ஏற்றுக் கொண்டோம் என்பதால் தான் இப்போது பலர் அந்த மொழிபெயர்ப்பை தேடி படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இது பெரிய சோகம்!

நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்று தான். அந்த மொழி பெயர்ப்பு தரமாக இல்லை என்பதை நாம் கூகலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது எப்படி என்பது நமக்குப் புரியவில்லை.  தெரிந்தவர்கள் அந்த முயற்சியை எடுக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை மலாக்கா முத்துகிருஷ்ணன் தான் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார், அவரால் முடியும் என்று நினைக்கிறேன்.  மற்றபடி யாரையும் சொல்ல முடியவில்லை.

பதாகைகளில் தமிழ்க் கொலை என்றால் கூகலில் தமிழ்க்கொலை என்று அர்த்தம். விபரம் தெரிந்தவர்கள் முயற்சி எடுக்கட்டும். வரவேற்கிறோம்!

No comments:

Post a Comment