Tuesday 12 February 2019

அரசாங்கப் பணியாளர்களுக்கு பணி தான் முக்கியம்...!

மலேசியப் பிரதமர், டாக்டர் மகாதிர், தனது  அமைச்சின் மாதாதிந்திர கூட்டத்தில் அரசாங்கப் பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தினைக் கூறியிருக்கிறார்.

அரசாங்கப் பணியாளர்கள் தங்களது பணிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர நாட்டின் தலைவர்களுக்கோ, நாட்டை ஆளும் கட்சிக்கோ பணிய வேண்டும் என்னும் அவசியம் அல்ல.

அரசு ஊழியர்கள் அவர்கள் செய்கின்ற வேலை மக்கள் பணத்தில் தான் செய்யப்படுகின்ற தேவிர அவர்களுக்கான பணம் வேறு எங்கிருந்தும் வருவதில்லை.

இன்று அரசாங்க அலுவலகங்களில் பணி புரிபவர்கள் கடந்த கால அரசாங்கத்துடனான உறவுகளையோ அல்லது முன்னாள் பிரதமருடனான உறவையோ அல்லது அவரின் அமைச்சர்களின் உறவையோ  இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது.

அரசுப் பணியாளர்கள் சிந்திக்க வேண்டியது ஒன்று தான். அரசாங்கம் மாறும். அமைச்சர்கள் மாறுவர்.  பிரதமர் மாறுவார்.  ஆனால் அரசாங்கப் பணியாளர்கள் மாறப் போவதில்லை.  மக்கள் மாறப் போவதில்லை. அதனால் அரசுப் பணியாளர்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் எந்தச் சுணக்கமும் ஏற்படக்கூடாது என்பது முக்கியம்.

இதற்கு முன்பு - முந்தைய அரசாங்கத்தில் நடந்தது என்ன? அரசாங்கப் பணியாளர்கள் எப்படி பணி புரிந்தனர்?  பெருமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அரசாங்க மாற்றத்திற்கு அவர்களும் ஒரு காரணம்! அது தான் உண்மை!  அரசாங்க அலுவலகங்களில் இலஞ்சம், ஊழல் எல்லாம் மக்களுக்கு மிகவும் பரிச்சையமாகப் போய்விட்டது! சோம்பேறித்தனத்தின் மொத்த உருவமாக அரசு அலுவலகங்கள் செயல்பட்டதை நாம் பார்த்தோம்!

அப்போது அது சோம்பேறித்தனம்! இப்போது அதே பாணி ஆனால் அரசாங்கத்தை எதிர்ப்பதாக மாறிவிட்டது! அதனால் வேலையில் இன்னும் சுணக்கம். மக்களுடனான உறவுகள் சுமூகமாக இல்லை! இப்போது அது முன்னாள் அரசாங்கத்திற்கு ஆதரவு என்னும் நிலைக்குப் போய்விட்டது!

அரசாங்கப் பணியாளர்கள் தங்களது கடமைகளைச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் இருக்கிறார் என்பது பற்றி கவலைப்படாமல் நமது வேலை என்ன, அதை மட்டும் செய்வோம் என்கிற நாணயம் இருக்க வேண்டும்!

பணியைப் புறக்கணித்தால் நீங்களும் புறக்கணிக்கப் படுவிர்கள்! நம்புக!

No comments:

Post a Comment