நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்ல என்பது உண்மை தான்.
விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லி 12 பேர் கைது செய்யப்பட்ட விவாகாரத்தை நம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான்.
நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் அவரது நாட்டுக்கே அனுப்பப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக இப்படி தமிழர்களைப் பழி வாங்குவதா என்று நினைக்கும் போது அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர் நமது பிரதமரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அதுவும் தெரிகிறது. ஆனாலும் எதுவும்செய்ய முடியவில்லை!
சொஸ்மா சட்டம் ரத்து செய்யப்படும் என்பது தேர்தல் வாக்குறுதி. அதுவும் காற்றில் பறக்கப்பட்டு விட்டது! இப்போது அந்த சட்டத்தை வைத்தே கைது செய்வது என்பது அதிகாரம் எப்படியெல்லாம் தவறாக செயல்படுகிறது என்பதெல்லாம் நமக்குப் புரிகிறது.
ஜாகிர் நாயக் ஒரு தீவிரவாதி என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தாங்கும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்களை மகிழ்ச்சிப்படுத்த தமிழர்களைத் தீவிரவாதிகள் என்பதாக முத்திரைக் குத்தப்படுகின்றது. இது உலக அரங்கில் தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பதாக ஓர் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரிகிறது.
சமீபத்திய இந்திய செய்திகளின் படி பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்ட 127 பேர் ஐ.எஸ். அனுதாபிகள். இவர்கள் அனைவருமே ஜாகிர் நாயக்கின் அவரது உரைகளால், அவரது காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்கிறது அந்த செய்தி. இங்கும், நமது நாட்டிலும், ஏற்கனவே அது நடந்திருக்கிறது. இனி மேலும் அது நடக்கலாம்.
ஆனாலும் ஜாகிர் நாயக் இந்த நாட்டுக்குத் தேவையானவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வருங்காலம் தான் யார் சரி, யார் தவறு என்று சொல்லும்.
இதுவரை நடந்தவை அதிகாரத் துஷ்பிரயோகம். அதைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
No comments:
Post a Comment