கேள்வி
இந்திய பிரதமர் மோடி ச்மீப காலமாக தமிழைப் பற்றி உயர்வாகப் பேசுகிறாரே!
பதில்
மோடி, இந்தியாவின் பிரதமர். அவர் குள்ள நரி தந்திரம் கொண்ட அரசியல்வாதி. தனது கட்சி தமிழ் நாட்டில் காலூன்ற முடியவில்லையே என்கிற ஏக்கம் அவருக்கு உண்டு. ஊன்றவும் முடியாது என்று உறுதியாகவும் தெரிகிறது.
அதனால் தமிழக பா.ஜ. க. வினரின் ஆலோசனைக் கேட்ப கொஞ்சம் அதிகமகாவே தமிழைப் பற்றி எடுத்து விடுகிறார்!
ஒரு பக்கம் தமிழின் உயர்வைப் பற்றி பேசுவதும் இன்னொரு பக்கம் தமிழை அழிக்கின்ற வேலை செய்வதும், இந்தி, சமஸ்கிருதம் படிக்க கோடிக்கணக்கில் பண ஒதுக்கீடு செய்வதும் - இவைகள் எல்லாம் அவர் செய்து வருகின்ற ஏமாற்று வேலைகள்!
தமிழை மட்டும் அழிக்கும் முயற்சியில் அவர் இறங்கவில்லை, தமிழ் நாட்டையும் அழிக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். தமிழ் அடையாளங்களை அழிக்கிறார். தமிழர் அடையாளங்களை அழிக்கிறார். இவரால் தமிழ் நாட்டுக்கு, தமிழருக்கு, தமிழ் மொழிக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. அதிகம் கெடுதலே நடந்து கொண்டு வருகிறது. அவர் செய்வதெல்லாம் நாடகமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!
இந்தி திணிப்பு, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு இவை அனைத்தும் தமிழர்களை அழிக்கும் ,முயற்சிகள். இன்று தமிழகம், தமிழர் அல்லாத, மேட்டுக்குடி மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. இவர்களுக்குத் தமிழர்கள் மேல் அல்லது தமிழர் நாட்டின் மேல் எந்த வித பற்றும் பசமும் இல்லாதவர்கள். தமிழன் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று யோசிப்பவர்கள்!
இந்த உயர்குடி மக்களின் ஆலோசனையைக் கேட்டுத் தான் பிரதமர் மோடி இயங்கிக் கொண்டிருக்கிறார்.
த்மிழின் தொன்மையைப் பற்றி பேசுபவர் இன்று தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களைக் கொண்டு வந்தவர் யார்? நீட் தெர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்தி வேண்டாம் என்கிறார்கள். சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்கிறார்கள்.ஆனால் இவை அனைத்தையும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.
ஒரு பக்கம் தமிழர் ஒழிப்பு வேலை. இன்னொரு பக்கம் தமிழின் பெருமை பேசுதல் என்பதெல்லாம் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள்.
பிரதமர் மோடி த்மிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை!
No comments:
Post a Comment