சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் வெளிநாடு வாழும் தமிழர் ஒருவர் அறிமுகமாயிருக்கிறார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் செனூரன் முத்துசாமி தான் அவர். வயது 25 ஆகிறது. டெர்பன் நகரில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் நாகப்பட்டிணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பல தலைமுறைகளாக தென் ஆப்பிரிக்காவில் வாழும் அவர் குடும்பத்தில் இன்னும் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் செனூரனுக்கு தமிழ் அந்நிய மொழியாகிவிட்டாலும் இப்போது தான் தமிழைக் கற்க ஆர்வம் காட்டி வருகிறார். கோயிலுக்குப் போகிற பழக்கமும் உண்டு என்கிறார்.
இந்தியா, விசாகப்பட்டணத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணியில் இவரும் களம் இறங்குகிறார்.
அவரது நாட்டின் சார்பில் அவர் களமிறங்குவது நமக்கும் மகிழ்ச்சியே. அவர் பல வெற்றிகளைப் பெற நாமும் வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment