ஒன்று தெரிந்துவிட்டது! இவர் எதற்கும் அசைகிற ஆளில்லை! அதைத்தான் கள நிலவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன!
நமது பிரதமரைப் பற்றி தான் பேசுகிறேன். என்னன்னவோ சொன்னார்கள். என்னன்னவோ பேசினார்கள். என்னன்னவோ எழுதினார்கள். ஆனாலும் ஆடாமல், அசையாமல் அப்படியே தான் இருக்கிறார்! எதற்கும் அசைபவராகத் தெரியவில்லை! அவரைப் பற்றி எழுதியவர்கள் தான் அசந்து போனார்கள்!
அவர் மீது சொல்லப்பட்ட குறைபாடுகள், அவதூறுகள் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றன! நாட்டிலும் எதுவும் அசையவில்லை. அப்படியே தான் இருக்கின்றன.
ஆனாலும், அவரும் அப்படியே தான் இருக்கின்றார்! எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே!
ஒருவன் போனால் இன்னொருவன் வந்து விடுகிறான்! இரண்டு குறைவா இதோ இப்போது இரண்டு வந்துவிட்டது! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள்! கோடிக்கணக்கான பணம் கைம்மாறுகிறது.
அரசியலுக்கு ஏதோ பெரிய கோட்பாட்டுடன் வருகிறார்கள். பின்னர் பார்த்தால் பணம் தான் ஆகப்பெரும் கோட்பாடு!
சே! இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே கோபம் தான் வருகிறது. இப்போதே தேர்தலை நடந்துதுங்கள் என்று சொல்ல மாட்டேன். பிரதமருக்கான வாய்ப்பு உங்களுக்கு வந்துவிட்டது. உங்களுடைய சேவைகளை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து ஆக்ககரமாகச் செயல்படுங்கள். அதைத்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன்.
எப்படியோ இந்த நாட்டு மக்கள் உங்களைப் பிரதமராக ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் இப்போது யாருக்கும் கவலையில்லை! நடக்கக்கூடாதது நடந்துவிட்டது! வேறு வழி இல்லாமல் நீங்கள் தான் எங்கள் பிரதமர்!
இப்போதைய தேவையெல்லாம் நீங்கள் நாட்டின் நலனைச் சிந்தியுங்கள். இந்நாட்டுப் பிரதமராக நடந்து கொள்ளுங்கள். அதுவே எங்களது வேண்டுகோள்.
No comments:
Post a Comment