அறிஞர் அண்ணாவைப் பற்றியான செய்திகள் வரும் போது இன்னும் தமிழன் ஏமாளியாகவே இருக்கிறானே என்கிற எண்ணம் தான் வருகிறது!
அண்ணா முதன் முதலாக நாடாளுமன்றத்தில் பேசும் போது தன்னை "திராவிடன்" என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்! தமிழ் நாட்டிலிருந்து தமிழகப் பிரதிநிதியாக அங்குப் போன அவர் தன்னைத் தமிழன் என்று சொல்லவில்லை!
இன்று சட்டமன்றத்தில் அதனையே தான் சொன்னார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தமிழர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர் தமிழனில்லை! திராவிடன் என்றார்!
தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி பேசி "தமிழர் முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் கட்சி ஆரம்பிப்பதாக முடிவெடுத்தனர். ஏகமனதாக அனைவரும், அண்ணா உட்பட, ஏற்றுக் கொண்டனர். ஆனால் அடுத்த நாள் "திராவிட முன்னேற்றக் கழகம்" என்கிற பெயரில் அண்ணா அதனை மாற்றியமைத்து விட்டார்! அதனால் தமிழறிஞர்கள் பலர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் துரோகத்தை செய்தவர் அண்ணா!
அண்ணா தமிழ்ச் சொற்களை வைத்து சித்து விளையாட்டு விளையாடியவர்! அதனை நாம் ரசித்தோம்! அத்தோடு நாம் நிறுத்திக் கொள்ளவில்லை! அவர் தான் அறிஞர் என்று காலில் விழுந்தோம்!
தமிழ் மொழிக்காக பெரும்பாடுபட்டவர் என்பது பொய். இன்று அவர் வழி வந்தவர்கள் ஆங்கிலத்தை வளர்த்தனர் தமிழை அழித்துவிட்டனர். இன்று தமிழ் நாட்டில் தமிழ் இல்லாமல் ஆங்கில மூலமே கல்வி கற்று அமெரிக்கா போகலாம், ஆப்பிரிக்கா போகலாம்! இந்தியாவிலும் பெரும் பதவிகளிலும் அமரலாம்! மற்ற எந்த மாநிலங்களிலும் இந்த நிலை இல்லை. தாய் மொழி வழியாகத்தான் அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன! இந்த மொழி மாற்றத்திற்கு மூலம் அண்ணா!
அறிஞர் அண்ணாவோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ அனைவரும் தமிழுக்குக் கேடு விளைவித்தனர். ஸ்டாலின் தொடருகிறார்.
தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் தமிழர்களில் பலர் உள்ளனர். ஆனால் ஏனோ நம் தமிழினம் மீண்டும் மீண்டும் தமிழுக்கு, தமிழருக்குத் துரோகம் செய்தவர்களையே முன்னிலைப்படுத்துகிறோம்! இன்னும் அந்த மாயையிலிருந்து நாம் மீளவில்லை!
மீண்டும்! மீண்டும்! மீண்டுமா! இந்த திராவிடத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் வேலையை ஏன் நாம் செய்ய வேண்டும்? நாம் தமிழராகவே வாழ்வோம்!
No comments:
Post a Comment