திரையரங்குகள் திறக்கப்படுகின்றன! இன்னும் ஓரிரு நாட்களில் 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் திரையரங்குகள் திறக்கப்படவிருக்கின்றன!
திரையரங்குகளில் தான் படம் பார்ப்பேன் என அடம் பிடிப்பவர்களுக்கு இது நல்ல செய்தி என்பதில் ஐயமில்லை. அவர்களைக் கேட்டால் "அப்படி பார்ப்பதில் தான் நமக்குக் குஷி!" என்பார்கள்.
குறை சொல்ல ஒன்றுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதில் அனைவருக்கும் சந்தோஷம் தான். அந்த சந்தோஷம் எப்போதும் கிடைப்பதில்லை. இப்படி திரையரங்களுக்குப் போகும் போது தான் கிடைக்கிறது. அதை எப்படி தவறவிட முடியும்?
அதுவும் இந்த கோவிட்-19 காலத்தில் எல்லாவற்றுக்குமே தடை!தடை! தடை! இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியுமா? சான்ஸ்ஸே இல்லை!
ஆனாலும் இந்த நேரத்தில் ஒரு சில வார்த்தைகளைக் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள். கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக முக்கியம். அந்த தடுப்பூசி உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும். அது சரியோ தவறோ, அது சரி என்று தான் உலக சுகாதார நிறுவனமே சொல்லுகிறது. அதுவும் நீங்கள் போகும் திரையரங்குகள் என்பது கூட்டங்கள் கூடுகின்ற இடம்.
தடுப்பூசி போட்டவர்கள் தான் திரையரங்குகளுக்குச் செல்ல வேண்டும் என்பது அரசாங்க விதி. அதைத் திரையரங்குகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைத் திரையரங்குகள் செய்திருக்கும் என நம்பலாம். அப்படி அவர்கள் தவறினால் அவர்களுக்கும் அதனால் ஆபத்து வரும் என்பது உறுதி! ஆனாலும் சில மாதங்களாக வருமானமின்றி தவிக்கும் அவர்களுக்கு ஏனோ தானோ போக்கு வேண்டாம் என்பதே நமது அறிவுரை.
திரை அரங்குகள் திறப்பது நல்ல செய்தி தான். ஆனாலும் பலர் கூட்டம் கூடுகின்ற இடத்தில் ஆபத்தும் வரலாம். நமது உடல் நலத்தை நாம் அலட்சியம் செய்துவிடவும் முடியாது.
அதனால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புக் கொடுங்கள். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் குடும்பம் உங்களை நம்பி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முடிந்தால் தள்ளிப் போடுங்கள். அதுவே நமது அறிவுரை!
No comments:
Post a Comment