குழந்தைகளைப் பார்த்தாலே போதும்! அவர்களிடம் உள்ள துள்ளல், துடிப்பு நமக்கும் வந்துவிடும்! குழந்தைகளின் உலகம் தனி உலகம்!
சமீபகால திரைப்படம் ஒன்றில் ஒரு வசனம்: குழந்தைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுவார்கள்! என்பதாக வரும். மிக மிக உண்மை!
அதே போல குழந்தைகள் அவர்களைச் சுற்றி பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துத் தான் அவர்களின் குணாதிசயங்கள் அமைகின்றன.
மேலே படத்தில் உள்ள சிறுமி பெரியவர்களைப் பார்த்து, பெற்றோர்களைப் பார்த்து அ வர்கள் செய்த அதே காரியத்தை அவளும் செய்கிறாள். கோவிட்-19 காலத்தில் எந்த ஒரு வளாகத்திற்குள் போனாலும் போகும் முன் நமது உடல் தட்ப வெப்ப நிலையைப் பரிசோதித்துவிட்டுத் தான் போகிறோம்.
அதைத்தான் அந்தக் குழந்தையும் செய்கிறாள்! யாரும் சொல்லவில்லை. யாருடைய பதிலுக்கும் அவள் காத்திருக்கவில்லை! யாரிடமும் அவள் கேட்கவில்லை! நேரே சோதிப்பவரிடம் சென்று அவள் தன்னை சோதித்துக் கொள்கிறாள்! அது போதாது, தான் கையில் வைத்திருக்கும் பொம்மையையும் சோதித்துக் கொள்கிறாள்! அந்தப் பணியாளரும் பணிந்து, குனிந்து சோதனை செய்கிறார்!
சிறு குழந்தை தான். பொறுப்போடு தனது காரியத்தைச் செய்கிறாள். உண்மையில் பெரியவர்களுக்கு அது ஒரு பாடம். நமக்கு எல்லாமே அலட்சியம் தான். சட்டத்தை மீறுவதில் ஒரு சந்தோஷம்.
பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள். சரியான வளர்ப்பு சரியான குடிமகன்களை உருவாக்குகிறது.
சரிம்மா! தட்ப வெப்பம் உனக்கும் உன் பொம்மைக்கும் சரியா இருக்கு! உள்ளே போங்கோ!
No comments:
Post a Comment