Thursday 17 February 2022

இஸ்லாமிய போதகர்ளுக்கும் சட்டம் உண்டு!

 

                                        நன்றி:     தமிழ் மலர்

அரசு சார்பற்ற அறுபதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் அரசாங்கத்திற்குச்  சரியானதொரு  கோரிக்கையை, சரியான நேரத்தில் விடுத்திருக்கின்றன.

ஆமாம்! இஸ்லாமிய போதகர்களுக்கும் சட்டம் உண்டு. சட்டத்தை மதிக்கின்ற அவசியமும் உண்டு.

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். போதகர்களுக்கென்று தனியாக எந்த சட்டமும் இல்லை. எத்தனையோ போதகர்கள் தாங்கள் செய்கின்ற தவறுகளுக்காக  சிறைத்தண்டனை அனுபவத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சட்டம் அவர்களின் சார்பாக இருக்கிறதா அல்லது சட்டத்தை அவர்களின் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்களா என்று ஐயுற வேண்டியிருக்கிறது.

நமது நாட்டில் மதச் சுதந்திரம் இருக்கிறது. மதச் சுதந்திரம் என்பது நமக்குப் புதிதல்ல. இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ, புத்த மதமோ, இஸ்லாமிய மதமோ எந்தவொரு மதமும் நாட்டுக்கும் புதிதல்ல. எல்லாமே நமக்கு அந்நியோன்மையான மதங்கள் தான்.

இன்று குறிப்பிட்ட சில இஸ்லாமிய போதகர்களை எடுத்துக் கொண்டால் இந்தியர்களுக்கு/இந்துக்களுக்கு எதிரான வன்மத்தை வளர்த்துக்  கொண்டிருக்கின்றனர். சட்டத்தை மீறுகின்றனர். 

நம்முடைய கேள்விகள் எல்லாம் போதகர்களே சட்டத்தை மீறினால் எப்படி? போதகர்களே பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டால் எப்படி? போதகர்களே குழந்தைகளிடம் போய் மதத்தின் அருமை பெருமைகளைப் பறைசாற்றினால் எப்படி?

எல்லா  மதங்களிலும், ஒவ்வொரு மதத்திலும், நேற்று முளைத்த மதத்திலும் அந்த மதத்தைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மேடைகளிலே நின்று கொண்டு "நீங்கள் தாழ்ந்தவர்கள்! உங்கள் மதம் தாழ்ந்த மதம்! நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்!"  என்று எந்த மதத்தினரும் பேசுவதில்லை! இப்படித்தான் இஸ்லாமிய போதகர்கள் இந்துக்களை நோக்கி கல் எறிகிறார்கள்! இது தொடர்ந்தாற்போல நடப்பது தான் நமக்கும் ஆவேசத்தை ஏறபடுத்துகிறது.

போதகர்களே! உங்களுக்குள்ள சுதந்திரம் எங்களுக்கும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாங்கள்  நாடக மேடை கலைஞர்கள் அல்ல! மதம் பற்றி பேசுவதை நான்கு சுவர்களுக்குள்ளே  வைத்துக் கொள்வதையே மாண்பு என நம்புகிறோம். 

எந்த மதமும் மற்ற மதத்தினரை அவமதியுங்கள் என்று  கற்பிப்பதில்லை. எங்கள் மதமும் அப்படி கற்பிக்கவில்லை. நாங்கள் அமைதியையும் அன்பையும் போதிக்கின்ற மதத்தைச் சார்ந்தவர்கள். அப்படியே நாங்கள் இருக்க விரும்புகிறோம். அமைதியை விட்டு அமைதியின்மையை நாங்கள் தேடிப்போகத்  தேவையில்லை.

சமயப் போதகர்களுக்கும் சட்டம் உண்டு. அதை மதிக்கும் தேவையும் உண்டு. அரசாங்கத்திற்கும் பொறுப்புணர்வு உண்டு! பொறுப்போடு நடந்து கொள்ளும் தேவையும் உண்டு!

பந்து பிரதமரின் கையில்!

No comments:

Post a Comment