Sunday 20 February 2022

மித்ராவில் முறைகேடுகள்!

            Melaka Businessman, Datuk B.Reghu, Director of  QCDMS Eraminda Consultants

மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட "மித்ரா" அமைப்பு சமீப காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தது. குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்கள் எதிர்கட்சியினர்.  

சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் ம.இ.கா. வினர் என்பதால் ம.இ.கா.வினர் குரல் எழுப்ப மாட்டார்கள் என்பது நமது கணிப்பு. அதனாலேயே அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்பது நமது ஆழமான நம்பிக்கை.

ஆனாலும் ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுவே பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாராட்டுகிறோம்!

மித்ரா ஊழலில் முதல் பெயராக வருபவர் - நடவடிக்கை எடுக்கப்பட்டவரின் பெயர் ரகு, வயது 61,  மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மீது உள்ள குற்றச்சாட்டு  மித்ரா நிறுவனத்தை போலி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றினார் என்பதாகும்.   ரி.ம. 6,25,625.00  வெள்ளியை  அந்த நிறுவனத்திடமிருந்து அவர் பெற்றிருக்கிறார். இந்த வழக்கு முடியும்வரை, ஒவ்வொரு மாதமும், ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்று  அவர் தன்னைப் பதிவு செய்ய  வேண்டுமென்று  பணிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கினைத் தொடர்ந்து இன்னும் பல வழக்குகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இன்னொரு வழக்கும் இதே நாளில்  ஈப்போ நீதிமன்றத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக நமக்குத் தொழில் செய்பவர்கள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நான் பொதுவாக இந்தியர்கள், அதுவும் குறிப்பாக தமிழர்கள்,  தொழில் செய்வதை ஆதரிப்பவன்.

காரணம் தொழில் என்பது  ஒரு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும். ஒரு சிறிய தொழில் எந்த அளவுக்கு ஒருவரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதை  என்னைச் சுற்றிலுள்ளவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

அது சிறிய தொழிலோ பெரிய தொழிலோ, எந்த தொழிலாக இருந்தாலும் சரி, நிச்சயம் அந்தத் தொழில் உங்களை உயர்த்தும். ஆனால் தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களை ஏமாற்றி  தொழிலில் உயர வேண்டும் என்று நினைத்தால் , மன்னிக்கவும், அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிலும் குறிப்பாக மித்ரா அமைப்பு என்பது தொழில் செய்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே  அவர்களின் குறிக்கோள். ஏற்கனவே செடிக் என்கிற அமைப்பும் இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தது போன்று  எதுவும் நடக்கவில்லை. அந்த காலத்தில்  ம.இ.கா.தலைவர் சாமிவேலு என்ன செய்தாரோ அது தான் தொடர்கிறதே தவிர எந்த ஒரு மாற்றத்தையும் இந்த சமதாயத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.

அதற்குக் காரணம் ரகு போன்றவர்கள் தான். தனது நிறுவன வளர்ச்சிக்கு அவர்  சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  யாரும் குறை சொல்ல இயலாது. நிறுவன வளர்ச்சிக்கு நாம் வங்கியைத் தான் நாட வேண்டியுள்ளது. அது சரியான பாதை.

மித்ராவை நம்பி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதை காட்டுங்கள். வழி விடுங்கள்.   கற்பாறையாய் இருந்து கொண்டு தடைக்கல்லாய் இருக்காதீர்கள்!

முறைகேடுகளுக்கு முறைகேடுகள் தான் தண்டனை!

No comments:

Post a Comment