Tuesday 22 February 2022

ஐயோ! வேண்டாமே!

                    


                                  Dr.Nelson Murugan. Founder, Our Malaysian Indian Association

டாக்டர் நெல்சன் முருகன் நமது நாட்டு பெண்களுக்கு நல்லதொரு புத்திமதியைக் கூறியிருக்கிறார்.

பாராட்டுகிறேன்! இதற்கு முன்பு கூட ஒருமுறை இது போன்ற செய்தியை நானே வெளியிட்டிருக்கிறேன்.

மலேசியப் பெண்களில்  அதிகமாக ஏமாறுபவர்கள் இந்தியப் பெண்கள் தான். அதென்ன இந்தியப் பெண்கள்? இது போன்ற குட்டிச்சுவரான காரியங்களுக்குப் பேர்போனவர்கள் நமது தமிழ்ப் பெண்கள் தான்.!  அறிவும் இல்லை; தெளிவும் இல்லை!

வங்காளத்தேசிகளைத்  திருமணம் செய்வதே பெரிய தவறு. அதனைக் கூட  மன்னித்துவிடலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.  ஆனாலும் இவைகளையெல்லா மீறி அவர்கள், அவர்களது  ஊர் பக்கம்  போகலாம் என்று நினைக்கிறார்களே  அது  மாபெரும் தவறு! சும்மா போய் வருகிறோம் என்பதே தவறு! கனவில் கூட அது போன்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது அறிவுரை!

இந்த நாட்டில் அவர்கள் இந்தியப் பெண்களைத் திருமணம்  செய்வதன் நோக்கமே வேறு. முதலில் அவர்கள் இந்த நாட்டில் நிரந்தரமாக தங்கிவிட வேண்டும். அது தான் அவர்களது நோக்கம்.  தங்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் எதனையும் செய்யத் தயார்!  

நாம் ஏன் அவர்களை வங்காளத்தேசத்திற்குப் போக வேண்டாமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் அங்குத் தரை இறங்கியதுமே காணாமல் போய் விடுவீர்கள்! காணாமலடித்து விடுவார்கள்! அதன் பின்னர்  உங்களுக்கான இடம்  என்பது சிவப்பு விளக்குப் பகுதிகள் தான்.

நீங்கள் குழந்தைகளோடு போனால், உங்கள் கணவரின் குடும்பத்தினர்,  குழந்தைகளைப் பிடிங்கிக் கொண்டு உங்களை விரட்டிவிடுவார்கள். கையில் உங்களிடம் கடப்பிதழ் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதனையும் அவர்கள் பிடிங்கிக் கொண்டால் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டிவரும்!

வங்காளதேச மக்கள் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களுக்கென்று சில கொள்கைகள் உண்டு.  கலாச்சாரம், பணபாடுகள் உண்டு.  அயலாரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிராமப்புற கலாச்சாரம் என்பது நாம் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை.  ஏன்? தமிழ் நாட்டிலும் அதே நிலை தான்! ஒரு மொழி பேசுபவர்களே நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வேற்று மொழி பேசுபவர்களின் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு நாம் மேலோட்டமாகத் தான் பேசுகிறோம். ஆழமாக அலசவில்லை. புரிந்து கொண்டால் போதும் என்பது தான் நோக்கம்.

நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை எங்களால் எதிர்க்க முடியாது. அதற்கு உங்களிடம் நல்ல காரணங்கள் இருக்கலாம். முடிந்தவரை உங்களைப் பிரிந்து ஓடிவிடாதாவாறு  உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  அது தான் முக்கியம்.

எல்லாக் காலங்களிலும் நாம் ஏமாந்து கொண்டே இருப்போம்  என்று நாம் யாரிடமும் சத்தியம் செய்து கொடுக்கவில்லை!! யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.  கௌரவமாக நடந்து கொள்ளுங்கள். அஞ்சடித்தனம் வேண்டாம்!

கடைசியாக வங்காள தேசம் போவதை கனவிலும் நினைக்கவேண்டாம்.  பாக்கிஸ்தானுக்கும் அதே அறிவுரை தான். இரண்டுமே ஒரே குட்டை! ஒரே மட்டை! 

No comments:

Post a Comment