ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஒரு முக்கியமான முகம் களத்தில் இறங்கவில்லை என்பது ஆச்சரியம் தான்!
ஆம், அவர் தான் மூடா கட்சியின் தலைவர் சையிட் சாடிக்!
ஒரு வகையில் அவரது பெருந்தன்மையை நாம் பாராட்டுகிறோம். ஆமாம் அவர் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து தனது நாடாளுமன்ற தொகுதியை மட்டும் கவனம் செலுத்தவதில் அக்கறைக் காட்டுகிறார் என்பதாக எடுத்து கொள்ளலாம்.
தவறில்லை! மாநிலத் தேர்தலில் தம்பிகள் மாநிலத்தில் மட்டும் அக்கறை செலுத்தட்டும் தான் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்துவது தான் சரியாக இருக்கும் என்று அவர் நினைப்பதில் தவறில்லையே!
இன்னொரு பக்கம் பார்த்தால் தலைவர் நமது மாநில சட்டமன்றத்தில் போட்டி இடவில்லையே என்கிற ஏக்கம் ஒரு பக்கம் வேட்பாளர்களுக்கு இருக்கத்தான் செய்யும். காரணம் இது முதல் தேர்தல். மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இளைஞர்கள் மனநிலை புரியவில்லை. தலைவர் மாநிலத்தில் போட்டியிட்டால் இளைஞர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தலைவர் போட்டியிடுவது கட்சியினருக்கு, இளைஞர் தலைவர்களுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்று நினைப்பது சரியாகத்தானே இருக்கும்.
நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். இளைஞர்களின் புதிய உத்வேகம் அவரது பெயரைச் சொன்னால் உண்டு. இது இளைய தலமுறைகளின் காலம். அவர்களைச் சரியான வழியில் நடத்துவதற்கு அவருக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. ஆளுங்கட்சிகளில் உள்ள பெரியவர்கள் எந்த வகையிலும் இளைஞர்களை வழி நடத்த தகுதியற்றுப் போனார்கள்! அங்குள்ள இளைஞர்களும் பெரியவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போக தயாராக இருக்கிறார்களே தவிர நாட்டுக்கு நல்லது செய்ய யாருமே தயாராக இல்லை.
அதனால் தான் சைட் சாடிக் நல்லதொரு இளைஞர் தலைவராக பரிணமிக்கிறார். எல்லாத் தகுதிகளும் அவருக்குண்டு. நேர்மை, நல்ல கல்வித்தரம், உண்மை பேசும் துணிச்சல், நாட்டுப்பற்று, மக்களின் முன்னேற்றம் - இவைகளைச் சிந்திப்பது அவருக்குள்ள நற்குணங்கள். அவரை துக்கி நிறுத்துகின்றன.
ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு இலட்சம் பேர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்களாம். இவர்கள் மெனக்கெட்டு வந்து வாக்களிப்பார்களா அல்லது அஞ்சல் மூலமாவது வாக்களிப்பார்களா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வந்து வாக்களிப்பார்கள் என்றே நினைக்கிறேன். காரணம் அவர்கள் தான் தாங்கள் படுகின்ற பாடுகளை அறிந்து புரிந்தவர்கள். என்ன இருந்தும் இன்னொரு நாட்டில் தானே வேலை செய்கிறார்கள். ஜொகூர் எங்களுக்கு என்ன செய்தது என்கிற கேள்வி அவர்களிடையே எழத்தானே செய்கிறது!
மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் போட்டியிடாதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று: மற்றவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான். அவர் போட்டியிடாவிட்டாலும் அவருடைய தம்பிகள் பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களின் வெற்றியே அவரது வெற்றி!
அவர் போட்டியிடாதது, இந்த நேரத்தில், அவர் எடுத்த முடிவு சரியானதது தான்!
No comments:
Post a Comment