பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பொதுத்தேர்தலுக்கு முதல் நாள், 18-ம் தேதி, விடுமுறை கொடுத்திருப்பது நியாயமானதே.
அதே போல மற்ற மாநிலங்களும் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். வாக்காளர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்த தொகுதிகளில் அல்லது மாநிலங்களில் வேலை செய்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. பெரும்பான்மையோர் வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
இந்த ஒரு நாள் விடுமுறை கொடுக்கும் போது தங்களது ஊர்களுக்கு முதல் நாளே பயணம் செய்து அடுத்த நாள் வாக்களிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கும். விடுமுறை கொடுக்காவிட்டால் இவர்கள் வாக்களிக்க வருவது சாத்தியம் இல்லை. புறக்கணிக்கும் வாய்ப்பும் உண்டு.
ஆனால் அம்னோ கட்சியினர் அதனையே விரும்புகின்றனர். வாக்களிக்க வரவில்ல என்றால் அது அவர்களுக்கு இலாபம் என்று நினைக்கின்றனர். மழை, வெள்ளம் காரணமாக மக்கள் வாக்களிக்க் முடியவில்லை என்றால் அதுவும் அவர்களுக்கு இலாபம். இது போன்ற இலாப நட்டம் கணக்குப் பார்த்துத் தான் அம்னோ இந்தப் பொதுத் தேர்தல் முன்னாதாகவே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கவும் செய்துவிட்டது.
வெகு விரைவில் மற்ற மாநிலங்களும் விடுமுறையை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இது மக்களின் வசதிக்காக என்று அம்னோ நினைத்தால் நல்லது. எல்லாவற்றுக்கும் அரசியலை வைத்து தீர்மானிப்பதும் மக்கள் நலனைப் புறக்கணிப்பதும், மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அம்னோ அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை உண்டோ இல்லையோ பொதுத்தேர்தல் நடந்து தான் ஆக வேண்டும். முடிந்தவர்கள், முடிந்தவரை வாக்களிக்கத் தவற வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். ஏனேனில் தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது இத்தனை ஆண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் மீது உள்ள ஒரு பற்றால், பாசத்தால் நமது வாக்குகளைக் கொடுத்து நாம் ஆதரித்து வந்தோம். ஆனால் இனி மேலும் இப்படிக் குருட்டுத்தனமாக வாக்களிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் 18-ம் தேதி விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பொது மக்களாகிய நாங்களும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் வைக்கிறோம். இது நடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கிறோம்.
வாழ்க மலேசியா! வாழ்க மலேசியர்!
No comments:
Post a Comment