ஊழலுக்கே வாக்களித்து நாம் பழகி விட்டோம். அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய நாட்டின் நிலைமையை எடுத்துக் கொண்டால் கூட மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. விலைவாசி ஏற்றம், வேலை இல்லாத் திண்டாட்டம், இன்னும் பல தொழில் நிறுவனங்கள் இயங்காமல் இருப்பது - இப்படி பல பிரச்சனைகள் நம் முன் இருக்கின்றன. ஏன்? கோழி முட்டைகளுக்குக் கூட முட்டி மோத வேண்டிய நிலை! இது தான் இவர்களது இலட்சணம்!
ஆனால் ஆளும் வர்க்கமோ பட்டம் பதவிக்காக அடித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். இப்போது இறுதிக் கட்டமாக அது பொதுத் தேர்தலில் வந்து நிற்கிறது.
இங்கும் அவர்களது இலஞ்சம் நின்றபாடில்லை. இராணுவ வீரர்களுக்குப் பணம் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கான ஆதாராமும் தன்னிடம் இருப்பதாக அவர் கூறுகிறார்! இப்போதே இலஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வேலையை ஆரம்பித்துவிட்டனர்!
மக்களுக்குத் தொண்டு செய்ய நினைப்பவன் ஏன் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இலஞ்சத்தைக் கொடுத்தாவது பதவிக்கு வர நினைப்பவன் மக்களுக்கு அப்படி என்ன செய்துவிடப் போகிறான் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். தொண்டு செய்து பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலை போய் பணம் கொடுத்தால் பதவிக்கு வரலாம் என்கிற நிலைமையை உருவாக்கியவர்கள் யார்? இவர்கள் தானே!
மக்களே யோசியுங்கள். இந்தியர்கள் வியாபாரத்துறையில் முன்னேறுவதற்கு எத்தனை எத்தனை கோடி பணம் ஒதுக்கப்பட்டும் கடைசியில் எதுவும் ஆகவில்லையே! அந்தப் பணத்தை என்ன செய்தார்கள் என்று எந்த நாதாரியும் பதில் சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே! இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி ஒரு விழுக்காட்டைத் தாண்டவில்லையே!
சரி! சாமிவேலு காலத்தில் அதைச் சாதிக்க முடியவில்லை என்பது உண்மை தான். அதன் பின்னர் வந்தவர்கள் என்ன செய்தார்கள்? கேட்டால் ஒவ்வொருவனும் பெரிய பொருளாதார நிபுணன் மாதிரி பேசுகிறான்! அட! ஒவ்வொரு ஆண்டும் இந்தியரின் முன்னேற்றத்திற்காக பிரதமரிடம் மனு கொடுக்கிறான்! மனு கொடுத்தால் நாம் முன்னேறிவிட முடியுமா? முதலில் மனு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
ஏதோ இவர்களுக்கு இந்தியர்களின் பிரச்சனையே தெரியாதவர்கள் போல - கண்ணைக்கட்டி காட்டில் விட்டவர்கள் போல - நடந்து கொள்வதைப் பார்க்கும் போது திவர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. செய்ய வருபவனுக்கும் ஏன் தடையாய் இருக்க வேண்டும்?
ஊழல்! ஊழல்! ஊழல்! தேசிய முன்னணிக்கு வாக்களிப்பவர்கள் ஊழலுக்கு வாக்களிக்கின்றனர் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஊழலுக்கு வாக்களித்துவிட்டு எந்த மாற்றத்தையும் எதிர்ப்பார்க்காதீர்கள்!
ஊழலற்ற ஓர் அரசாங்கம் அமைய பக்காத்தானுக்கே வாக்களியுங்கள்!
No comments:
Post a Comment