Sunday, 10 November 2024

இனி வாய்ப்பில்லை ராஜா!

                                                                   கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சு இத்தனை ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த பரிட்சை முறைகளை மாற்றி அமைத்துவிட்டது என்று தான்  நாம் நம்ப வேண்டியுள்ளது.

பரிட்சைகளே வேண்டாம் கடைசி ஐந்தாம் பாரம் வரை படித்துக் கொண்டே போங்கள், அது தான் சிறந்த  கல்வி  முறை  என்கிறது கல்வி அமைச்சு.  நாம் 'படி படி'  என்று பிள்ளைகளை வற்புறுத்திப் படிக்க வைக்கும் முறையை காலம் காலமாக கையாண்டு வருகிறோம்.  

இதோ கல்வி அமைச்சர் "இனி பரிட்சைகள் இல்லை"  என்று கல்வி அமைச்சர் அறிவித்துவிட்டார்.  கல்வியாளர்கள் தான் இது போன்ற முடிவுகளுக்கு வருகிறார்கள்.  அதனை வைத்துத்தான் கல்வி அமைச்சும் செயல்படுகிறது.

யார் யாரையும் குற்றம் சொல்ல வழியில்லை.  கல்வியாளர்கள் தான் வழிகாட்டுகிறார்கள்.  நமக்கு எது அறிவுகெட்டத்தனமாகத் தெரிகிறதோ அதுவே கல்வியாளர்களுக்கு  அறிவார்ந்த செயலாகத்  தெரிகிறது.

பல நாடுகளில் உள்ள கல்வி முறைகளை வைத்துத்தான்  நம் நாட்டிலும் அதே முறைமைகளை  அறிமுகப்படுத்துகின்றனர்.  ஆனால் மற்ற நாடுகளில்  உள்ள நிலைமை வேறு.  இங்கோ 'கோட்டா' என்று சொல்லிக் கொண்டு  பூமிபுத்ரா மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் கல்லூரிகளை அடைத்துக் கொள்வார்கள்!   ஆனால் இந்திய மாணவர்கள் தகுதி அடிப்படையில்  மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.  எத்தனை தான் கல்வியில் மாற்றங்கள் வந்தாலும்  பூமிபுத்ராக்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.. ஆனால் இந்திய மாணவர்கள் தகுதி அடிப்படையில் தான்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இங்கு தான் இந்திய மாணவர்கள் பின்தள்ளப்படுவார்கள்  என்று அச்சமுற வேண்டியுள்ளது.

எப்படியோ கல்வியாளர்கள் எடுக்கும் முடிவை நாம் ஏற்றுக்கொள்ளத் தான்  வேண்டும்.  அதே வேளையில்  பெற்றோர்களின் ஆலோசனைகளையும்  கல்வி அமைச்சும் செவிமடுக்கத்தான் வேண்டும். நம்மால் எது சரி, எது பிழை  என்று தீர்மானிக்கும் நிலைமையில்  நாம் இல்லை.

No comments:

Post a Comment