மலேசிய கோடிஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், இன்று (28.11.24 காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 86.
மலேசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். பணக்காரர்களில் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீண்ட நாள் இருந்தவர், மலேசியாவின் முதல் பத்து பணக்கரர்களில் ஒருவர்.
அவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கும் பெருமை. அந்தப் பெருமையில் நாமும் பங்குப் போட்டுக் கொண்டோம். அதனைப் பெருமையாகவும் சொல்லி வந்தோம். ஆனால் இனி.......? முடியுமா?
அந்த இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது முதல் பத்து இடத்திலாவது யாரேனும் தமிழர் வர முடியுமா என்பது சந்தேகம் தான். அல்லது ஓர் இந்தியராக இருந்தால் கூட நமக்குப் பெருமை தான். வாய்ப்பு உண்டா என்பதே சந்தேகம்.
ஆனந்தாவின் இடத்தைப் பிடிக்க சமீபகாலங்களில் யாரும் ஆளில்லை என்றே தோன்றுகிறது.
அவர் மறைந்தாலும் அவர் தொடர்ந்து நம் மனதில் நிலையாகவே நிற்பார்.
No comments:
Post a Comment