Friday, 22 November 2024

பகடிவதையை தடை செய்யுங்கள்!


 பகடிவதை எங்கு நடந்தாலும் அதனைத் தடை செய்ய வேண்டும் அது எந்த நாடாக இருந்தால் என்ன?

நம் நாட்டில் பகடிவதை வரம்புக்கு மீறிவிட்டது என்பதை சமீபகாலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பகடிவதை என்பது நம் நாட்டிற்குப் புதிதல்ல/   எல்லாகாலங்களிலும் உள்ளது தான்.  உயர்கல்விக் கூடங்களில் நடப்பவை தான.  ஆரம்ப காலங்களில்  பகடிவதைக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்படுத்தியவர்கள்  நமது இந்தியர் மாணவர்கள் தான்.  அப்போது தொடங்கப்பட்ட  இந்த வன்முறைகள் அதன் பின்னர்  மலாய் மாணவர்களிடையே தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பகாலங்களில் வெறும்  விளையாட்டாகவே இருந்த பகடிவதை  இப்போது மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாகும் அளவுக்கு  அதன் எல்லை மீறிவிட்டது.

அதுவும் கட்டொழுங்குப் பேர் போன  இராணுவப் பயிற்சி மையங்களில் பகடிவதை இன்னும் அதிக வன்மத்தைத் தான் கொண்டிருக்கிறது  என்பது அங்குள்ள மாணவர்கள் மெய்பித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.  சமீபத்தில் கூட ஒரு மாணவன் மிகவும் தீவிரமாக தாக்கப்பட்டிருக்கிறான்.  இந்திய மாணவர்கள் பெரும் அளவில் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகின்றனர்.

பொதுவாக பல வன்முறைகள் வெளியே சத்தமில்லாமல்  மறைக்கப்படுகின்றன.  அதனால் தான் இன்று பூதாகரமாக  இந்தச் செயல்கள் இன்று வளர்ந்து நிற்கின்றன.   ஆண் மாணவர்கள் தான் இது போன்ற செயல்களில்  ஆர்வம் காட்டுகின்றனர் என்ரால் பெண்களும்  அதைத்தான் செய்கின்றனர்.

பகடிவதை கண்ணியமாக நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும்  எழவில்லை.  ஆனால் கண்ணியம் தவறும் போது, அளவு மீறும் போது,  பிரச்சநைகள் வெடிக்கும் போது,  காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அளவுக்குப் பிரச்சனை  விஸ்வரூபம் எடுத்து விடுகிறது.

எல்லை மீறிவிட்ட நிலையில்  இனி பகடிவதையைத் தடை செய்வது தான் ஒரே வழி.   ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு  மாணவர்கள் போய்விடுகிறார்கள். ஏதோ தனிப்பட்ட தாக்குதலாகவே தோன்றுகிறது.

பகடிவதையைத் தடை செய்யுங்கள் என்பது தான் நமது நிலை!


No comments:

Post a Comment