பிரதமர், டாக்டர் மகாதிரின் வெளி நாட்டுப் பயணங்கள் நல்லபடியாக அமைந்திருக்கும் என்று சொல்லுவதில் ஒன்றும் மிகையில்லை.
உலகத்திற்கு என்ன தான் நல்ல செய்திகளை அவர் கொடுத்தாலும் அவர் சொல்லுகின்ற செய்திகளை யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது அவருக்கே தெரியும்!
ஏன்? அவரால் மற்ற நாடுகளுக்கு ஏறைக்குறைய புத்தி சொல்லுகின்ற ஒரு நிலையைத் தான் அவர் கையாளுகிறார். நமக்குப் புத்தி சொல்லுகின்ற ஆள் அதற்குத் தகுதியானவர் தானா என்று அந்த நாடுகளும் யோசிக்கத் தானே செய்யும்!
ஆமாம், டாக்டர் மகாதிரின் "ஊருக்குத் தான் உபதேசம் எனக்கில்லை!" என்கிற போக்கைத்தான் கையாளுகிறார்! அவர் சொன்ன வார்த்தைகளை அவர் காப்பாற்றவில்லை!
சென்ற தேர்தலின் போது எத்தனை எத்தனையோ வாக்குறுதிகள். அதுவும் குறிப்பாக இந்தியர்களுக்கு வாரி வாரி வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இந்நாள் வரை நிறைவேற்றப்படவில்லை! இந்த வாக்குறுதிகள் எல்லாம் இவரால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள் தாம். அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் எதனையும் செய்யாமல் இழு இழு என்று இழுத்துக் கொண்டிருக்கிறார்! மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.வழக்கம் போல, முதல் முக்கியத்துவம் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்கிற அவரது கொள்கையை விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை!
இங்குள்ள இந்தியர்கள் அப்படி என்ன ரோகிங்ய மக்களை விட வசதிகளோடும்,வாய்ப்புக்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? நாடற்றவர்கள் பிரச்சனை எங்களுக்கும் தானே உண்டு. குடியுரிமை என்பதற்கு அறுபது வயதுக்கு மேல் என்கிற கட்டுப்பாட்டை கொண்டு வந்தது யார்? இவர் தானே!
இந்நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! நியாயம் கிடைக்கவில்லை! ஆனால் இவர் போய் மற்ற நாட்டில் நீதி கிடைக்கவில்ல என்கிறார்!
ஊருக்குத் தானே உபதேசம்! அந்த உபதேசத்தை யார் வரவேற்பார்? முதலில் நாட்டைக் கவனியுங்கள். பின்னர் உலகத்தைக் கவனிக்க்லாம்!
நாட்டில் நியாயாம் கிடைக்காமல் இந்தியர்கள் போராடுகிறார்கள்! ஆனால் இவரோ அதனைப் பற்றி கிஞ்சித்தும் கலவலைப்படாமல் மற்ற நாடுகளில் உள்ள அநீதியைப் பற்றி பேசுகிறார்!
அடுத்த பிரதமரிடம் பதவியை ஒர் ஆண்டில், இரண்டு ஆண்டில் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு இப்போது அடுத்த தேர்தல் வரை என்று இழுத்துக் கொண்டு போகிறார்! இவரிடம் என்ன நேர்மை இருக்கிறது உலகத்தைப் பற்றிப் பேச!
நேர்மை இல்லாத வரை டாக்டர் மகாதிரின் பேச்சு எடுபடாது என்பது தான் உண்மை!
No comments:
Post a Comment