பூப்பந்து விளையாட்டில் இந்தியர்களின் பங்கு என்பது மிக மிகக் குறைவு!
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அது சீனர்களின் கோட்டை. ஒரு சில இந்தியர்கள், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச் குணாளன், ஜேம்ஸ் செல்வராஜ் போன்றவர்களின் பெயர்கள் ஞாபகத்திற்கு வருகின்றது. அவர்கள் ஆண்கள்.
ஆனால் பெண்கள்? இதுவரை கேட்டதில்லை. அங்கே சீனப் பெண்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஒரு சில உள் அரங்க விளையாட்டுகளில் சீனர்களின் ஆதிக்கம் அதிகம். அது ஒரு வகையான பாரம்பரியம் என்றே சொல்லலாம். சீனப்பள்ளிகளில் இது போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்கள் தான் மூடி சூடா மன்னர்களாக இன்னும் இருந்து வருகின்றனர். மற்றவர்கள் உள்ளே உடைத்துக் கொண்டு போக வழியில்லை. வழி விட மாட்டார்கள் என்பது தான் உண்மை!
ஆனாலும் இப்போது தான் ஒரு பெண்ணின் பெயரைக் கேட்கிறோம். அது ஓர் தமிழ்ப் பெண் என்று நமபலாம். கிஷோனா என்பது அவரது பெயர். முதலில், ஒரு வேளை சபா, சரவாக் மாநிலமாக இருக்குமோ என்று நினைத்தாலும் பின்னர் அவரது தந்தையின் பெயர் செல்வதுரை என்றும் தாயார் பெயர் வளர்மதி என்று அறிந்த போது நிச்சயமாக அவர் ஓரு தமிழ்ப்பெண் என்று உறுதியாகியது.
இந்த பூப்பந்து விளையாட்டுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இந்த கிஷோணாவும் ஒரு சீனப்பள்ளி மாணவி தான். அதனால் தான் இந்த அளவுக்கு அவரால் வர முடிந்தது என நம்பலாம்.
இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். இவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்ததும் போய் விடுவார் என்று சொல்லுவதற்கில்லை. இதற்கு முன்னர் அது நடந்திருக்கிறது. இப்போது இவரிடம் அது நடக்க வாய்ப்பில்லை.
அது தான் சீனப்பள்ளிகளின் பாரம்பரியம்! அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கடைசிவரை போராட்டம். அந்த போராட்டம் கிஷோணாவிடம் இருக்கிறது. அவர் இன்னும் உயரிய நிலைக்குச் செல்லுவார் என நம்பலாம்.
சீ போட்டியில் தங்கம் வென்ற நமது தங்கத்திற்கு ஒரு சபாஷ்! தொடர்க!
No comments:
Post a Comment