Saturday 10 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (26)

 இளைஞர்களே! கனவு காணுங்கள்!



இளைஞர்களே! கனவு காணுங்கள்!

நீங்கள் சாதாரணமாக அனுதினமும் காண்கின்ற கனவுகள் அல்ல. மேதகு அப்துல் கலாம் சொன்னது போல கனவு காணுங்கள்.

கனவுகள் வந்து போகும். நீங்கள் தூங்கும் போது வருவது கனவுகள் அல்ல. நீங்கள் காணுகின்ற கனவுகள் உங்களை விட்டு எந்த நிமிடமும் அகலக் கூடாது. அது தான் கனவு. உங்களைத் தூங்க விடாமல் சுற்றிச் சுற்றி உங்களை இலட்சியத்தை நோக்கி விரட்டியடித்துக் கொண்டிருப்பதான் கனவு.

தொழிலில் ஈடுபட்டவனுக்கு எது பெரிய கனவாக இருக்கும்?  செய்கின்ற தொழிலில் மேம்பாடு காண வேண்டும் என்பது சராசரி கனவு. ஆனால் அதைவிட மேலே உயரே பார்க்க வேண்டும்.

மேகங்களுக்குக் கீழே பறப்பது குருவிகளின் தன்மை. அதற்கு மேலே அவைகள் யோசிப்பதில்லை. ஆனால் இராட்சத பறவையான கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதில் சுகம் காண்கின்றது. அது இவைகளின் தன்மை.

தொழில் செய்பவர்கள் முதலில் உங்கள் மாவட்டத்தில் உங்களின் நிலை என்ன என்று பாருங்கள். அடுத்து உங்கள் மாநிலத்தில் உங்களின் வளர்ச்சி எப்படி என்று பாருங்கள். 

நாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் நாம் யாருடனும் போட்டி வேண்டாம். போட்டி என்பது பொறாமையில் முடியும். அதுவும் தொழிலில் என்பது மிகவும் மூர்க்கமாக அது நம்மை நகர்த்திக் கொண்டு செல்லும். 

இன்று நாட்டில் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் இந்தியர்களில் இரண்டு மூன்று பேர் நமது ஞாபகத்திற்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாருடனும் போட்டி போடவில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த தொழிலில் அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்கள்.  இன்னும் வளர்கிறார்கள்.

இளைஞர்களே! கனவு காணுங்கள்.  அது நீங்கள் செய்கின்ற தொழிலில் வளர வேண்டும், உச்சத்தைத் தொட வேண்டும் என்கிற கனவாக இருக்கட்டும். போட்டிகள் வேண்டாம். யார் மீதும் பொறாமை வேண்டாம்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தங்கள் உச்சத்தை தொடர வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. யாரும் யாருடைய உரிமைகளையும் பறித்து விட முடியாது. தேவை எல்லாம் முயற்சி, உழைப்பு மட்டுமே.

இளைஞர்களே!  கனவு காணுங்கள்! தொழிலதிபர் என்கிற கனவு காணுங்கள். உங்களால் இந்த சமுதாயம் பயன் அடைய வேண்டும் என்று கனவு காணுங்கள்.

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment