Saturday 24 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.......! (39)

வெற்றி என்பது வரவே செய்யும்!

வெற்றியும் வரும். தோல்வியும் வரும். ஆனால் கடைசியில் வெற்றி வந்தே தீரும். வெற்றி தான் நமது இலக்கு என்றால் வெற்றி வராமல் எப்படிப் போகும்? 

எத்தனை தோல்விகள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அத்தோடு நமது பயணம் நீர்த்துவிடப் போவதில்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் நாளை என்று ஒன்று இருக்கிறது என்பதை மறந்து வீடாதீர்கள். நாளை மீண்டும் முயற்சி செய்யலாமே? என்ன கெட்டுப் போய்விட்டது?


முயற்சிகளை என்று கைவிடுகிறோமோ அன்று தான் தோல்வி நம்மை நோக்கி தாக்குதல் நடத்துகிறது.. தோல்விக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

எத்தகைய சூழலிலும் வெற்றி தான் நமது இலக்காக இருக்க வேண்டும். வெற்றி தான் நமது இலக்கு என்றால், வெற்றி தான் நமது நோக்கம் என்றால் தோல்விக்கு அங்கு இடமில்லை.

தோல்வி நம்மை வீழ வைக்கலாம். நாம் வீழ வில்லை. வீழ்ந்தாலும் அது அடுத்தக்கட்ட வெற்றிக்கு நம்மைத் தயார் செய்யும் அடுத்த ஆயுதம். என்பது தான்.

எத்தனை தோல்விகள் வந்தாலும் சரி தோல்விகளைத் தோல்வி அடையச் செய்வது தான் நமது வேலையாக இருக்க வேண்டும். தோல்விகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும். எந்த நிலையிலும் தோல்வி என்று ஒன்றை என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தோல்விகளைக் கண்டு அஞ்சும் கோழைகளா நாம்?  உலகெங்கும் சென்று வணிகம் செய்த இனம் நாம். எல்லாம் கடல் மார்க்கமான பயணம். அபாயகரமான பயணம். அப்போதும் நமது முன்னோர் தோல்வியைக் கண்டதில்லை! எல்லா நாடுகளுடனும்  வர்த்தக உறவுகளைச் சிறப்பாகவே  வைத்திருந்தனர்.

தோல்வி என்பது நமது அகராதியில் இல்லை. எல்லாமே ஒரு வெற்றிப் பயணம் தான். நாடு விட்டு நாடு போய் இன்றளவும் வேலை செய்கிறோம், வர்த்தகம் செய்கிறோம் - நாம் எப்படி கோழையாக இருக்க முடியும்?

அதனால், வாருங்கள்! வரிந்து கட்டுங்கள்! வெற்றி என்பது தவிர்க்க முடியாதது! வெற்றி நமதே!
 


No comments:

Post a Comment