ஒன்றை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்!
சர்ச்சைக் குறிய இஸ்லாமிய சமயப் போதகர் ஸாகிர் நாயக் எப்படி ஒரு விஷயத்தில் பின் வாங்கினார் என்று பார்க்கும் போது நமக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.
தன்னை ஒரு மாவீரன் என்று மார்த்தட்டும் போதகர் "நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று பல்டி அடித்தாரே அதைக் கண்டு நமக்கும் மனதிலே மகிழ்ச்சி தான்!
இவர் ஆரம்ப காலத்தில் இந்தியர்களையும் சீனர்களையும் ஒரே வித அளவுகோலினால் அளந்து பார்த்தார்! இரு சமூகங்களையும் தன்னால் பயமுறுத்த முடியும் என்று கொஞ்சம் அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருந்தார்!
ஆனால் அவருடைய ஆசை தவிடுபொடியாகி விட்டது! அவருக்கு அவருடைய சிஷ்யப்பிள்ளைகளிடமிருந்தே தேவையான புத்திமதியும் கிடைத்துவிட்டது! புத்திமதி இது தான்: "இந்தியர்களை, இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்! அவர்களை அவர்களுடைய ஆள்களை வைத்தே எங்களால் சமாளிக்க முடியும்! ஆனால் சீனர்கள் மீது கை வைக்க வேண்டாம்! அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்! அதற்கப்புறம் நாங்களே உங்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டி வரும்! அதனால் உங்கள் வேலை இந்தியர்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்; சீனர்கள் வேண்டாம்!இந்தியர்களைக் கேவலப்படுத்துவது எங்களுக்கும் பிடிக்கும்! அது போதும்!"
இந்த அறிவுரைக்குப் பின்னர் ஸாகிர் நாயக் சீனர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை!
என்ன தான் பணம் கொட்டிக் கிடந்தாலும் ஒர் சில இடங்களில் பணம் வலுவிழந்து விடுகிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சி!
ஸாகிர் நாயக் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் அந்த நாட்டின் மீது எந்தக் காலத்திலும் விசுவாசமாக இருந்ததில்லை. அந்நாட்டின் மீது ஓர் எதிர்ப்புக் கொள்கையையே கொண்டிருந்தவர். காரணங்கள் இருக்கலாம்.
பொதுவாக எல்லா நாடுகளிலுமே இது போன்ற எதிர்ப்புக் கொள்கை உடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதற்காக மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது, மத வெறியைக் கிளப்பிவிடுவது, சமயத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது - இது மிகவும் ஆபத்தானது.
அதைத்தான் அவர் தொடர்ந்தாற் போல செய்து வந்திருக்கிறார். அதற்காக தீவிரவாத அமைப்புக்களிடமிருந்து அவருக்கு பொருளாதார உதவியும் கிடைதிருக்கிறது; கிடைத்தும் வருகிறது.
இப்போது நமது நாட்டிலிருந்து கொண்டு அதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். இங்கிருந்து கொண்டு இந்தியாவில் உள்ள நகர்களைத் தீவிரவாதிகள் மூலம் தகர்க்கவும் முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது.
அதை விட இங்குள்ள இந்துக்கள் மீதும் அவருடைய காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் இரண்டு இந்து கோவில்கள் உடைப்புக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது! இப்படியெல்லாம் அவர் மீது சந்தேகம் எழக் காரணம் அவருடைய தீவிரவாதம் தான். அடைக்கலம் கொடுத்த நாட்டிற்கே ஆப்பு!
நம் நாட்டைப் பொறுத்தவரை அவருடைய குறி என்பது இந்து கோவில்களும் இந்துக்களும் தான்
பொறுத்திருப்போம்! இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்!
No comments:
Post a Comment