தொல்லைகள் அல்ல!
நாம் எதனை எடுத்தாலும், நமக்குத் துன்பங்கள் நேர்ந்தாலோ ஏதோ ஒரு சில அசம்பாவிதங்கள் நேர்ந்தலோ அனைத்தையும் தொல்லைகளாகக் கருதுகிறோம்.
தொல்லைகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் வரும் போகும். வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும். அவைகள் தொல்லைகள் என்று நினைத்தால் தொல்லைகள் தான். தொல்லைகள் இல்லை என்றால் அவைகள் தொல்லைகளே இல்லை.
எவைகளை நாம் தொல்லைகளாகப் பார்க்கிறோம்? வீட்டில் குழந்தைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தொல்லைகளாகத் தெரிகின்றன. வேலைக்குச் சரியான நேரத்தில் போவது தொல்லையாகத் தெரிகிறது. ஏன்! அலுவலக்த்தில் போய் வேலை செய்வது கூட சிலருக்குத் தொல்லையாகத் தெரிகின்றது.
எதனை நாம் தொல்லைகளாகக் கருதுவதில்லை! சினிமா பார்ப்பது ஜாலியாக இருக்கிறது. தொல்லையாகத் தெரிவதில்லை. நண்பர்களோடு அரட்டை அடிப்பது ஜாலியாக் இருக்கிறது, தொல்லையாக இல்லை. சினிமாக்காரர்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது தொல்லை என்றே தெரிவதில்லை!
ஆக எதனை விரும்பிச் செய்கிறோமோ அவைகள் நமக்குத் தொல்லைகளாகத் தெரிவதில்லை!
அப்படி என்றால் நாம் என்ன செய்யலாம்? எவை தொல்லைகள் என்று நினைக்கின்றோமோ அவைகள் எல்லாம் ஜாலியானவைகள் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் போதும். பிள்ளைகள் தொல்லையில்லை அவர்கள் நமது குடும்பத்தின் வருங்கால டாக்டர்கள் என்கிற எண்ணத்தோடு அவர்களை அணுகுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஆடி விளையாடுவதால் தானே அவர்கள் பிள்ளைகள்? சப்பாணியாக இருந்தால் நம் மனம் என்ன பாடுபடும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேலைக்குச் சரியான நேரத்தில் போவது தொல்லையாகத் தெரிகிறதா?அப்படி செய்வதன் மூலம் நாம் ஒர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறோம் என்று நினையுங்கள். வேலை செய்வது கூட தொல்லையா? அந்த சம்பாத்தியத்தில் நமது குடும்பம் பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழ முடிகிறதே அதற்காக நன்றி சொல்லுங்கள்.
எல்லாம் தொல்லை, தொல்லை என்பதை ஒதுக்கிவிட்டு அந்தத் தொல்லைகளின் மூலம் என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து அந்த நல்லவைகளை ஏற்றுக் கொண்டு தொல்லையற்ற வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
தொல்லையா? அப்படி ஒன்றுமில்லை!
Saturday, 29 February 2020
Friday, 28 February 2020
வருங்கள்! நாமும் முன்னேறுவோம் (59)
ஹலோ டாக்டர் நலமா?
சிறு வயதிலிருந்தே சில நற்பண்புகளை நமது குழைந்தைகளின் மனதில் விதைக்கிறோம். சான்றாக பிள்ளைகளிடம் பேசும் போது நாமே அவர்களிடம் "வாங்க! போங்க!" என்று பேசுகிறோம். மற்றவர்களிடம் பேசும் போது பிள்ளைகள் வாங்க போங்க என்று பேச வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம்.
அது நல்ல பழக்கம் தான். யாரும் தவறு என்று சொல்வதற்கில்லை. இப்படி நற்பண்புகளை விதைக்கும் போது அது எப்படி குழந்தைகளின் மனதில் பதிகிறதோ அதே போல அவர்கள் வருங்காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஒரு சில பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர்.
எனது நண்பர் ஒருவர் தனது மகன் பள்ளிக்கூடம் செல்லுவதற்கு முன்பே அவனை "டாக்டர்! டாக்டர்!" என்று அழைப்பதுண்டு. அவனது குடும்பத்தினர் அனைவருமே அவனை டாக்டர் என்று தான் அழைப்பர். அவர்கள் சொல்லுகின்ற செய்தி என்ன? அந்த சிறுவன் வருங்காலத்தில் ஒரு டாக்டராக வர வேண்டும் என்கிற இலட்சியத்தை சிறு வயதிலேயே அவனுக்கு ஊட்டப்படுகிறது ஊக்கம் கொடுக்கப்படுகிறது என்பது தான். அந்த பையன் இப்போது டாக்டராகி விட்டான்.
உங்கள் குழைந்தைகள் பிறக்கும் போது நீங்கள் ஏழ்மையில் இருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். இன்றைய ஏழ்மை நாளைய வளமை. அதனால் ஏழ்மை நிரந்தரமல்ல. அப்படியே இருந்தாலும் இவைகளையெல்லாம் மீறி தான் பல சாதனைகள் படைக்கப்படுகின்றன.
இப்போது எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஒரு இலட்சியத்தை ஏற்படுத்தி விடுங்கள். கைகளில் காசு இல்லையென்றாலும் "நம் வீட்டில் நீ தான் டாக்டர், நீ தான் பெரிய லாயர், நீ தான் பெரிய வாத்தியார் என்பதாக பெரிய இலட்சியத்தை ஏற்படுத்தி விடுங்கள். தினசரி இதனை நீங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வந்தாலே மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பது தான் இயற்கையின் நியதி.
பிராமணர்களிடையே ஒரு பழக்கம் உண்டு என்பார்கள். ஆண் குழந்தை பிறந்தால் "கலைக்டர் பிறந்துட்டாண்டி!" என்றும் பெண் குழந்தை பிறந்தால் "டாக்டர் பிறந்துட்டாடி!" என்று மனைவியிடம் சொல்லி மக்ழ்வார்களாம்! பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகத்தானே இருக்கிறது! ஒரு வளர்ந்துவிட்ட சமுகமே இப்படி செய்யும் போது வளரத் துடிக்கும் நமக்கு
இப்படி சொல்லுவதில் நமக்கு என்ன தயக்கம்? இதெல்லாம் மனோதத்துவம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதனால் உங்கள் குழந்தைகளிடம் இப்போதே சொல்லிப் பழகுங்கள். காசா, பணமா அப்புறம் என்ன தயக்கம்?

Thursday, 27 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (58)
படிப்பதை நிறுத்தாதீர்கள்!
பொதுவாக ஒருவர் படிப்பதை நிறுத்துகிறார் என்றால் அத்தோடு அவர் தனது அறிவு வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பது தான் பொருள்.
இங்கு படிப்பது என்பதை பள்ளி படிப்போடு ஒப்பிடாதீர்கள். புத்தகங்கள் படிப்பதைத் தான் இங்கு நான் குறிப்பிடுகிறேன். குறிப்பாக நீங்கள் சார்ந்த துறையைச் சேர்ந்த நூல்களைப் படிக்கலாம். அது உங்களுக்கு நிச்சயமாக பயனைத் தரும்.
இந்த நேரத்தில் குறிப்பாக ஒன்றை நான் சொல்ல வேண்டும்.
ஓரு பிரபலமான எழுத்தாளர். மர்மக் கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதியவர் ஒரு பேட்டியில் போது தனது கதைகள் காவல் துறையினருக்குக் கூட ஒரு வகையில் உதவியிருப்பதாக ஒரு காவல் துறை அதிகாரி தன்னிடம் நேரடியாகச் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போல எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாதவர் யார்? அவருடைய எழுத்துக்கள் ஒரு மனநல மருத்துவருக்குப் பேருதவியாக இருந்தாக அவரே குறிப்பிட்டதாக பேச்சாளர் சுகி சிவம் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நூல்களைப் படிக்கின்ற போது தான் சார்ந்த துறையைத் தேர்தெடுக்கலாம் அல்லது தான் சாராத நூல்களையும் தேர்ந்தெடுக்கலாம். எல்லாமே நமக்கு ஒரு பொது அறிவைக் கொடுக்கும். ஆனாலும் இன்றைய நிலைமையில் தான் சார்ந்த தொழிலோடு சம்பந்தப்பட்ட நூல்களை மட்டுமே பலர் படிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அது உண்மை என்றால் கூட படிப்பவர்கள் ஓரளவு வளர்ந்துவிட்ட தொழிலதிபர்கள் தான். சிறிய, நடுத்தர தொழில் செய்பவர்கள் நிலை என்ன? வழக்கம் போல சினிமா செய்திகளைப் படுத்திவிட்டு தான் சார்ந்த தொழிலைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். நாம் சிறியவரோ, பெரியவரோ நாம் எதனைப் படித்தாலும் சில செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம். நேரம் இல்லை என்று சொல்லாது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிக்கலாம். அல்லது குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்து கொண்டு அந்நேரத்தில் படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
வர்த்தக சமூகத்தினர் படிப்பதை நிறுத்தி விடக் கூடாது. ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, அதனால் வரும் நன்மை, தீமைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நமது வாடிக்கையாளர்களுடனான நமது அணுக்கமான உறவு சிறப்பாக இருக்கும்.
படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்!

Wednesday, 26 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (57)
நடப்பது எல்லாம் நன்மைக்கே!
வியாபாரத் துறையில் உள்ளவர்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்குவது ஒன்றும் புதிதல்ல. சிக்கல்கள் வரத்தான் செய்யும். வரட்டுமே! அதனைச் சரி செய்வது தான் நமது வேலை!
சீனர்கள் காலங்காலமாக என்னன்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் வியாபாரம் என்பதாக அவர்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள். நாமும் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் தீடீரென்று அடித்துக் கொள்ளுவார்கள் நாளை கூடிக் கொள்ளுவார்கள். அப்படி செயவதில் அவர்களுக்கு இலாபம் உண்டு. ஒன்று பண வரவுண்டு அல்லது பதவி வரம் உண்டு.
நமது நிலை எல்லாம் இருக்கிற சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொல்ளுவது தான்.
வெளி நாடுகளில் நாம் பார்க்கிறோம். குண்டு போடுகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். மக்களைக் கொல்லுகிறார்கள். எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த நேரத்தில் வியாபாரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. காரணம் மக்களுக்குச் சாப்பாடு வேண்டும். அவர்கள் உயிர் வாழ வேண்டும். தங்களது அனுதின நல்லவை கெட்டவை யாவும் நிறைவேற்ற வேண்டும். இது போன்ற தருணங்களில் வியாபாரிகளுக்கும் தார்மீகக் கடமைகள் உண்டு. அதனை அவர்கள் தவிர்க்க முடியாது. தங்களது உயிரைப் பணயம் வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்.
வியாபாரிகளைப் பொறுத்தவரை நாட்டில் எது நடந்தாலும் "சும்மா அடைத்துவிட்டுப் போய்விடலாம்" என்று அலட்சியமாக இருந்து விட முடியாது.
சாதாரண காலங்களாக இருந்தாலும் சரி, ஆபத்துக் காலங்களாக இருந்தாலும் சரி வியாபாரிகள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். நமது கடமைகளை நாம் செய்ய வேண்டும். நாம் தொடர்ந்தாற் போல நமது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இப்போது நாட்டில் நடப்பது ஓர் அரசியல் நெருக்கடி. பேராசை பிடித்த பதவி வெறியர்களால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஓரு நெருக்கடி.
நம்மைப் பொறுத்தவரை நமது தினசரி கடமைகளை நாம் செய்ய வேண்டும். நெருக்கடியை நெருங்க விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற மனப்போக்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்!
"இதுவும் கடந்து போம்!" வாழ்க! வளர்க!

Tuesday, 25 February 2020
வாருங்கள்! ! நாமும் முன்னேறுவோம்! (56)
நமது நிலை என்ன?
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் கதாநயகன் 95 வயது டாக்டர் மகாதிர் என்பது நமக்குத் தெரிகிறது. அத்தோடு சரி நமது பங்கு. அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அரசியல்வாதிகள் தான்.
அரசியல்வாதிகளிடம் கூனிக் குறுகி கூச்சம் இல்லாமல் பிடுங்கி தின்பதற்கென ஒரு கூட்டம் எப்போதும் சுத்திக் கொண்டிருக்கும்.
ஆனால் சீனர்களிடம் இந்த நிலை இல்லை. காரணம் அவர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வியாபாரம் உண்டு. யார் காலிலும் விழ வேண்டும் என்னும் நிலை இல்லை! தீடீர் தேர்தல் வந்தால் கூடுதலாகச் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்!
நமது நிலை என்ன என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் ஒரு சீறிய வியாபாரம் செய்தாலே போதும் நாம் ஒரு "தொழிலதிபர்: என்கிற அடைமொழியைக் கொடுத்து விடுகிறார்கள்!
வியாபாரத் துறையில் உள்ளவர்கள் அரசியலில் ஒரு பார்வையாளனாகவே இருப்பது நல்லது. தொழிலதிபர் ஆகி விட்டால் கவலை இல்லை. உங்களுக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டியதில்லை. சராசரியாக வளர்ந்து வரும் வியாபாரிகளுக்கு அரசியல் என்பது அளவோடு இருக்க வேண்டும். வெளியில் உங்களின் கருத்தைச் சொல்லக் கூட உங்களுக்கு உரிமையில்லை! அது தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் "ஆமாஞ்சாமி" போட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சீனர்கள் வெளிப்படையாக அரசியலை விமர்சிப்பதில்லை. அது வர்த்தகத்திற்குக் கேடு என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதல்ல. சீனர்களுக்கு ஏதேனும் - குறிப்பாக தங்களது வர்த்தகத்துக்கோ அல்லது மொழிக்கோ - பாதிப்போ எற்படும் என்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்! அரசியல்வாதிகளுக்கும் சரியான அழுத்தத்தைக் கொடுப்பார்கள். நம்மால் அப்படி எல்லாம் செய்ய முடியாது. காட்டிக் கொடுப்பதற்குக் கட்டபொம்மன்கள் கூடவே இருக்கிறார்கள்!
நாம் சொல்ல வருவது எல்லாம் இது தான். நாம் சிறிய அளவில் வரத்தகத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அரசியலைப் பேசி நம்முடைய பொருளாதாரத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான்.
நாம் வளர வேண்டும். நமக்காக பேசுபவர்களைத் தெர்ந்தெடுக்க வேண்டும். அதனைச் சரியாக செய்தால் போதும். சமுதாயத் துரோகிகளை நிறைவே கண்டு விட்டோம். இனி மேலும் ஏமாறக் கூடாது. அமைதியாக இருந்து நமது கடமைகளை நிறை வேற்றுவோம்.
எப்போதும் போல் நமது நிலை சிறப்பாகவே இருக்கிறது. சிறப்பாகவே வாழ்வோம்!

Sunday, 23 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (55)
நிறைய அனுபவங்கள் வேண்டும்
தொழிலில் வெற்றி பெற நிறைய அனுபவங்கள் வேண்டும் என்பது உண்மை தான்.
அனுபவம் தான் சிறந்த ஆசான். அடிபட வேண்டும். உதை பட வேண்டும். கையில் காசு இல்லாத போது என்ன நடக்கும், என்ன நடக்காது - இதனை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அனுபவம் பெற வேண்டும்.
ஒரு வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். மேலே சொன்ன அனுபவங்களைப் பெறுவதென்பது எளிதல்ல. பல ஆண்டுகள் பிடிக்கும். இப்போது அந்த அனுபவங்களைப் பெற ஒரு சில நொடிகள் கூட போதும். இணையத்தளத்தில் நாம் அந்த பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிற் துறை சார்ந்த வெற்றிப் பெற்ற பல ஜாம்பவான்கள், பல வெற்றியாளர்களின் அனுபவங்கள் அனைத்தும் பல பேட்டிகளின் வழியாக தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய அனுபவங்கள் நமக்கு நல்ல பாடம். அவை விலைமதிக்க முடியாத பாடங்கள். நாம் ஒவ்வொரு அனுபவத்தையும் பெற பல ஆண்டுகள் பிடிக்கும். வெற்றி பெற்ற இந்த மனிதர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தும் போது அவைகளை நமது அனுபவங்களாக மாற்றிக் கொண்டு "எது வேண்டும், எது வேண்டாம்" என்பதை முடிவு செய்யலாம்.
நாம் ஒருவருடைய அனுபவங்கள் மட்டும் அல்ல பல வெற்றியாளர்களின் அனுபவங்களைக் கேட்பதன் வ்ழி நாமும் அவர்களுடைய அனுபவங்களைப் பெறுகிறோம்.
"யாருடைய அனுபவமும் எனக்குத் தேவை இல்லை நான் பெறுகின்ற அனுபவமே எனக்குப் போகும்" என்று ஒருவர் நினைத்தால் அதன்படி அவர் செய்யட்டும். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. அது அவரது திறமை. ஆனால் பெரும்பாலாவர்களுக்கு சிலருடைய அனுபவங்கள், வழிகாட்டுதல்கள் அனைத்தும் தேவைப்படுகின்றன.
மற்றவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும் போது அதையே நமது அனுபவங்களாக ஏற்றுக் கொண்டு நாம் நம்மைத் திருத்திக் கொள்ளலாம். அனுபவங்கள் தான் சிறந்த ஆசான். ஆசானுக்கெல்லாம் ஆசான். அதில் ஐயுற ஒன்றுமில்லை.
ஒரு முறை காலை வேலையில், கார் போக்குவரத்து இல்லாத நிலையில் ஒரு குறுக்கு வழியில் புகுந்தேன். எனக்கு எதிராக ஒரு போலீஸ் கார் வந்து என்னை இடை மறித்தது. நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் சம்மன் கொடுத்தார்கள் பிறகு நீதிமன்றம் போய் கட்டினேன். அதன் பிறகு நான் அந்த தவற்றைச் செய்யவில்லை! அது தான் அனுபவம் என்பது!
இது ஒரு சிறிய அனுபவம் தான். பெரிய அனுபவங்கள் நமது எதிர்காலத்திற்கு நல்ல பாடங்கள். அதுவும் தொழிற் துறையில் பெரிய அனுபவங்கள் பல பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
அனுபவங்களைத் தேடிக் கொள்ளுங்கள். தக்கவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் இல்லையா? இருக்கவே இருக்கிறது இணையத்தளம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இளைஞனே! அனுபவம் போதவில்லை என்றால் அதனைத் தேடி கண்டுபிடி! அது பல தவறுகளைத் தவிர்க்க உதவும்.

Saturday, 22 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (54)
ஆங்கிலம் வரவில்லையா?
இன்றைய நிலையில் படித்தவர்கள் அதிகம். படிக்க வசதிகள் அதிகம். எல்லாமே இருக்கிறது.
ஆனால் ஆங்கிலம் பேச வரவில்லை என்கிறார்கள்!
நமக்குத் தெரிந்த வரை அவர்கள் அனைவரும் கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது பெரிய குறைபாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றம் இல்லை. அதற்கு நாம் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டும். புதிதாக எந்த வழியும் கண்டு பிடிக்கப்படவில்லை!
நான் தோட்டத்தில் வேலை செய்த காலத்தில் ஒரு சீன இளைஞர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார், அவர் முழுமையாக சீனப்பள்ளியில் கல்வி கற்றவர். ஆங்கிலம் வராது! ஆனால் ஆங்கிலத்தை வர வைத்துக் கொண்டார். அவருக்கு என்ன ஆங்கிலம் வருமோ அப்படியோ பேசுவார்! எதற்கும் கவலைப்படுவதில்லை! கேலி, கிண்டல்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை! சுமார் ஆறு மாதங்களில் ஆங்கிலத்தை சரளமாக பேசக் கற்றுக் கொண்டார். அவர் முறையாக சீன வழி கல்வி கற்றவர். ஆங்கிலமும் அங்குக் கற்றுத் தரப்படுகின்றது. ஆங்கிலம் பேச வரவில்லை என்பதைத் தவிர பேச முடியாதவர் அல்ல! முன்பு அந்த வாய்ப்பு இல்லை.வெளி உலகில் அந்த வாய்ப்புக் கிடைத்தது.பயன்படுத்திக் கொண்டார்.
இதற்கு என்ன தேவை? கொஞ்சம் முயற்சி தேவை.அவ்வளவு தான். என்ன தான் நாம் மலாய் மொழி வழி கல்வி கற்றாலும் அங்கு ஆங்கிலமும் கற்றுத் தரப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் ஆங்கில மொழி நமக்குப் புதிய மொழி அல்ல. எப்போதுமே நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள ஒரு மொழி. மேலும் ஆங்கில மொழியை நூறு விழுக்காடு சரியாகப் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்றுமில்லை. வெள்ளைக்காரன் கூட அப்படிப் பேசுவதில்லை! தமிழை நாம் என்ன சரியாகத்தான் பேசுகிறோமா? அப்படித்தான் அவர்களும்!
ஆங்கிலம் பேச வராது என்று சொல்லுபவர்களில் இந்திய மாணவர்களும், மலாய் மாணவர்களும் தான் முன்னணியில் நிற்கிறார்கள். பேச வேண்டும், ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை. கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் எளிதாக ஆங்கிலம் பேசி விடலாம்.
இது உங்கள் வயிற்றுப் பிரச்சனை. அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சுப்பர் ஸ்டார், தல, தளபதி இவர்களெல்லாம் அவர்கள் குடும்பத்தின் வயிற்றுப் பிரச்சனையைப் போக்கத்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் அதனைத் தான் செய்ய வேண்டும்.
ஆங்கிலம் வருமா? வரும்! ஆனா.........வேண்டாம்!

Friday, 21 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (53)
ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்
நமது அன்றாட வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கிறோம்.ஒரு நாள் மகிழ்ச்சி. ஒரு நாள் சோகம். வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி இருந்தால் அது சுவைக்காது. அதனால் தான் நமக்கு இந்த ஏற்றம் இறக்கம் தேவைப்படுகிறது.
அது போலத் தான் வியாபாரத் துறையிலும். நாம் எதிர்பாராத நேரத்தில் ஏதாவது இறக்கங்கள் வந்து விடுகின்றன. ஏற்றம் இருக்கும் போது மகிழ்கிறோம். இறக்கம் ஏற்படும் போது ஒன்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறோம்! அல்லது 'இனி எப்படி?' என்ற கேள்விக் குறியுடன் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறோம்! இது தான் யதார்த்தம்!
இப்போது நம்மிடையே "கோவிட் 18" என்னும் தொற்று நோய் , நம் நாடு மட்டும் அல்ல உலகங்கிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. நிறைய மரணங்கள். உலகமே திகைத்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே ஒரு சாரார் மகிழ்ச்சியால் துள்ளுகின்றனர். ஆமாம் மருந்தகங்கள், முகக்கவசங்களை விற்கும் நிறுவனங்கள் தங்களது கல்லாப் பெட்டிகளை நிரப்புகின்றன. விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், உணவகங்கள் என்று இன்னும் சில நிறுவனங்கள் கதறுகின்றன. இந்த நஷ்டத்தின் மூலம் பல மரணங்களும் சம்பவித்திருக்கலாம். பலர் வேலை வாய்ப்புக்களையும் இழந்திருக்கலாம்.
என்ன செய்யலாம்? இழப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். வேறு வழியில்லை!
தொழில் ஏற்றம் அடைந்திருந்த போது நாம் அதிக மகிழ்ச்சியடைந்தோம். அந்த மகிழ்ச்சியை இப்போது இந்த துயரத்தின் போது பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவ்வளவு தான்.
வாழ்க்கை என்பது இது தான்.சோதனை, வேதனை, சாதனை என்று போய்க் கொண்டே இருக்கும். நாமும் "இதுவும் கடந்து போகும்!" என்கிற மனநிலையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அஞ்சாதீர்கள். எதுவும் நிரந்தரமல்ல. அதுவும் தொழில் துறைகளில் ஒரு நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு நாள் குறைந்தால் ஒரு நாள்அதிகரிக்கும், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போகும், அடுத்த நாள் கொடிகட்டிப் பறக்கும்! இது வியாபாரத் துறை. அப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் காரணகாரியங்கள் உண்டு. அதனை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஆக, வருமானம் குறைகிறதே என்று அஞ்சாதீர்கள். நமக்கு இது புதிய அனுபவமாக இருக்கலாம். வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீனர்கள் அப்படித்தான் தங்களது ஒவ்வொரு நாளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்?
ஏற்றத் தாழ்வுகள் வரும் போகும்! இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் வையுங்கள்.

Thursday, 20 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (52)
இப்படியும் செய்யலாம்!
உணவகங்களைப் பற்றி எத்தனையோ குறைகள் சொன்னாலும் அது என்னவோ உணவகங்கள் குறைந்தபாடில்லை! வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன!
மலேசியர்களாகிய நாம் வீட்டு சாப்பாட்டை விட உணவகங்களைத் தான் அதிகம் நம்பி இருக்கின்றோமோ என்று தோன்றுகிறது!
எனது அலுவலகம் பக்கத்திலேயே ஒரு புதிய உணவகம் உதயமாகி இருக்கிறது. மலாய்க்காரர் ஒருவர் ஆரம்பித்திருக்கிறார். மலாய் உணவகம் என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு நம்மிடம் ஓர் அளவுகோள் இருக்கிறது. அப்படித்தான் இதுவும் இருக்கும் என்பதிலே ஒருமித்த கருத்து நம்மிடையே உண்டு.
உணவகத்தில் குளிர்சாதன வசதிகள் உண்டு. தொழிலை ஆரம்பித்திருக்கும் அந்த மலாய் நண்பருக்கு ஏகப்பட்ட புதிய புதிய எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கும்! அந்த உணவகத்தைச் சுற்றி ஏகப்பட்ட மலாய் உணவகங்கள். ஏன்? எங்கள் தாமானிலேயே அனைத்தும் மலாய் (இந்தோனேசிய, தாய்லாந்து) உணவகங்கள் தான். இரண்டு மாமாக் உணவகங்கள். வியாபாரத்தில் மாமாக் தான் முன்னணியில்!
இந்த புதிய உணவகம் வந்த போது நண்பர் ஒருவர் "இரண்டு மாதத்தில் அடைத்துவிட்டு ஓடி விடுவான்! என்று அருள்வாக்கு உரைத்தார்! அது நடக்கவிலை!
அப்படி என்ன புதுமையைக் கையாள்கிறார் இந்த மனிதர்? முதலில் அங்கு விற்கின்ற விலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விலை. நீங்கள் சாப்பிட பத்து வெள்ளிபோதும் என்று நினைத்தால் அங்கு குறைந்தது முப்பது வெள்ளியாவது வரும்! எல்லாமே அப்படித்தான்! மற்றவை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
உணவகம் ஆரம்பிக்கும் போது காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை. பிறகு காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை. பிறகு காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை. இப்போது இரவு நேரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். இரவு நேரத்து மார்க்கெட் நிலவரத்தை படித்துக் கொண்டிருக்கிறார். ஏதாவது புதிய யுக்திகளைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்!
இப்போது காலை நேரத்தில், பதினோரு மணி வரையில், விலையில் மாற்றத்தைக் கொண்டு வ்ந்திருக்கிறார். மற்ற உணவகங்களின் விலை என்னவோ அதே விலையில் காலை பசியாறலில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்!
ஆக காலையிலும் பிற்பகலிலும் அவருடைய உணவகத்தில் ஜேஜே தான்! இரவு நேரத்திலும் ஏதாவது புதிய யுக்தியைக் கையாளுவார் என எதிர்பார்க்களாம்.
இந்த மலாய் நண்பரின் உணவகத்தில் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்த உணவகத்தை நிர்வகிப்பவர் ஓரு தமிழ் இளைஞர் என்பது தான்.
திறமை எங்கிருக்கிறதோ அதைப் பயன்படுத்துவது தான் விவேகம். "எனக்கு எல்லாம் தெரியும்!" என்றால் அப்படி ஒரு மனிதன் இந்த உலகில் யாருமில்லை!
ஆமாம் நமது தொழில்களில் என்ன புதுமைகளைச் செய்ய முடியுமோ அதனைச் செய்யத் தயங்காதீர்கள். எத்தனை போட்டிகள் இருந்தாலும் புதுமைகளைச் செய்பவன் தொடர்ந்து தாக்குப் பிடிக்கிறான். தொழிலை வளர்க்கிறான். தொழிலில் நிலைத்து நிற்கிறான்.
எங்கள் பாட்டன் காலத்திலேயே நிற்பேன் என்பவன் விரட்டப்படுவான்! புதுமைகளை புகுத்துபவன் நிலைத்து நிற்பான்!
இப்படியும் செய்யலாமே!

Wednesday, 19 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (51)
குடி குடியைக் கெடுக்கும்!
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சும்மாவா சொன்னார்கள்?
வெள்ளைக்காரன் தங்கள் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் எங்கேயும் மாறிப் போய்விடக் கூடாது என்பதற்காக தோட்டங்கள் தோறும் கள்ளுக்கடைகளைத் திறந்து வைத்தான். இபோது அந்தக் கள்ளுக்கடைகள் எல்லாம் மறைந்து விட்டன. நாமும் மறந்துவிட்டோம்.
இதெல்லாம் நடந்து அதாவது நமது பாட்டன் பூட்டன் காலத்தில் நடந்தது. ஆனாலும் பாட்டன், பூட்டன் காலத்தில் நடந்தவைகளை இன்னும் அந்த மரபு அறுந்து விடக்கூடாது என்பதற்காக இந்தத் தலைமுறையும் அதனைத் தொடர்கிறார்களே அதைத் தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
இன்று தமிழன் தலை நிமிர முடியாமல் இருக்கிறானே அதற்கு யார் பொறுப்பு? இந்த குடிகாரத் தலைமுறை என்பதை நம்மால் மறக்க முடியுமா?
நமக்கு என்ன குறை? நம்மிடம் எல்லாத் திறமைகளும் உள்ளன. தனி ஆளாக நம்மை வீழ்த்த முடியாதவர்கள் இந்த "குடிகாரத் தலைமுறையை" வைத்து நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்! சரி அதற்கு ஒரு முடிவு கட்டுவோமென்றால் ஒருவனும் எதற்கும் ஒத்து வரமாட்டேன் என்கிறான்!
குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை எப்படி ஒழிப்பது? அப்பனிடம் இருந்து கற்றுக் கொள்ளுகிறான் மகன்! குடிப்பதை ஏதோ தொழில் போல் செய்கிறான் மகன்! பள்ளிகளிலேயே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இன்னும் முழுமையாக இடைநிலைக் கல்வியை முடிக்கவில்லை அதற்குள் முழுமையான குடிகாரனாகி விடுகிறான்! அதன் பின் லோரி ஓட்டுனராகி பிழைப்பை நடத்துகிறான்!
இந்த குடிப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி எங்கே ஆரம்பிப்பது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது என்பதே புரியவில்லை!
தமிழர்களில் பலர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். மற்ற இனங்களோடு போட்டி போடுகின்ற அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். இதனை மறுக்க முடியாது. பொருளாதாரம், கல்வி அரசியல் என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் நமது முன்னேற்றம் நமக்குத் தெரிகிறது.
ஆனாலும் பின் தங்கியிருக்கும் இந்த குடிகாரர்களினால் நமது சாதனைகள் அனைத்தும் பின் தள்ளப்பட்டு விடுகின்றன. அதனால் தான் நாம் பல வழிகளில் அரசாங்கத்தாலேயே ஏமாற்றப் படுகிறோம். நாம் இழிவு படுத்தப்படுகிறோம். நமது மொழி புறக்கணிக்கப்படுகின்றது. குடியுரிமை அற்றவர்களாக மாரடித்து புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
இந்த குடிகாரர்கள் மட்டும் திருந்தி "நாம் தமிழர்" என்று என்றைக்கு விழித்து எழுகிறார்களோ அன்றைக்கே நமது அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
தம்பி! இப்போது தான் குடிக்கப் பழகிக் கொMடிருக்கிறாயா? அதனை உடனே நிறுத்தி விடு! நாளை உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வர அனுமதியாதே! நாளை என்ன நடக்கும் என்பதை யார் கண்டார்?
குடி, குடியைக் கெடுக்கும் என்பது உண்மையிலும் உண்மை! இந்த குடிகார கூட்டத்தை நம் மத்தியில் அனுமதியாதே! அவனை மாற்ற என்ன செய்யலாம் என்பதை யோசி. அல்லது மாற்றி யோசி!

Tuesday, 18 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (50)
கோலாகலமான பெருநாள் காலங்கள்
நமது நாட்டில் பெருநாள் காலங்களுக்குப் பஞ்சமேயில்லை! தீபாவளித் திருநாள், ஹரிராயா பண்டிகை, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தினம் என்று நான்கு பெரிய பண்டிகைகளைக் கொண்டிருக்கிறோம். இன்னும் இடை இடையே சிறிய சிறிய பண்டிகைகள்.
சீனப் புத்தாண்டை கொண்டாடுவதில் சீனர்கள் நமக்குப் புதிய பாதையைக் காட்டிவிட்டார்கள். இப்போது அது அனைத்துப் பண்டிகைகளிலும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது பண்டிகைக் காலங்களில் வெளி நாடு செல்வதில் சீனர்கள் அதி தீவிரம் காட்டுகிறார்கள். இப்போது நம்மில் பலர் அவர்களைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். தவறில்லை!
பொதுவாக பல விஷயங்களில் சீனர்கள் தான் நமக்கு வழி காட்டியாக இருக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்வதில் நாம் அவர்களைப் பின் பற்றுகிறோம். பணம் சம்பாதிப்பதில் நாம் அவர்களைப் பின்பற்றுவதில்லை.
இது தான் நம்மிடம் உள்ள குறை. அவர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு உழைப்பைப் போடுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அவர்கள் பெருமைக்காக எதையும் செய்வதில்லை. அவர்கள் முன் கூட்டியே திட்டம் போட்டு பயணத்திற்கான செலவுகளுக்குத் தயாராகி விடுகிறார்கள். அப்படியே செய்யவும் செய்கிறார்கள். அவர்களுடைய மாதாந்திர வரவு செலவுகளை அந்தப் பயணம் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். அது தான் சரி.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் நமக்கு மகிழ்ச்சி தான். அதன் மூலம் ஏதோ ஒரு சில விஷயங்களையாவது கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் அதற்காக கடன் வாங்கி செலவு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே தீபாவளி வந்தால் அதனை "கடன்காரத் தீபாவளி" என்பதாக நாமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! நாம் கடன் வாங்கிவிட்டு தீபாவளி மேல் பழி போடுகிறோம்! அப்போதும் செய்தோம் இப்போதும் செய்கிறோம்!
வெளி நாடு பயணம் செய்ய வேண்டும், தீபாவளியை அர்த்தம் உள்ளதாகக் கொண்டாட வேண்டும், புதிய உற்சாகம் பெற வேண்டும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரியானது தான். ஆனால் அதனை கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது
சீனர்களைப் பின்பற்ற விரும்புகிறோம். . ஆனால் சீனர்களின் உழைப்பை மறந்து விடுகிறோம். பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். இருந்தாலும் இது போன்ற பயணங்களுக்கு அவர்கள் இன்னும் அதிகமாக உழைக்கிறார்கள். நாம் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறோம். அந்த வளர்ச்சியில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது. அது நமது மாதாந்திர வரவு செலவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
பெருநாள் காலங்களைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதற்காக அதிகமாக கொஞ்சம் மிகையாக சம்பாதிக்க பழகிக் கொள்ள வேண்டும். அதனை நமது மாதாந்திர வரவு செலவுகளோடு இணைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் முக்கியம்.
பெருநாள்களைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். பயனுடையதாக கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஆனால் கடான்காரனாக கொண்டாடாதீர்கள்.
அனைத்தும் நம் கையில் தான். கையில் பணம் அதிகம் புரளும் போது சிறப்பாக வெற்றிகரமாக கொண்டாடுங்கள்.
அப்படி இல்லையென்றால் அடக்கமாக கொண்டாடுங்கள்! யாரும் உங்களைக் கேள்வி கேட்கப் போவதில்லை!

Monday, 17 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (49)
பொறாமை வேண்டாம்
பொறாமைப் படுவது என்பது மிகவும் கேவலமான ஒரு பழக்கம்.
யார் மீது பொறாமைப்பட வேண்டாம். நம்மை விட ஒருவர் உய்ர் பதவியில் இருக்கலாம். வாழ்த்தப் பழகுங்கள்!
நம்மோடு படித்தவன் நாலு பேர் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்கிறான். அவனை நாமும் மதிப்போம்!
நம்மை விட தகுதியற்ற ஒருவன் தகுதி இல்லாத இடத்தில் இருக்கிறான். அதனாலென்ன! அவனிடம் நம்மை விட ஏதோ ஒரு தகுதி மேலாக இருக்கிறது என்பதை எண்ணி அவனைப் பாராட்டுவோம்!
நமக்குப் பின்னால் தொழில் தொடங்கியவன் - அவன் வளர்ந்து விட்டான் நாம் இன்னும் பின்னாலேயே இருக்கிறோம் அவன் மீது பொறமை வருகிறது. அவனது திறமையை நாம் உணர்ந்து கொள்ளவில்லை. அவனைத் தவறாகப் புரிந்து கொண்டோம். அவனை மேலும் வளர வாழ்த்துவோம்!
நாம் மனிதர்கள். யாரோ எவரோ, தெரிந்தவரோ தெரியாதவரோ, யாராக இருந்தாலும் சரி - ஃ நம்மை விட மேலான நிலையில் இருந்தால் நமக்குப் பொறாமை வருகிறது! தேவையற்ற பொறாமை! அதுவும் சொந்தக்காரன் ஒருவன் நம்மைவிட மேல் நிலையில் இருக்கிறான் என்றால் இன்னும் பொறாமை அதிகமாக வருகிறது. குடும்பத்திற்குள்ளேயே பொறாமை தலைவிரித்தாடுகிறது.
மற்றவர் மீது பொறாமை வரும் போது நம்மை நாம் தாழ்வாக நினைத்துக் கொள்ளுகிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பொறாமை உணர்வு நம்மைத் தான் பாதிக்கிறதே தவிர நாம் பொறாமைப் படுகிறோமே அவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை!
,மற்றவர் மீது பொறமைப்பட்டு நமது வியாதிகளைத் தான் கூட்டிக் கொள்ளுகிறோமே தவிர அவர்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை!
அதை விட அவர்களை வாழ்த்துங்கல். பெருமைப் படுத்துங்கள்! அவர்களின் திறமையை மதியுங்கள்.
அப்படி செய்வதின் மூலம் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுகிறீர்கள். நீங்களும் பெருமைக்குரியவராக மற்றவர்களின் பார்வையில் தென்படுகிறீர்கள்.
மற்றவர்களை நாம் வாழ்த்தும் போது நாமும் வாழ்த்தப் பெறுகிறோம். பெருமைப்படுத்தும் போது நாமும் பெருமைப்படுத்தப்படுகிறோம். மற்றவர்களை உயர்த்தும் போது நாம் உயர்த்தப் படுகிறோம்!
நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வரும். பொறமையைக் கொடுத்தால் நம் மீதும் பொறாமை தான் திரும்பி வரும்!
பொறாமையின்றி வாழ்வோம்! வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வோம்!

Sunday, 16 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (48)
வாழ்ந்தாலும் ஏசும் தாழந்தாலும் ஏசும்
இப்படி ஒரு பாடலை இப்போதோ எப்போதோ கேட்டிருப்பீர்கள். அல்லது என்றோ கேட்ட பாடலில் வலம் வந்திருக்கும்.
பாடலை எழுதியவர் கவி.கா.மு.ஷரிப்ஃ.
பாடல் என்ன சொல்ல வருகிறது? நீங்கள் நன்றாக வாழ்ந்தால் அப்போதும் உங்கள் மீது குற்றம் கண்டு பிடி;ப்பார்கள். பொறாமை கொள்ளுவார்கள். "இவன் கொள்ளையடிச்சித் தான் இப்படி பெரிய அளவில் வந்துட்டான்!" என்பார்கள்.
நீங்கள் தாழ்ந்துவிட்டால் என்ன சொல்லுவார்கள்? "அப்போ பணத் திமிரைக் காட்டினான்! இப்ப பாரு நாய் படாத பாடு படுகிறான்!" என்று இளக்காரமாக பேசுவார்கள்!
இது தான் உலகம். உலகம் சொல்லுகிறதே என்று பார்த்தால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
நமக்கு இரண்டும் வேண்டாம். பெருமையும் சிறுமையும் வேண்டாம். நமக்குத் தேவை நல்லதொரு வாழ்க்கை, வெற்றிகரமான வாழ்க்கை. நாலு பேருக்கு நல்லது செய்யக் கூடிய வாழ்க்கை. யாரையும் அசிங்கப்படுத்த வேண்டாம். அசிங்கப்படும்படி வாழவும் வேண்டாம்.
வெற்றிகர்மான வாழ்க்கை என்னும் போது நமக்கும் பிறருக்கும் பயன்படும்படியான வாழ்க்கை. அது மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த உலகத்திற்கு நம்மால் தேவையானவற்றை செய்ய முடியும்.
கீழ் நோக்கிய பயணம் என்றால் நமக்கோ, நமது குடும்பத்திற்கோ, இந்த சமுதாயத்திற்கோ ஒரு பயனும் இல்லை. ஒரு குடிகாரனாக ஆனால் போதும் குடும்பம் கீழ் நோக்கி சரிந்துவிடும்!
நன்றாக வாழத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம். அதை நன்றாகவே வாழ்ந்துவிட்டுப் போவோம். நாம் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். நாம் ஏழ்மையிலேயே வாழ வேண்டும் என்கிற அவசியமில்லை. அதனை மாற்றி அமைக்கும் சக்தி நம்மிடம் உள்ளது. இறைவன் நமக்கு அனைத்து சக்திகளையும் கொடுத்திருக்கிறார். அதனை நாம் பயன்படுத்த வேண்டும்.
நன்றாக வாழ்ந்தால் தான் இந்த உலகம் நம்மை மதிக்கும். பொறாமைக் கொண்டார் எந்நாளும் பொறாமைக் கண் கொண்டு நம்மை ஏசிக் கொண்டிருப்பர்.
எந்நாளும் நாம் தாழ்ந்து போகும் எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது.நினத்துப் பார்க்கவும் கூடாது. அது வேண்டவே வேண்டாம்.
ஏசினாலும் நாம் வாழ்ந்து காட்டுவோம்! தாழ்ந்து காட்டவே மாட்டோம்!
நாம் நன்றாக வாழ்ந்தால் மட்டும் போதாது. நமது பிறப்பு என்பது நம்மை நாமே காத்துக் கொள்ளுவது அல்ல. பிறரையும் காக்க வேண்டும். பிறருக்கும் உதவ வேண்டும்.
நாலுபேர் நம்மை மதிக்க, நம்மை நாலுபேர் பாராட்ட, நாட்டுக்கு நல்லது செய்ய நாம் வாழந்தால் அந்த நாலுபேர் நம்மை மெச்சுவார்கள்!
தரங்கெட்டு வாழ்ந்தால் தாழ்வாகத்தான் பேசுவார்கள்!
நாம் வாழ வேண்டும்! வீழ்வதாக இருக்கக் கூடாது!

Saturday, 15 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (47)
இருக்கவே இருக்கிறது நேரடித் தொழில்!
பயப்படாதீர்கள்! நாட்டில் பிழைப்பதற்கு நிறையவே வழிகள் இருக்கின்றன. நாம் ஒரே வேலையில் பல ஆண்டுகளைக் கழித்து விட்டதால் தீடீரென வேலை பறிபோனதும் என்ன செய்வது என்று திசை தெரியாமல் தடுமாறுகிறோம். இது இப்போது மட்டும் அல்ல அந்தக் காலத்திலும் அப்படித்தான் இருந்தது! அதிசயம் ஒன்றுமில்லை!
ஆனால் அதிசயம் என்ன வென்றால் அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டும் எழுவது தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.
போட்டி நிறைந்த இந்த உலகில் வாழ்வதற்கு நம்பிக்கை மிகவும் தேவை. இந்த வேலை போனால் இன்னொரு வேலை. நாம் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
இது நாள் வளர்ந்த பாதையை விட்டு புதிய பாதையைத் தேர்ந்தெடுங்கள். மனிதனுக்கு மாற்றம் தேவை. அது இப்போது வந்திருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளுங்கள். கலங்கினால் பாதை கலங்கலாகத் தான் இருக்கும். பாதை தடுமாறும்.
நண்பர் ஒருவருக்கு சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருந்ததினால் அவர் பார்த்து வந்த வேலை பறி போனது. காப்புறுதி தொழிலுக்கு ஒருவர் வழி காட்டினார். அவ்வளவு தான். சிக்கென பிடித்துக் கொண்டார். வயதான காலத்தில் பல இலட்சங்களுக்கு அதிபதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் தொடர்ந்து படிப்பதற்குப் பொருளாதார பிரச்சனை எழுந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருள்களை விற்கும் ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டு தனது கல்வியை முடித்தது மட்டும் அல்லாமல் அவன் படித்த படிப்புக்கு நேர்மாறாக அவனை வாழ வைத்த அந்த நேரடித் தொழிலேயே தொடர்ந்து விட்டான். இப்போது பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருக்கிறான்.
இன்னொரு மனிதர் அவர் குடும்பத்தையே நேரடித்தொழிலில் மூலமே நடத்தியவர். ஒரு மகள் வெளி நாட்டில் டாக்டராக இருக்கிறார். மற்றவர்கள் உள்நாட்டிலேயே நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஏதோ ஒரு வேலையைச் செய்து மாதச் சம்பளம் வாங்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற ஒரு நிலைப்பாட்டை காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். அதனால் தான் வேலை பறி போனதும் நாம் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. உடனடியாக எந்த மாற்றத்திக்கும் நாம் தயாராக இல்லை.
எது நடந்தாலும் எந்த மாற்றத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்! இந்த உலகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும். இந்த நாட்டில் பல இலட்சம் வெளி நாட்டினர் வந்து இங்கு பிழைக்கின்றனர். பலர் சொந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நம்மால் மட்டும் முடியாதா, என்ன?
நேரடித் தொழில்கள் நிறையவே இங்கு இருக்கின்றன. ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வரும் வழியைப் பார்ப்போம்! பின்னுக்குப் போவதைப் பற்றியான சிந்தனை வேண்டாம்! முன் நோக்கிப் போகும் பாதை எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது! பயான் படுத்திக் கொள்ளுங்கள்!
அதான்! எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது நேரடித்தொழில்!

Friday, 14 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (46)
இனி தமிழன் தலை நிமிர்வான்!
காலையில் படித்த செய்தி ஒன்றே போதும். தமிழன் தலை நிமிர்வான் என்னும் நம்பிக்கையை உறுதி செய்து விட்டது.
ஆமாம் "மலேசிய கினி" இணையத்தளம் வெளியிட்ட அந்த செய்தி மனதைக் குளிர வைத்துவிட்டது.
"குறைவான குப்பைகளோடு தைப்பூசம்" கொண்டாடப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது. தைப்பூசம் என்றாலே இலட்சக்கணக்கான பக்தர்கள் நம் கண் முன்னே வருகிறார்கள். அங்கே குப்பைகளைக் குறைப்பது என்பது இயலாத காரியம் என்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அது வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது!
இதற்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்கள் நமது வானொலி நிலயத்தினர். அடிக்கடி அறிவிப்புக்கள் கொடுத்து மக்கள் மனதில் "குப்பை போடக் கூடாது!" என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டனர். வாழ்த்துகள் நண்பர்களே!
இந்த ஆண்டு பெரும் அளவில் குப்பைகளைக் குறைத்தற்காக நன்றி! ஆனால் அது போதாது. அதனை 0 விழுக்காட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
பத்துமலை திருவிழா மட்டும் அல்ல எல்லாப் புனிதத் திருத்தலங்களிலும் அது கடைப் பிடிக்க வேண்டும். அத்தோடு பொது இடங்கள், சாலைகள் எதுவாக இருந்தால் இந்த சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை.
இந்த 0 விழுக்காடு சுத்தம் என்பதற்கு நமது பங்களிப்பு என்ன? முக்கியமாக பெற்றோர்கள். பிள்ளைகளிடம் குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். இங்கு முக்கியமாக நான் குறிப்பிடுவது பெற்றோர்கள் தான் தண்டனை பெற வேண்டியவர்கள்.! காரணம் பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு அந்த வழிகாட்டுதல் இல்லை! அப்பனே குடித்துவிட்டு போத்தல்களை மக்கள் நடக்கும் பாதையில் வீசி எறிகிறான்! என்ன செய்வது? ஆனால் அதனையும் மீறி சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் நாம் பாராட்டுக்குரியவர்கள் தானே!
எது எப்படியோ நாம் மாறி வருகிறோம்! இனியும் தொடருவோம்! நாம் தலை நிமிர்வோம்!

Thursday, 13 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (45)
வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!
வாழ்ந்து காட்டுவோம். நாம் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த இனம். வீழ்ந்த இனம் அல்ல.
ஒரு காலக் கட்டத்தில் வெள்ளைக்காரன் நம்மை நேர்மையற்ற முறையில் வீழ்த்தினாலும் அதற்காக நாம் ஓடி ஒளிந்த இனம் அல்ல. ஏதோ ஒரு சிலரைத் தான் அவனால் வீழ்த்த முடிந்ததே தவிர இந்த தமிழினத்தை அவனால் வீழ்த்த முடியவில்லை!
நமது இனம் தலை நிமிர்ந்து வாழ பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளுவதே ஒரே வழி.
நமக்குப் பொருளாதார பலம் இருக்க வேண்டும். அது தான் மற்ற இனத்தவரிடையே நம்மை உயர்த்திக் காட்டும். இன்று நமது அரசாங்கமே நம்மை தாழ்த்திக் காட்டுகிறது. குடியுரிமை பிரச்சனையாகட்டும், கல்வி ஆகட்டும் நம்மால் எதிர்பார்த்தபடி எதுவும் ஆகவில்லை! ஓர் இந்திய வம்சாவளியான டாக்டர் மகாதிர் கூட தன்னை பூமிபுத்ரா என்று காட்டிக் கொள்ள நமது இனத்தை அவமானப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். அதற்கு விடுதலைப்புலிகள் என்பது ஒன்றே போதுமான சான்றாகும்!
நாம் இப்போது அவமானப்படுவதற்கு ஒரே காரணம் நமது பொருளாதார பலவீனம் மட்டுமே!
நம்மை இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறார்களே இதனையே சீன சமூகத்தினரிடம் இந்த வீராப்பைக் காட்ட முடியுமா? காட்டித்தான் இருக்கிறார்களா? இதுவரை அவர்களால் அப்படி செய்ய முடியவில்லையே! ஏன்? ஒரே காரணம் சீனர்களின் பொருளாதார பலம் தான்!
சீனர்கள் எல்லாக் காரியங்கலிலும் மௌனம் காட்டுகிறார்கள். ஆர்ப்பாட்டம் பண்ணுவதில்லை. அரசாங்கத்தை எதிர்ப்பதில்லை. ஆனால் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அவைகள் அனைத்தும் கிடைத்து விடுகிறது. நமக்கு அந்த பணமும் இல்லை, பலமும் இல்லை!
இதோ இப்போது நமது நேரம். படித்து விட்டோம் வேலை கிடைக்கவில்லை! அதற்காக தலையிலா கையைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா?
சிறிய அளவிலாவது ஒரு தொழிலைத் தொடங்கி விடுங்கள். வெறுமனே சோம்பித் திரியாதீர்கள்!
வீழ்ந்து விட்டோம்! அது அவமானமல்ல! வீழ்ந்து கிடப்பது தான் அவமானம்!

Wednesday, 12 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (44)
யார் பின்னாலும் அலையாதீர்கள்!
யாரும் என்று சொன்னாலும் நான் சொல்ல வந்தது அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள் என்பது தான்.
அரசியல்வாதிகள் அடிப்படையில்
சுயநலவாதிகள். அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார்களே தவிர எந்தவகையிலும் அவர்கள் உங்களை உயர்த்திவிட மாட்டார்கள்! தங்களை உயர்த்திக் கொள்ளுவதறகு உங்களை அவர்கள் ஏணியாகப் பயன்படுத்திக் கொள்ளுவார்களே தவிர கடைசியில் உங்களுக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் எலும்புத் துண்டுகள் தான்!
முன்னேற வேண்டும் என்று முனைப்பு உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் அலையாதீர்கள். ஓர் அரசியல்வாதியின் பின்னால் வால்பிடித்துக் கொண்டு திரிந்த ஓர் இளைஞனைத் தெரியும். எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்றவன். ஆசிரியராக ஆகியிருக்கலாம். அரசாங்க வேலைக்குப் போயிருக்கலாம். அந்த அரசியல்வாதி நினைத்திருந்தால் அந்த வாய்ப்புக்களை அவனுக்குக் கிடைக்க வைத்திருக்கலாம். ஆனால் அந்த அரசியல்வாதி அதனைச் செய்யவில்லை. அவர் கூடவே போவதும் வருவதும் அவருக்கு ஆதரவாகப் பேசுவதும், இரவு ஆனால் 'தண்ணி' அடிப்பதும் அதுவே அவனது வாழ்க்கையாகப் போய்விட்டது! அந்த இளைஞன் கடைசிவரை வேலை செய்து சம்பாதித்தோம், குடும்பத்தைக் காப்பாற்றினோம் என்கிற எண்ணமே ஏற்படாதவாறு அந்த அரசியல்வாதி அவனைப் பார்த்துக் கொண்டார்! கடைசியில் 'தண்ணி' அடிக்க வழியில்லாமல் நொந்து நூலாகிப் போனான்!
இது என்ன வாழ்க்கை? இந்த சுயநலமிகளை நம்பியா நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவது! ஒர் அரசியல்வாதி முன்னேறினான் என்றால் ஒரு கொள்ளைக்காரன் உருவாகிவிட்டான் என்பது தான் பொருள்! ஒரு கொள்ளைக்கரனுக்கு உதவுவதில் நமக்கு என்ன பெருமை!
நமது வாழ்க்கையைப் பொறுத்தவரை நமது குடும்பத்திற்கே முதலிடம். குடும்ப முன்னேற்றத்திற்கே முதலிடம். பிள்ளைகளின் கல்விக்கே முதலிடம். பொருளாதார முன்னேற்றத்திற்கே முதலிடம்.
நாம் யார் பின்னால் அலைந்தாலும் அது நமது முன்னேற்றத்திற்காகத் தான் இருக்க வேண்டுமே தவிர கொள்ளைக்காரர்களின் முன்னேற்றத்திற்காக அல்ல!
நமது குடும்ப முன்னேற்றதிற்காக பாடுபடுவது சுயநலம் அல்ல. அது நமது கடமை. ஒவ்வொரு தமிழர் குடும்பமும் முன்னேறினால் அது போதும். வேறு எந்த வெங்காயமும் வேண்டாம்! நாம் முன்னேறி விட்டோம் என்று அர்த்தம்.
அரசியல்வாதிகள், கொள்ளைக்காரர்கள் பின்னால் அலைவது மாபெரும் குற்றம்! அதனைச் செய்யாதீர்கள்!

Tuesday, 11 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (43)
கடற் சார்ந்த பயிற்சிகள்
இன்றைய சூழலில் நம்மைப் பொறுத்தவரை கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்த்க்கூடிய பலம் பொருந்திய சாதனம்.
நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், முன்னேற வேண்டும் என்பதெல்லாம் நல்ல சிந்தனைகள் தான்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் சரியான வழிகாட்டியாக இருப்பது கல்வி ஒன்று தான்.
நம்முடைய இளைஞர்களில் பலர் கடற் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பது வருத்தத்திற்குரியதே.
இப்போது இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் துறையில் இயங்கும் மித்ரா அமைப்பின் மூலம் கடற்சார்ந்த பயிற்சி அளிக்கப்பட விருப்பதாக அறிவிப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய மாணவர்களுக்கு நூறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக மித்ரா அமைப்பு கூறுகிறது.
நாம் முன்னேறுவதற்கு என்ன என்ன தகுதிகள் நமக்குத் தேவையோ அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா. தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ளாதவரை நமது இனம் எடுபிடி வேலைகளுக்குத் தான் இலாயக்கு என்று முத்திரைக் குத்தப்படும்.
இன்றைய நிலையில் நமது நாட்டின் மூன்று பெரிய இனங்களில் மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் யார் என்று தெரியாதா? எல்லாம் தெரிந்தது தான்! நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! ஒரே காரணம் தான்.
அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகளில் பங்கு பெறுவதில்லை."நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுக்கிறோம், சாப்பாடு போடுகிறோம், தங்க இடம் கொடுக்கிறோம்! வாங்க! வாங்க!" என்று அழைத்தாலும் கொஞ்சம் கூட நகர மாட்டோம்! "பிள்ளை எங்களை விட்டுப் போனால் கெட்டுப் போவான்!" என்று அப்பன் சொல்லுகிறான்! என்னடா இனம இது!
எந்த ஒரு திறனும இல்லாமல் எந்த வேலையைத் தான் உங்களால் செய்ய முடியும்? மீண்டும் தோட்டங்களுக்குப் போய் பால் மரத்தை வெட்டப் போகிறாயா?
மாணவ மணிகளே படிப்பு விஷயத்தில் பெற்றோர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். உங்களின் வருங்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கல்வி வேண்டும். ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர். ஒரு எஞ்சினியர் - போன்ற துறைகளில் தேர்ச்சி பெறா விட்டாலும் மற்ற துறைகளில் வெற்றி பெற அரசாங்கம் நிறைய வாய்ப்புக்களைக் கொடுக்கின்றது. அவைகளைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
முன்னேற வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஏதோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து நீங்கள் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
இதோ இப்போது இந்த நேரத்தில் கடற் சார்ந்த பயிற்சிகள் பெற வாய்ப்புக்கள் வந்திருக்கின்றன. மித்ரா மூலம் இந்த வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு: MITRA - TEL.NO: 03-88866262 / 03-88866322
வாழ்த்துகள்!

Monday, 10 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (42)
பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா?
பங்கு மார்க்கெட்டைப் பற்றி இரண்டே கருத்துக்கள் தான். ஒன்று: கோடிக்கோடியாக கொட்டலாம்! அல்லது தெருக் கோடியில் நிற்கலாம்!
எனக்குத் தெரிந்த இரண்டு நபர்கள் தெருக்கோடிக்கு வந்தவர்கள்!
பங்கு மார்க்கெட் அந்த அளவுக்கு மோசமானதா? இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஆழம் தெரியாமல் காலை விடுவதே நமது பழக்கமாகப் போய்விட்டது/ அதனால் தான் பலத்த அடி விழுகிறது!
உடனடியாக பலன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு மரணடி விழலாம். நீண்ட கால முதலீடு என்றால் நிச்சயமாக நீங்கள் இலாபத்தைப் பார்க்கலாம். பங்கு மார்க்கெட் என்பது நீண்டகால முதலீடு.
எனது வயதான நண்பர் ஒருவர் அவருடைய இளமைக் காலத்தில் எஸ்ஸோ பங்கு ஒன்று வாங்கினார். அவர் வாங்கிய போது அதன் விலை ஏறக்குறைய முப்பது வெள்ளி இருக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அப்படியே போட்டு வைத்திருந்தார். அவருடைய வயதான காலத்தில் அது ஆயிரம் வெள்ளி வரை உயர்ந்துவிட்டது. பிறகு அவருடைய மகன் பெயருக்கு மாற்றிவிட்டார்.
எனது இளமையான நண்பர் ஒருவர் நல்ல வங்கி வேலையில் இருந்தவர். அவருக்கு மாற்றம் வந்த போது வேலையை ராஜினாமா செய்து விட்டார். ஊழியர் சேமநிதி பணம் சுமார் நான்கு இலட்சம் வெள்ளி இருந்தது. அது போதும் தான் கோடிஸவரனாகி விட முடியும் என்று நினைத்தார். கடைசியில் தெருக்கொடிக்கு வந்து விட்டார்! அவர் புத்திசாலியாக இருந்திருந்தால் மூன்று இலட்சத்தை குடும்பத் தேவைகளுக்காக ஒதுக்கிவிட்டு ஒரு இலட்சத்தில் தனது ஆட்டத்தைக் காட்டியிருக்கலாம். ஒரு இலட்சம் போனாலும் "போனால் போகட்டும் போடா!" என்று டாட்டா காட்டியிருக்கலாம்! இப்போது ஒன்றுமில்லாமல் பிள்ளைகளின் தயவில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்!
பங்கு மார்க்கெட் என்பது சூதாட்டம் அல்ல. அது ஒரு நீண்ட கால முதலீடு. நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஓரளவு நிறுவனங்களைப் பற்றியான அறிவு நமக்கு இருக்க வேண்டும்.
பெரும்பாலான் நிறுவனங்கள் சீனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அவர்களுக்குத் தான் எங்கு ஒட்டல், உடைசல்கள் உள்ளனன என்பது தெரியும். தேவையான நேரத்தில் தேவையான செய்திகள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அதாவது சீனர்களுக்குப் போய் சேர்த்து விடும். நாம் எதனையும் அறியாமல் இருப்போம்! அப்படியே நம்மை உட்கார வைத்து விடுவார்கள்!
பங்கு மார்க்கெட் என்பது நல்ல முதலீடு. அது சுதாட்ட மையம் அல்ல. அதிகப் பணம் இருந்தால் ஆடலாம்! கொஞ்சம் பணம் இருந்தால் அது நமக்கேற்ற இடமல்ல!
பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா? செய்யலாம். அது நீண்ட கால முதலீடாக இருக்க வேண்டும்!

Sunday, 9 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (41)
முதலில் சம்பளம், மற்றவை பின்னர்!
கல்லுரிகளிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளுக்கு கல்லூரிகளில் புதிதாக ஒரு பாடத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
பட்டதாரிகள் கல்லுரிகளிலிருந்து வெளியாகும் போது வெளி உலகில் வேலை தேடும் போது முதலாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பாடம் தேவை என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக பட்டதாரிகள் எந்த ஓர் அறிவும் இல்லாமல் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் படித்த படிப்புக்கும் அது சார்ந்து அவர்கள் தேடும் வேலைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரிவதில்லை!
முதலாளிகளிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "எவ்வளவு சம்பளம்?" என்பது தான். எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் அவர்கள் இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளுகிறார்கள். அப்படி செய்வதால் முதலாளிகள் அவர்களை ஏமாற்றி விட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் முதலாளிகளோ இவர்களைப் பார்க்கும் போதே, இவர்களின் பேசும் தோரணையே இவர்களின் வேலைத் திறன் எப்படி இருக்கும் என்பதைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்!
வேலைக்கு விண்ணப்பம் செய்பவர் எந்த ஒர் அனுபவமும் இல்லாதவர். ஆனாலும் சம்பளம் என்று வரும் போது கறாராக நடந்து கொள்ளுகிறார்!
தனக்கு வேலை தெரியும், தெரியாது என்பது பற்றி அவர் அலட்டிக் கொள்ளுவதில்லை!
நமது பட்டதாரிகளுக்கு ஒன்று புரியவில்லை. அவர்களைப் போல பல பட்டதாரிகள் வேலைக்காகச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன தான் வேலை செய்வார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை. எந்த ஒரு அனுபவமும் இல்லை. அனுபவத்தை பெற வேண்டும் என்னும் அக்கறையும் இல்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லாத இவர்கள் வேலையில் சேர்ந்த பிறகு எந்த ஆர்வத்தைக் காட்டப் போகிறார்கள்?
எந்த வேலை கிடைத்தாலும், அங்கு குறைந்த சம்பளமே கிடைத்தாலும், வேலையை ஏற்றுக் கொண்டு ஓர் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அனுபவம் சும்மா வராது. வேலை செய்வதன் மூலம் தான் தேவையான அனுபவங்கள் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.
இப்போது உள்ள பட்டதாரிகளுக்கு ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. அவர்களுக்கு வேலை இல்லையென்றாலும் வீட்டில் சாப்பாடு கிடைத்து விடுகிறது. அதனால் வேலையைத் தள்ளிப்போட்டாலும் கேட்க ஆளில்லை! ஒரு வேலை கிடைக்கும் வரை ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை.
இந்த நேரத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய இளைஞர்கள் மட்டும் தான் பட்டாதாரிகள் என்று நினைக்காதீர்கள் கொஞ்சம் சீன இளைஞர்கள் பக்கம் திரும்பிப் பாருங்கள். அவர்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களா என்று கவனியுங்கள். நாமும் அவர்களும் எப்படி வித்தியாசப் படுகிறோம் என்று பாருங்கள்.
முதலில் சம்பளம் பேசுவதை முதலாளிகளிடம் விட்டுவிடுங்கள். உங்களின் வேலையறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மற்றவை பின்னர்!

Saturday, 8 February 2020
வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (40)
நிமிர்ந்த நடையும்......!
நிமிர்ந்த நடை என்றால் என்ன என்று கேட்கின்ற நிலையில் நமது பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன!
மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து படித்து வெளியே வருவது என்பது ஒன்றும் அதிசயமல்ல. வெளி உலகில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள் என்பது தான் சுவாரஸ்யம்!
ஒரு மாணவன் - கல்லூரி காலங்களில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பது எனக்குத் தெரியும். அவன் திறமையான மாணவன் என்று சொல்லக் கேள்வி. நல்ல விஷயம். அவன் கல்லூரிக் காலங்களில் அவனுடைய தலைமுடியை நன்றாக சீவி வாரி கொண்டை போட்டுக் கொள்ளுவான்! காதில் கடுக்கன் போட்டிருப்பான்! சரி, இளமைக் காலத்தில் இதெல்லாம் எதிர்பார்ப்பது தான். அதுவும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். அப்படித்தான் பெரும்பாலான இளைஞர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்!
இதனையெல்லாம் தவறு என்று நாம் சொல்ல முடியாது. எல்லாக் காலங்களிலும் இளைஞர்கள் இப்படித்தான் மாற்றத்தை ஓடி தேடி கொண்டு வந்திருக்கிறார்கள்!
எனது இளமைக் காலத்தில் நான் "பாத்தேக்" சட்டை அணிவதைக் கூட தவிர்த்திருக்கிறேன். அப்போது, அதன் ஆரம்பக்காலக் கட்டத்தில், பாத்தேக் அணிந்தால் அவனை ரௌடி என்று முத்திரைக் குத்துவார்கள். அதனால் "நல்ல" பிள்ளைகளான நாங்கள் பாத்தேக் சட்டைகளை எப்படி அணிய முடியும்? ஆனாலும் நாளடைவில் நாங்களும் பாத்தேக் சட்டைகளை அணிந்து கொள்வதை தவிர்க்க முடியவில்லை! என்ன சொல்ல வருகிறேன் என்றால் புதுமையாக எதைச் செய்தாலும் அப்போது அவர்களுக்கு ஏதோ ஒரு பட்டப் பெயர் வந்து சேரும் என்பது தான்!
இப்போது இவர்கள் எல்லாம் தலைவாரி பூச்சூடி கடுக்கன்களோடு உலா வ்ரும்போது "மச்சி, மச்சான்!" சரியாகாத்தான் பொருந்துகிறது! ஆனால் அந்த நிமிர்ந்த நடை என்பது மச்சிகளுக்கும் இல்லை, மச்சான்களுக்கும் இல்லை என்பது தான்.
இவைகளையெல்லாம் படிக்கும் காலத்திலேயே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுங்கள். வேலை செய்யும் காலத்தில் ஆண்களாக நடந்து கொள்ளுங்கள், வெளி உலகம் என்பது வேறு. உங்களை ஆண்களாகத்தான் பார்ப்பார்கள்.
நான் மேலே சொன்ன இளைஞன் அவன் ஆணாக மாறாதவரை அவனுக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை! வெளி உலகை அறிந்த பின்னர் அவன் தன்னையே மாற்றிக் கொண்டான்.
வெளி உலகக்கு வந்து விட்டால் "நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்" தானாக வந்து விட வேண்டும். இல்லாவிட்டால் தளர்ந்த நடையும், கீழ் நோக்கும் பார்வையும் வந்து சேரும்!

Friday, 7 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (39)
வேலைகளைத் தள்ளிப் போடுகின்றவரா நீங்கள்?
நாம் பலவிதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறோம். நது நமக்கு நன்மை உண்டாக்குமானால் அது நல்ல பழக்கம். தீமை உண்டாக்கும் பழக்கமாக இருந்தால் அது தீய பழக்கம்.
நமக்கு அதிகம் கேடு விளைவிக்கும் பழக்க என்றால் நமது வேலைகளைத் தள்ளீப்போடுவது!
நாளை செய்யலாம், நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நாளை, நாளைத் தள்ளிப் போடுவது என்பது யாருக்கும் நன்மையைக் கொண்டு வர வாய்ப்பில்லை!
இது நமது வேலை, இன்று செய்தாலும், நாளை செய்தாலும் இது நமது வேலை. அன்றைய வேலையை அன்றே செய்வது என்பது மிகவும் உயர்வான பழக்கம்.
நமக்கு உள்ள வேலையை என்று செய்ய வேண்டுமோ அன்றே செய்து முடித்து விட்டால் அது நமக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அதனை நாம் இழுத்துக் கொண்டு போவதால் அதுவும் நமக்கு ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஆமாம். நமது கடமையை நாம் ஒழுங்காக செய்யவில்லை என்றால் ஏதோ ஒரு குறைபாடு நமக்குள்ளேயே அழுத்திக் கொண்டிருக்கும். அது முக்கியமோ அல்லது முக்கியம் அல்லையோ, அது நமக்குக் கொடுக்கப்பட்ட வேலை, நம்மை நம்பி கொடுக்கப்பட்ட வேலை, அப்படியென்றால் அதனைக் குறித்த நேரத்தில் முடித்து வைப்பது நமது பொறுப்பு. இல்லையென்றால் நம்மை நாமே "பொறுப்பில்லாதவன்" என்கிற எண்ணத்தை அது ஏற்படுத்தும்!
உலகில் அனைத்துமே சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரண சேவல் கூட காலையில் சரியான நேரத்தில் கூவி நம்மை எழுப்புகிறது. அது தனது கடமையைச் சரியாக செய்கிறது. நாம் எழுந்திருக்கிறோமோ இல்லையோ அதுவல்ல அதன் வேலை, நாம் எழுந்திருக்க வேண்டியது தான் நமது வேலை.
காலைக் கதிரவன் தள்ளிப் போனால் என்ன ஆகும்? அப்படி ஒன்றும் ஆகாது. காரணம் அதன் கடமையிலிருந்து அது தவறுவதில்லை. இந்த பூமிப்பந்தில் எதுவுமே நேரம் தவறுவதில்லை. அதனதன் வேலையைச் சரியாகவே செய்து கொண்டிருக்கின்றன.
இதற்கு விதிவிலக்கு மனிதன் மட்டும்தான். எல்லாவற்றிலும் தள்ளிப்போடும் பழக்கம் உள்ளவன் மனிதன் மட்டும் தான்.
இன்றிலிருந்து நமது கடமையைச் சரியாகச் செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம், நாம் பணிபுரியும் இடத்தில் உள்ள வேலைகள், வீட்டில் நாம் செய்ய வேண்டிய வேலைகள், இந்த சமுதாயத்திற்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் எதுவாக இருந்தாலும் சரி, குறித்த நேரத்தில் அத்தனையும் செய்து முடிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்.
வேலைகளை, கடமைகளை எதுவாக இருந்தாலும் சரி தள்ளிப்போடுகின்ற பழக்கம் நமது முன்னேற்றத்தைத் தள்ளிப் போடும். முன்னேறுவதை பாதிக்கும்.
தள்ளிப் போடுகின்ற பழக்கத்தை தள்ளி வையுங்கள்! அன்றைய வேலையை அன்றே முடிப்போம்! இன்றைய வேலையை இன்றே முடிப்போம்!
வேலைகளைத் தள்ளிப் போடுவது பழக்கம் அல்ல குழப்பம்!

Thursday, 6 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (38)
iஇது தான் நமது பெருமை!
நாம் மிக மிக உயர்ந்த இனம். நம்மோடு ஒப்பிடும் அளவுக்கு எந்த இனமும் இல்லை என்பது பொய்யல்ல! ஆனால் பல காரணங்களால் நாம் நம்பியவர்களே நம்மைக் குப்புறத் தள்ளி விட்டார்கள்.
ஆனால் எத்தனை நாளைக்குத் தான் அதனையே நாம்
சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? நாம் எழுந்து நிற்க வேண்டாமா?
இப்போதும் கூட தனி தனி ஆளாக நம்மை ஜெயிக்க எந்த கொம்பனும் இல்லை. ஆனாலும் நாம் தோல்வியாளர்கள் என்று தான் கூறப்படுகின்றோம். காரணம் மற்றவன் கூட்டு முயற்சியில் நம்மைவிட முன்னணியில் நிற்கிறான்.
எப்படியோ நாமும் இந்த மாறுகின்ற உலகில் மாறி வருகிறோம். வருகின்றோம் தானே? அதனை மெய்ப்பிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.
தைப்பூச பெருவிழா நாளை (8-2-2019)) அன்று. நாம் வளர்ந்த சமூகம். படித்த சமூகம். நாம் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் சமூகம.
இதனை நாம் மெய்ப்பிக்க வேண்டும். தைப்பூசம் என்றால் தமிழர்கள் அதிகம் கூடுகின்ற இடம். தமிழர்களோடு மலையாளிகள், தெலுங்கர்கள், வட இந்தியர்கள் இப்படி பல தரப்பட்ட நிலையில் உள்ள இந்து பெரும் மக்கள் கூடுகின்ற இடம். பத்துமலை திருக்கோயில் என்றால் அது ஒரு புனிதத் தலம்.
புனிதத் தலத்திற்கு போகின்ற நமக்கு சுத்தம் என்பது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். நாம் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப நமது காணிக்கைகளைச் செலுத்துகிறோம். வழிப்பாட்டில் கலந்து கொள்ளுகிறோம். அனைத்தையும் எந்த பிழையும் ஏற்படாதவாறு ந்மது வேண்டுதலை நிறைவேற்றுகிறோம். பக்தி பழமாக வெளியே வருகிறோம்.
அனைத்தும் சரி. ஒரு விஷயத்தில் நாம் கோட்டை விடுகிறோம். அது கோயில், நமது திருத்தலம். அங்கு சுத்தமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுத்தமாக மறந்து விடுகிறோம்!
என்ன தான் நமது காணிக்கைகளை நிறைவேற்றி பக்தி பரவசத்தோடு வெளி வருகிறோமோ அந்த பரவசம் வீதிக்கு வரும் வரை கடைப்பிடிக்கப் பட வேண்டும். அது தான் முக்கியம்.
ஆமாம் குப்பை கூளங்களை கண்டபடி வீசி எறிவதை முதலில் நிறுத்த வேண்டும். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பயன் படுத்த வேண்டும். பொது கழிவறைகளை பொறுப்பாக பயன்படுத்த வேண்டும்.
இவைகள் எல்லாம் சராசரி மனித ஒழுக்கங்கள். அதுவும் பத்துமலைக்குப் போகிறவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகம். தாங்கள் வழிபடும் தெய்வத் திருதலத்தை இன்னும் பொறுப்போடு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை மட்டும் நாம் செய்துவிட்டால் நாம் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
இதுவே நமது பெருமை!

Wednesday, 5 February 2020
வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (37)
இந்த நிமிடமே உகந்த நேரம்!
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எதனையும் தள்ளிப் போடாதீர்கள். இது தான் நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இன்றைய வேலைகள் இன்றே செய்யப் பழக வேண்டும். நாளை வேண்டாம். அடுத்த நிமிடம் நாம் இருப்போமா, இருக்கமாட்டோமா என்னும் நிலையில் இருக்கும் நமக்கு "நாளை, அப்புறம், அடுத்த வாரம்" என்று தள்ளிப் போடுவதால் பெரும் குற்றம் செய்கிறோம்.
இந்த நிமிடம் நாம் இருப்பது உறுதி. அதனால் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் அல்லது இதனைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.
காலையில் வேலைக்குப் போகிறோம். போனதும் இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று ஒரு பட்டியல் போட வேண்டும். உடனடியாக செய்ய வேண்டிய வேலை அடுத்து முதலாவது, இரண்டாவது என்று அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து வேலைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நமக்குத் தேவையான் பொருள்கள் என்ன, எங்கே போய் வாங்க வேண்டும், காலையிலா மாலையிலா, பொருள்களை நேரடியாக நமது கடைகளைக்கே கொண்டு வருவார்களா, என்ன என்ன பொருள்களை வாங்க வேண்டும் என்று முன்னமையே தீர்மானித்து விட்டால் நமக்கு வேலை சுலபமாகிவிடும். இல்லாவிட்டால் "அது இல்லை! இது இல்லை!" என்று கடைசி நேரத்தில் அலை மோதிக் கொண்டு இருக்க வேண்டி வரும்!
நாம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய நினைக்கிறோம். கடைசியில் எந்த வேலையையும் செய்து முடிக்காமல் தடுமாறுகிறோம்! அது நம்முடைய தவறு.
நமது கடையில் என்ன பொருள்கள் தேவை என்பதை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் நமது பொருள்களை வெளியே சென்று தான் வாங்கி வருகிறோம். அதனால் ஒரு முறை போகும்போது நமது தேவைக்கு ஏற்ப அனைத்தையும் வாங்கி விடலாம்.
தொழிலில் உள்ளவர்களுக்கு இன்னும் பல சிக்கல்கள் உண்டு. பணத்தைப் போட வேண்டும், எடுக்க வேண்டும், கடனை அடைக்க வேண்டும், காசோலைகளை வெளியாக்க வேண்டும் என்று இப்படி பல நெருக்கடிகள் உண்டு.
அதனால் நீங்கள் நிதானத்தோடு செயல்பட வேண்டிய சூழல் வேண்டும். நிதானம் என்கிற போது ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் பல வேலைகளினால் மறந்து போகும் சூழல் உண்டு. அதன் மூலம் நமக்கு நட்டம் ஏற்பட வாய்ப்பும் உண்டு.
தினசரி எழுதி வைத்துக் கொண்டு, குறித்து வைத்துக் கொண்டு செயல்படும் வழக்கத்தை மேற் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்குத் தெரியும் உங்களின் தினசரி நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது.
தனது பணிகளைத் தினசரி எழுதி வைத்துச் செயல்படுபவன் எப்போதுமே வளர்ச்சியை நோக்கியே பயணிப்பான்!
இந்த நிமிடம், இந்த கணம் உண்மையானது! அனுபவியுங்கள்!

Tuesday, 4 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (36)
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஞாபகத்திற்கு வருகிறதல்லவா!
ஆமாம்! அது தான் வாழ்க்கை. நமது வேலைகளை நாம் சரியாக செய்ய வேண்டும். நமது கடமைகளைக் கடமை உணர்வோடு செய்ய வேண்டும்.எல்லாமே சரியாக செய்கிறோம் என்கிற போது அதற்கு மேலே நம்மால் என்ன செய்ய முடியும்?
கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் நம்மைச் சரியாக வழி நடத்துவார் என்கிற நம்பிக்கை வேண்டும். கடவுள் நமக்கு ஏன் விரோதமாக செயல்படப் போகிறார்? அதற்கு அவசியமில்லையே!
நாம் சரியாக செயல்படுகின்ற போது யாரும் ந்மக்கு எதிராக இருக்கப் போவதில்லை என்பதை நாம் நம்ப வேண்டும்.
இன்று நம்மைச் சுற்றியுள்ள பல பிரச்சனைகளுக்குக் காரணம் நாமே தான், வேறு யாருமல்ல. அது நமக்கும் தெரியும். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறோம்!
தவறானவர்களை ஆதரிக்கிறோம். கொள்ளையடிப்பவனைக் கோயில் கட்டி கும்பிடுகிறோம். யார் நல்லவன் யார் கெட்டவன் என்கிற தராதரம் தெரியாமல் அவனது காலில் விழுந்து வணங்குகிறோம்! அதனால் தான் நாம் எல்லாக் காலங்களிலும் அடிமை வாழ்வை வாழ வேண்டியுள்ளது.
காலில் விழுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒன்றே போதும் நாம் சரியான அடிமைகள் என்பதற்குச் சாட்சி. நாம் ஏன் காலில் விழுகிறோம். அவனிடம் இருந்து எதையோ நாம் எதிர்பார்க்கிறோம் என்பது தான் அதன் பொருள்.
பெரியோர்களின் காலின் விழுவதை யாரும் குறை சொல்லுவது இல்லை. அரசியல்வாதிகளின் காலில் விழுபவன் அயோக்கியன். அவன் பயந்து பயந்து ஒளிந்து ஒளிந்து வாழ்பவன். வேலையில் அரைகுறை. கடமை உணர்ச்சி இல்லாதவன். அயோக்கியர்களைச் சார்ந்து வாழ்பவன்.
ஆனால் சரியான வழியைத் தேர்ந்தெடுத்து தனது வேலைகளையும், கடமைகளையும் சரியாகக் கொண்டு செல்பவன் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு எல்லாக் காலங்களிலும் சரியான வழிகாட்டல் உண்டு. சுற்றுபுறமே அவனுக்கு ஆதரவாக இருக்கும்.
நமது காரியங்களை சரியாக செய்யும் போது நாம் துணிந்து சொல்லலாம்: என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

Monday, 3 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (35)
மீண்டும் ...மீண்டும்...சில விஷயங்கள்!
இந்த் வரிசையில் நீங்கள் படிக்கின்ற கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் சில வீஷயங்கள் வந்து கொண்டிருக்கும். அதனைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ஒரே காரணம் தான்.
நாம் படிக்கின்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய சூழல் உண்டு. இல்லாவிட்டால் நாம் மறந்து போவோம். அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
நாம் மிகவும் மறதி உள்ள சமூகம். எந்த விஷயமாக இருந்தாலும் நமது வசதிக்கு ஏற்ப நாம் மறந்து போகிறவர்கள்!
நேற்று நம்மை ஒருவன் இழிவாகப் பேசியிருப்பான். நமது சமூகத்தை இழித்துப் பேசியிருப்பான். நமது மொழியை இழித்துப் பேசியிருப்பான். ஆனால் அடுத்த நாள் நாம் அததனையையும் மறந்து அவனுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்போம்! தலைவனுக்குப் பணம் தொண்டனுக்குப் பிணம்!
நம்மை ரோஷம் கெட்ட சமூகமாக உருவாக்க நமது தலைவர்களே காரணமாக இருக்கிறார்கள். அது பரவாயில்லை, அது அவர்களின் பிழைப்பு! ஆனால் நமக்கு என்ன கேடு வந்தது? அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்பது என்ன சட்டமா?
தலைவர்களை அதுவும் மனநலன் இல்லாதவர்களையே இந்த சமுதாயம் தலைவர்களாக கொண்டிருக்கிறது! சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொள்ளையடிப்பது, தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களை வசப்படுத்துவது - இவைகளையெல்லாம் சராசரி மனிதன் கூட செய்யமாட்டான், மனநலன் கெட்டவனைத் தவிர!
அதனால் நமக்குச் செய்யப்படுகின்ற துரோகங்களை மிக எளிதில் மறந்து விடுகிறோம்.
அதனால் தான் மீண்டும் மீண்டும் சில செய்திகளை ஞாபகப்படுத்த வேண்டிய சூழல்.
கொஞ்சம் மன்னித்துக் கொள்ளுங்கள்!

Sunday, 2 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (34)
நாணயம் மனிதனுக்கு அவசியம்!
இது ஒரு பழைய சினிமா பாடல் கவிஞர் காமாட்சி சுந்தரம் எழுதிய பாடல். இந்தப் பாடலில் வரும் ஒரு நாணயத்தை விட்டுவிடுவோம்.
நாம் இங்கு பார்க்கும் நாணயம் என்பது நேர்மை மட்டுமே.
தொழில் சார்ந்து வாழ்பவர்களுக்கு எந்த அளவுக்கு நேர்மை தேவை என்பதை முன்பே எழுதியிருக்கிறேன். ஆனாலும் நம்மைச் சுற்றி பார்க்கும் போது எந்த ஒரு வியாபாரியும் நேர்மையோ, நாணயத்தையோ பார்ப்பதாகத் தெரியவில்லை என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது!
உண்மை தான். அதற்காக வியாபாரிகள் அனைவரும் நாணயமற்றவர்கள் என்னும் எண்ணத்தை நாம் கை விட வேண்டும்.
நாணயம் அல்லாத வியாபாரிகளை மக்கள் நம்புவதில்லை. ஒருமுறை ஒருவர் நம்மை ஏமற்றினால் அடுத்து முறை நாம் அந்த வியாபாரியிடம் போகப்போவதில்லை என்று நாம் உறுதியாக இருப்போம். அப்படித்தான் நாம் நடந்து கொள்ளுகிறோம். ஒருவர் ஒருமுறை ஏமாற்றலாம்.பலமுறை ஏமாற்றுவது என்பது இயலாத காரியம்.
நான் பலமுறை பலரிடம் ஏமாந்திருக்கிறேன். அத்தோடு சரி. மீண்டும் அந்த பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.
வியாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் நாணயமற்றவர்கள் என்று நினைப்பது தவறு. அப்படி இருக்கவும் முடியாது. ஒருமுறை தானே ஏமாற்ற முடியும். அப்புறம்? ஒரு வாடிக்கையாளரை எத்தனை முறை ஏமாற்ற முடியும்?
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நாணயமற்ற முறையில் தொழிலில் ஈடுபடுபவர்கள் பின்னர் தோல்வி தான் அடைவர். அதாவது அவர்கள் நினைத்தவை எதனையும் அவர்கள் அடையாமல் போய்விடுவர். நாணயம் அற்றவர் என்றால் அது திருட்டுத்தனத்திற்குச் சமம்.
ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் "சீனர்கள் தோல்வி அடைவதில்லையே!" என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது உண்மை அல்ல. அவர்கள் எங்கே தோல்வி அடைகிறார்கள் என்று நமக்குத் தெரிவதில்லை! அவ்வளவு தான். நம் கண்களுக்கு அது பளிச்சென்று தெரியவில்லை.
கவிஞர் சொன்னது போல நாணயம் மனிதனுக்கு மிகவும் அவசியம். அதுவும் தொழில் செய்வோருக்கு இன்னும் அதிகம் அவசியம். நாணயத்தைக் கெடுத்து உங்கள் தொழிலையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
நாணயம் மிகவும் அவசியம்!

Saturday, 1 February 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (33)
உணவகங்கள் மட்டும் தானா?
ஒரு காலக் கட்டத்தில் இந்தியர்கள் அதிகமாக வர்த்தகத்தில் ஈடுப்பட்ட ஒரு துறை என்றால் என்றால் அது உணவகங்களாகத்தான் இருக்க முடியும். அதை அடுத்து மளிகைக் கடைகள்.
உணவகங்கள் எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதனை அடுத்து மளிகைக் கடைகளும் இருந்தன. நாளடைவில் மளிகைக் கடைகள், சீனர்களின் ஆதிக்கத்தினால் மளிகைக்கடைகள் ஒன்றுமில்லாமல் போயின.
நான் பழக்கப்பட்ட நகரத்தில் ஒரே ஒரு மளிகைக்கடை இருந்து இப்போது இல்லாது போயிற்று! ஆனால் இப்போது மளிகைக்கடைகள் மாறி பேரங்காடி வடிவத்தில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொள்ளூகின்றன. இவைகள் கூட பெரும்பாலும் இந்தியப் பொருள்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதே போல தொழிலில் உள்ளவர்களும் அந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தொழிலில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் இங்கே என்ன நடந்தது என்றால் ஏற்கனவே தொழில் செய்தவர்கள் காணாமல் போனார்கள் என்ப்து தான்!
இருந்தாலும் அந்த உணவகங்கள் நடத்தியவ்ர்களை மளிகைக்கடைகளை நடத்தியவர்களை நாம் பாராட்டுவோம். இவர்கள் நம் முன்னோடிகள். முன்னோடிகள் மட்டும் அல்ல அவர்கள் தைரியசாலிகள். தொழிலிலுள்ள ஆபத்துக்களை அறிந்தும் அவர்கள் துணிவோடு தொழிலில் இறங்கினார்களே! அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். அதுவும் சீனர்களிடமிருந்து தான் கடைக்கான பொருள்களை அவர்கள் கொள்முதல் செய்ய வேண்டும்! பல இடையூறுகளுக்கு இடையே அவர்கள் தொழில் செய்திருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் ஏன் உணவகங்கள், மளிகைக்கடைகளில் மட்டுமே நமது முன்னோடிகள் கவனம் செலுத்தினார்கள்? அது கல்வி குறைபாடாக இருக்குமோ! அவர்கள் இந்தியர்களை நம்பியே, அதில் மலாய்க்காரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம், வியாபாராம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் தோட்டப்புறங்களில் செயல்பட்ட மளிகைக்கடைகள் ஓரளவு சுதாரித்துக் கொண்டன. இந்தியர்களை நம்பிய உணவகங்களுக்கும் எந்த சேதாரமும் இல்லை. அதனால் தான் அந்த நேரத்தில் பெரும்பாலும் உணவகங்களிலேயே அதிகம் முதலீடு செய்தனர். கொஞ்சம் நல்ல நிலையில் இருந்தவர்கள் தங்க வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த முன்னோடிகளை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். அப்போதும் இந்த உணவகங்களே நம்மவர்களுக்குக் கைக் கொடுத்தன. இப்போதும் அதே நிலை தான். ஆனால் இப்போது நமது இளைஞர்கள் அதிகமான பலவிதமான தொழில்களில் ஈடுபடும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர். அந்த மாற்றம் தான் நடந்து கொண்டிருக்கிறது.
உணவகங்கள் தான் இப்போதும் போட்டியின்றி நமக்குக் கைக் கொடுக்கின்றன. ஆனாலும் ஒரு வித்தியாசம். இப்போது நமது உணவகங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் உணவகங்களாக மாறிவிட்டன. அதுவே நமது பெருமை!
எது எப்படி இருப்பினும் நமது இபோதைய தலைமுறை பல தொழில்களிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். அதுவும் நமக்குப் பெருமை தான்!

Subscribe to:
Posts (Atom)