நமது நிலை என்ன?
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் கதாநயகன் 95 வயது டாக்டர் மகாதிர் என்பது நமக்குத் தெரிகிறது. அத்தோடு சரி நமது பங்கு. அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அரசியல்வாதிகள் தான்.
அரசியல்வாதிகளிடம் கூனிக் குறுகி கூச்சம் இல்லாமல் பிடுங்கி தின்பதற்கென ஒரு கூட்டம் எப்போதும் சுத்திக் கொண்டிருக்கும்.
ஆனால் சீனர்களிடம் இந்த நிலை இல்லை. காரணம் அவர்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வியாபாரம் உண்டு. யார் காலிலும் விழ வேண்டும் என்னும் நிலை இல்லை! தீடீர் தேர்தல் வந்தால் கூடுதலாகச் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்!
நமது நிலை என்ன என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாம் ஒரு சீறிய வியாபாரம் செய்தாலே போதும் நாம் ஒரு "தொழிலதிபர்: என்கிற அடைமொழியைக் கொடுத்து விடுகிறார்கள்!
வியாபாரத் துறையில் உள்ளவர்கள் அரசியலில் ஒரு பார்வையாளனாகவே இருப்பது நல்லது. தொழிலதிபர் ஆகி விட்டால் கவலை இல்லை. உங்களுக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டியதில்லை. சராசரியாக வளர்ந்து வரும் வியாபாரிகளுக்கு அரசியல் என்பது அளவோடு இருக்க வேண்டும். வெளியில் உங்களின் கருத்தைச் சொல்லக் கூட உங்களுக்கு உரிமையில்லை! அது தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் "ஆமாஞ்சாமி" போட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சீனர்கள் வெளிப்படையாக அரசியலை விமர்சிப்பதில்லை. அது வர்த்தகத்திற்குக் கேடு என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதல்ல. சீனர்களுக்கு ஏதேனும் - குறிப்பாக தங்களது வர்த்தகத்துக்கோ அல்லது மொழிக்கோ - பாதிப்போ எற்படும் என்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்! அரசியல்வாதிகளுக்கும் சரியான அழுத்தத்தைக் கொடுப்பார்கள். நம்மால் அப்படி எல்லாம் செய்ய முடியாது. காட்டிக் கொடுப்பதற்குக் கட்டபொம்மன்கள் கூடவே இருக்கிறார்கள்!
நாம் சொல்ல வருவது எல்லாம் இது தான். நாம் சிறிய அளவில் வரத்தகத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அரசியலைப் பேசி நம்முடைய பொருளாதாரத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான்.
நாம் வளர வேண்டும். நமக்காக பேசுபவர்களைத் தெர்ந்தெடுக்க வேண்டும். அதனைச் சரியாக செய்தால் போதும். சமுதாயத் துரோகிகளை நிறைவே கண்டு விட்டோம். இனி மேலும் ஏமாறக் கூடாது. அமைதியாக இருந்து நமது கடமைகளை நிறை வேற்றுவோம்.
எப்போதும் போல் நமது நிலை சிறப்பாகவே இருக்கிறது. சிறப்பாகவே வாழ்வோம்!
No comments:
Post a Comment