Saturday 8 February 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (40)

நிமிர்ந்த நடையும்......!

நிமிர்ந்த நடை என்றால் என்ன என்று கேட்கின்ற நிலையில் நமது பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன!

மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து படித்து வெளியே வருவது என்பது ஒன்றும் அதிசயமல்ல. வெளி உலகில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள் என்பது தான் சுவாரஸ்யம்!

ஒரு மாணவன் - கல்லூரி காலங்களில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பது எனக்குத் தெரியும். அவன் திறமையான மாணவன் என்று சொல்லக் கேள்வி. நல்ல விஷயம். அவன் கல்லூரிக் காலங்களில் அவனுடைய தலைமுடியை நன்றாக சீவி வாரி கொண்டை போட்டுக் கொள்ளுவான்!  காதில் கடுக்கன் போட்டிருப்பான்!  சரி, இளமைக் காலத்தில் இதெல்லாம் எதிர்பார்ப்பது தான். அதுவும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். அப்படித்தான் பெரும்பாலான இளைஞர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்!

இதனையெல்லாம் தவறு என்று நாம் சொல்ல முடியாது. எல்லாக் காலங்களிலும் இளைஞர்கள் இப்படித்தான் மாற்றத்தை ஓடி தேடி கொண்டு வந்திருக்கிறார்கள்!

எனது இளமைக் காலத்தில் நான் "பாத்தேக்" சட்டை அணிவதைக் கூட தவிர்த்திருக்கிறேன்.  அப்போது, அதன் ஆரம்பக்காலக் கட்டத்தில், பாத்தேக் அணிந்தால் அவனை ரௌடி என்று முத்திரைக் குத்துவார்கள். அதனால் "நல்ல" பிள்ளைகளான நாங்கள் பாத்தேக் சட்டைகளை எப்படி அணிய முடியும்?  ஆனாலும் நாளடைவில் நாங்களும் பாத்தேக் சட்டைகளை அணிந்து கொள்வதை தவிர்க்க முடியவில்லை!  என்ன சொல்ல வருகிறேன் என்றால் புதுமையாக எதைச் செய்தாலும் அப்போது அவர்களுக்கு ஏதோ ஒரு பட்டப் பெயர் வந்து சேரும் என்பது தான்!

இப்போது இவர்கள் எல்லாம் தலைவாரி பூச்சூடி கடுக்கன்களோடு உலா வ்ரும்போது "மச்சி, மச்சான்!" சரியாகாத்தான் பொருந்துகிறது!  ஆனால் அந்த நிமிர்ந்த நடை என்பது மச்சிகளுக்கும் இல்லை, மச்சான்களுக்கும் இல்லை என்பது தான்.

 இவைகளையெல்லாம் படிக்கும் காலத்திலேயே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுங்கள்.  வேலை செய்யும் காலத்தில் ஆண்களாக நடந்து கொள்ளுங்கள்,  வெளி உலகம் என்பது வேறு. உங்களை ஆண்களாகத்தான் பார்ப்பார்கள். 

நான் மேலே சொன்ன இளைஞன் அவன் ஆணாக மாறாதவரை அவனுக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை! வெளி உலகை அறிந்த பின்னர் அவன் தன்னையே மாற்றிக் கொண்டான். 

வெளி உலகக்கு வந்து விட்டால் "நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்" தானாக வந்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் தளர்ந்த நடையும், கீழ் நோக்கும் பார்வையும் வந்து சேரும்!

No comments:

Post a Comment