Thursday 6 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (38)

iஇது தான் நமது  பெருமை!

நாம் மிக மிக உயர்ந்த இனம். நம்மோடு ஒப்பிடும் அளவுக்கு எந்த இனமும் இல்லை என்பது பொய்யல்ல!  ஆனால் பல காரணங்களால் நாம் நம்பியவர்களே நம்மைக் குப்புறத் தள்ளி விட்டார்கள். 

ஆனால் எத்தனை நாளைக்குத் தான் அதனையே நாம் 
சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?  நாம் எழுந்து நிற்க வேண்டாமா? 

இப்போதும் கூட தனி தனி ஆளாக நம்மை ஜெயிக்க எந்த கொம்பனும் இல்லை. ஆனாலும் நாம் தோல்வியாளர்கள் என்று தான் கூறப்படுகின்றோம். காரணம் மற்றவன் கூட்டு முயற்சியில் நம்மைவிட முன்னணியில் நிற்கிறான்.

எப்படியோ நாமும் இந்த மாறுகின்ற உலகில் மாறி வருகிறோம்.  வருகின்றோம் தானே? அதனை மெய்ப்பிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. 

தைப்பூச பெருவிழா நாளை (8-2-2019))  அன்று.  நாம் வளர்ந்த சமூகம். படித்த சமூகம். நாம் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் சமூகம.

இதனை நாம் மெய்ப்பிக்க வேண்டும். தைப்பூசம் என்றால் தமிழர்கள் அதிகம் கூடுகின்ற இடம். தமிழர்களோடு மலையாளிகள், தெலுங்கர்கள், வட இந்தியர்கள் இப்படி பல தரப்பட்ட நிலையில் உள்ள இந்து பெரும் மக்கள் கூடுகின்ற இடம்.  பத்துமலை திருக்கோயில் என்றால் அது ஒரு புனிதத் தலம்.

புனிதத் தலத்திற்கு போகின்ற நமக்கு சுத்தம் என்பது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். நாம் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப நமது காணிக்கைகளைச் செலுத்துகிறோம். வழிப்பாட்டில் கலந்து கொள்ளுகிறோம். அனைத்தையும் எந்த பிழையும் ஏற்படாதவாறு ந்மது வேண்டுதலை நிறைவேற்றுகிறோம். பக்தி பழமாக வெளியே வருகிறோம். 

அனைத்தும் சரி. ஒரு விஷயத்தில் நாம் கோட்டை விடுகிறோம். அது கோயில், நமது திருத்தலம். அங்கு சுத்தமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுத்தமாக மறந்து விடுகிறோம்!

என்ன தான் நமது காணிக்கைகளை நிறைவேற்றி பக்தி பரவசத்தோடு வெளி வருகிறோமோ அந்த பரவசம் வீதிக்கு வரும் வரை கடைப்பிடிக்கப் பட வேண்டும். அது தான் முக்கியம். 

ஆமாம் குப்பை கூளங்களை கண்டபடி வீசி எறிவதை முதலில் நிறுத்த வேண்டும். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பயன் படுத்த வேண்டும். பொது கழிவறைகளை பொறுப்பாக பயன்படுத்த வேண்டும். 

இவைகள் எல்லாம் சராசரி மனித ஒழுக்கங்கள். அதுவும் பத்துமலைக்குப் போகிறவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகம். தாங்கள் வழிபடும் தெய்வத் திருதலத்தை இன்னும் பொறுப்போடு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை மட்டும் நாம் செய்துவிட்டால் நாம் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

இதுவே நமது பெருமை!

No comments:

Post a Comment