Monday 3 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (35)

மீண்டும் ...மீண்டும்...சில விஷயங்கள்!

இந்த் வரிசையில் நீங்கள் படிக்கின்ற கட்டுரைகளில்  மீண்டும் மீண்டும் சில வீஷயங்கள் வந்து கொண்டிருக்கும்.  அதனைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.  ஒரே காரணம் தான்.

நாம் படிக்கின்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய சூழல் உண்டு.   இல்லாவிட்டால் நாம் மறந்து போவோம். அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நாம் மிகவும் மறதி உள்ள சமூகம். எந்த விஷயமாக இருந்தாலும் நமது வசதிக்கு ஏற்ப நாம் மறந்து போகிறவர்கள்!  

நேற்று நம்மை ஒருவன் இழிவாகப் பேசியிருப்பான்.  நமது சமூகத்தை இழித்துப் பேசியிருப்பான். நமது மொழியை இழித்துப் பேசியிருப்பான். ஆனால் அடுத்த நாள் நாம் அததனையையும் மறந்து  அவனுக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்போம்! தலைவனுக்குப் பணம் தொண்டனுக்குப் பிணம்!

நம்மை ரோஷம் கெட்ட சமூகமாக உருவாக்க நமது தலைவர்களே காரணமாக இருக்கிறார்கள். அது பரவாயில்லை, அது அவர்களின் பிழைப்பு! ஆனால் நமக்கு என்ன கேடு வந்தது?  அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்பது என்ன சட்டமா? 

தலைவர்களை அதுவும் மனநலன் இல்லாதவர்களையே   இந்த சமுதாயம் தலைவர்களாக கொண்டிருக்கிறது!  சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொள்ளையடிப்பது, தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களை வசப்படுத்துவது - இவைகளையெல்லாம் சராசரி மனிதன் கூட செய்யமாட்டான், மனநலன் கெட்டவனைத் தவிர!

அதனால் நமக்குச் செய்யப்படுகின்ற துரோகங்களை மிக எளிதில் மறந்து விடுகிறோம்.

அதனால் தான் மீண்டும் மீண்டும் சில செய்திகளை ஞாபகப்படுத்த வேண்டிய சூழல். 

கொஞ்சம் மன்னித்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment