பொறாமை வேண்டாம்
பொறாமைப் படுவது என்பது மிகவும் கேவலமான ஒரு பழக்கம்.
யார் மீது பொறாமைப்பட வேண்டாம். நம்மை விட ஒருவர் உய்ர் பதவியில் இருக்கலாம். வாழ்த்தப் பழகுங்கள்!
நம்மோடு படித்தவன் நாலு பேர் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்கிறான். அவனை நாமும் மதிப்போம்!
நம்மை விட தகுதியற்ற ஒருவன் தகுதி இல்லாத இடத்தில் இருக்கிறான். அதனாலென்ன! அவனிடம் நம்மை விட ஏதோ ஒரு தகுதி மேலாக இருக்கிறது என்பதை எண்ணி அவனைப் பாராட்டுவோம்!
நமக்குப் பின்னால் தொழில் தொடங்கியவன் - அவன் வளர்ந்து விட்டான் நாம் இன்னும் பின்னாலேயே இருக்கிறோம் அவன் மீது பொறமை வருகிறது. அவனது திறமையை நாம் உணர்ந்து கொள்ளவில்லை. அவனைத் தவறாகப் புரிந்து கொண்டோம். அவனை மேலும் வளர வாழ்த்துவோம்!
நாம் மனிதர்கள். யாரோ எவரோ, தெரிந்தவரோ தெரியாதவரோ, யாராக இருந்தாலும் சரி - ஃ நம்மை விட மேலான நிலையில் இருந்தால் நமக்குப் பொறாமை வருகிறது! தேவையற்ற பொறாமை! அதுவும் சொந்தக்காரன் ஒருவன் நம்மைவிட மேல் நிலையில் இருக்கிறான் என்றால் இன்னும் பொறாமை அதிகமாக வருகிறது. குடும்பத்திற்குள்ளேயே பொறாமை தலைவிரித்தாடுகிறது.
மற்றவர் மீது பொறாமை வரும் போது நம்மை நாம் தாழ்வாக நினைத்துக் கொள்ளுகிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பொறாமை உணர்வு நம்மைத் தான் பாதிக்கிறதே தவிர நாம் பொறாமைப் படுகிறோமே அவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை!
,மற்றவர் மீது பொறமைப்பட்டு நமது வியாதிகளைத் தான் கூட்டிக் கொள்ளுகிறோமே தவிர அவர்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை!
அதை விட அவர்களை வாழ்த்துங்கல். பெருமைப் படுத்துங்கள்! அவர்களின் திறமையை மதியுங்கள்.
அப்படி செய்வதின் மூலம் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுகிறீர்கள். நீங்களும் பெருமைக்குரியவராக மற்றவர்களின் பார்வையில் தென்படுகிறீர்கள்.
மற்றவர்களை நாம் வாழ்த்தும் போது நாமும் வாழ்த்தப் பெறுகிறோம். பெருமைப்படுத்தும் போது நாமும் பெருமைப்படுத்தப்படுகிறோம். மற்றவர்களை உயர்த்தும் போது நாம் உயர்த்தப் படுகிறோம்!
நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்குத் திரும்பி வரும். பொறமையைக் கொடுத்தால் நம் மீதும் பொறாமை தான் திரும்பி வரும்!
பொறாமையின்றி வாழ்வோம்! வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வோம்!
No comments:
Post a Comment