இனி தமிழன் தலை நிமிர்வான்!
காலையில் படித்த செய்தி ஒன்றே போதும். தமிழன் தலை நிமிர்வான் என்னும் நம்பிக்கையை உறுதி செய்து விட்டது.
ஆமாம் "மலேசிய கினி" இணையத்தளம் வெளியிட்ட அந்த செய்தி மனதைக் குளிர வைத்துவிட்டது.
"குறைவான குப்பைகளோடு தைப்பூசம்" கொண்டாடப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது. தைப்பூசம் என்றாலே இலட்சக்கணக்கான பக்தர்கள் நம் கண் முன்னே வருகிறார்கள். அங்கே குப்பைகளைக் குறைப்பது என்பது இயலாத காரியம் என்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அது வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது!
இதற்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்கள் நமது வானொலி நிலயத்தினர். அடிக்கடி அறிவிப்புக்கள் கொடுத்து மக்கள் மனதில் "குப்பை போடக் கூடாது!" என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டனர். வாழ்த்துகள் நண்பர்களே!
இந்த ஆண்டு பெரும் அளவில் குப்பைகளைக் குறைத்தற்காக நன்றி! ஆனால் அது போதாது. அதனை 0 விழுக்காட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
பத்துமலை திருவிழா மட்டும் அல்ல எல்லாப் புனிதத் திருத்தலங்களிலும் அது கடைப் பிடிக்க வேண்டும். அத்தோடு பொது இடங்கள், சாலைகள் எதுவாக இருந்தால் இந்த சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை.
இந்த 0 விழுக்காடு சுத்தம் என்பதற்கு நமது பங்களிப்பு என்ன? முக்கியமாக பெற்றோர்கள். பிள்ளைகளிடம் குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். இங்கு முக்கியமாக நான் குறிப்பிடுவது பெற்றோர்கள் தான் தண்டனை பெற வேண்டியவர்கள்.! காரணம் பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு அந்த வழிகாட்டுதல் இல்லை! அப்பனே குடித்துவிட்டு போத்தல்களை மக்கள் நடக்கும் பாதையில் வீசி எறிகிறான்! என்ன செய்வது? ஆனால் அதனையும் மீறி சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் நாம் பாராட்டுக்குரியவர்கள் தானே!
எது எப்படியோ நாம் மாறி வருகிறோம்! இனியும் தொடருவோம்! நாம் தலை நிமிர்வோம்!
No comments:
Post a Comment