Tuesday 4 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (36)

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!  கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஞாபகத்திற்கு வருகிறதல்லவா! 

ஆமாம்! அது தான் வாழ்க்கை.  நமது வேலைகளை நாம் சரியாக செய்ய வேண்டும். நமது கடமைகளைக் கடமை உணர்வோடு செய்ய வேண்டும்.எல்லாமே சரியாக செய்கிறோம் என்கிற போது அதற்கு மேலே நம்மால் என்ன செய்ய முடியும்?

கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் நம்மைச் சரியாக வழி நடத்துவார் என்கிற நம்பிக்கை வேண்டும். கடவுள் நமக்கு ஏன் விரோதமாக செயல்படப் போகிறார்?  அதற்கு அவசியமில்லையே!

நாம் சரியாக செயல்படுகின்ற போது யாரும் ந்மக்கு எதிராக இருக்கப் போவதில்லை என்பதை நாம் நம்ப வேண்டும்.

இன்று நம்மைச் சுற்றியுள்ள பல பிரச்சனைகளுக்குக் காரணம் நாமே தான், வேறு யாருமல்ல. அது நமக்கும் தெரியும். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறோம்!

தவறானவர்களை ஆதரிக்கிறோம். கொள்ளையடிப்பவனைக் கோயில் கட்டி கும்பிடுகிறோம். யார் நல்லவன் யார் கெட்டவன் என்கிற தராதரம் தெரியாமல் அவனது காலில் விழுந்து வணங்குகிறோம்! அதனால் தான் நாம் எல்லாக் காலங்களிலும் அடிமை வாழ்வை வாழ வேண்டியுள்ளது.

காலில் விழுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒன்றே போதும் நாம் சரியான அடிமைகள் என்பதற்குச் சாட்சி.  நாம் ஏன் காலில் விழுகிறோம். அவனிடம் இருந்து எதையோ நாம் எதிர்பார்க்கிறோம் என்பது தான் அதன் பொருள். 

பெரியோர்களின் காலின் விழுவதை யாரும் குறை சொல்லுவது இல்லை. அரசியல்வாதிகளின் காலில் விழுபவன் அயோக்கியன். அவன் பயந்து பயந்து ஒளிந்து ஒளிந்து வாழ்பவன்.  வேலையில் அரைகுறை. கடமை உணர்ச்சி இல்லாதவன். அயோக்கியர்களைச் சார்ந்து வாழ்பவன்.

ஆனால் சரியான வழியைத் தேர்ந்தெடுத்து தனது வேலைகளையும், கடமைகளையும் சரியாகக் கொண்டு செல்பவன் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு எல்லாக் காலங்களிலும் சரியான வழிகாட்டல் உண்டு.  சுற்றுபுறமே அவனுக்கு ஆதரவாக இருக்கும்.

நமது காரியங்களை  சரியாக செய்யும் போது நாம் துணிந்து சொல்லலாம்:  என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

No comments:

Post a Comment