Saturday 1 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (33)

உணவகங்கள் மட்டும் தானா?

ஒரு காலக் கட்டத்தில் இந்தியர்கள் அதிகமாக  வர்த்தகத்தில் ஈடுப்பட்ட ஒரு துறை என்றால் என்றால் அது உணவகங்களாகத்தான் இருக்க முடியும்.  அதை அடுத்து மளிகைக் கடைகள். 

உணவகங்கள் எல்லா சிறிய பெரிய நகரங்களிலும்  இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அதனை அடுத்து மளிகைக் கடைகளும் இருந்தன. நாளடைவில் மளிகைக் கடைகள்,  சீனர்களின் ஆதிக்கத்தினால் மளிகைக்கடைகள் ஒன்றுமில்லாமல் போயின.

நான் பழக்கப்பட்ட நகரத்தில் ஒரே ஒரு மளிகைக்கடை இருந்து இப்போது இல்லாது போயிற்று!   ஆனால் இப்போது மளிகைக்கடைகள் மாறி பேரங்காடி வடிவத்தில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொள்ளூகின்றன. இவைகள் கூட பெரும்பாலும் இந்தியப் பொருள்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதே போல தொழிலில் உள்ளவர்களும் அந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தொழிலில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் இங்கே என்ன நடந்தது என்றால் ஏற்கனவே தொழில் செய்தவர்கள் காணாமல்  போனார்கள் என்ப்து தான்!

இருந்தாலும் அந்த உணவகங்கள் நடத்தியவ்ர்களை மளிகைக்கடைகளை நடத்தியவர்களை நாம் பாராட்டுவோம். இவர்கள் நம் முன்னோடிகள். முன்னோடிகள்  மட்டும் அல்ல அவர்கள் தைரியசாலிகள். தொழிலிலுள்ள ஆபத்துக்களை அறிந்தும் அவர்கள் துணிவோடு தொழிலில் இறங்கினார்களே! அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். அதுவும் சீனர்களிடமிருந்து தான் கடைக்கான பொருள்களை அவர்கள் கொள்முதல் செய்ய வேண்டும்!  பல இடையூறுகளுக்கு இடையே அவர்கள் தொழில் செய்திருக்கிறார்கள். 

அப்போதெல்லாம் ஏன் உணவகங்கள், மளிகைக்கடைகளில் மட்டுமே நமது முன்னோடிகள் கவனம் செலுத்தினார்கள்?  அது கல்வி குறைபாடாக இருக்குமோ!  அவர்கள் இந்தியர்களை நம்பியே, அதில் மலாய்க்காரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம், வியாபாராம் செய்திருக்கிறார்கள். 

ஆனால் தோட்டப்புறங்களில் செயல்பட்ட மளிகைக்கடைகள் ஓரளவு சுதாரித்துக் கொண்டன.  இந்தியர்களை நம்பிய உணவகங்களுக்கும் எந்த சேதாரமும் இல்லை. அதனால் தான் அந்த நேரத்தில் பெரும்பாலும் உணவகங்களிலேயே அதிகம் முதலீடு செய்தனர். கொஞ்சம் நல்ல நிலையில் இருந்தவர்கள் தங்க வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த முன்னோடிகளை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். அப்போதும் இந்த உணவகங்களே நம்மவர்களுக்குக் கைக் கொடுத்தன. இப்போதும் அதே நிலை தான். ஆனால் இப்போது நமது இளைஞர்கள் அதிகமான பலவிதமான தொழில்களில் ஈடுபடும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர்.  அந்த மாற்றம் தான் நடந்து கொண்டிருக்கிறது.

உணவகங்கள் தான் இப்போதும் போட்டியின்றி நமக்குக் கைக் கொடுக்கின்றன. ஆனாலும் ஒரு வித்தியாசம். இப்போது நமது உணவகங்கள் அனைத்து  மலேசியர்களுக்கும் உணவகங்களாக மாறிவிட்டன.  அதுவே நமது பெருமை!

எது எப்படி இருப்பினும் நமது இபோதைய தலைமுறை பல தொழில்களிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். அதுவும் நமக்குப் பெருமை தான்!

No comments:

Post a Comment