Thursday 13 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (45)

வாழ்ந்து காட்டுவோம்  வாரீர்!

வாழ்ந்து காட்டுவோம்.  நாம் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த இனம்.  வீழ்ந்த இனம் அல்ல. 

ஒரு காலக் கட்டத்தில் வெள்ளைக்காரன் நம்மை நேர்மையற்ற முறையில் வீழ்த்தினாலும் அதற்காக நாம் ஓடி ஒளிந்த இனம் அல்ல.  ஏதோ ஒரு சிலரைத் தான் அவனால் வீழ்த்த முடிந்ததே தவிர இந்த தமிழினத்தை அவனால் வீழ்த்த முடியவில்லை!

நமது இனம் தலை நிமிர்ந்து வாழ பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளுவதே ஒரே வழி.  

நமக்குப் பொருளாதார பலம் இருக்க வேண்டும். அது தான் மற்ற இனத்தவரிடையே நம்மை உயர்த்திக் காட்டும்.  இன்று நமது அரசாங்கமே நம்மை தாழ்த்திக் காட்டுகிறது.  குடியுரிமை பிரச்சனையாகட்டும், கல்வி ஆகட்டும் நம்மால் எதிர்பார்த்தபடி எதுவும் ஆகவில்லை!  ஓர் இந்திய வம்சாவளியான டாக்டர் மகாதிர் கூட தன்னை பூமிபுத்ரா என்று காட்டிக் கொள்ள நமது இனத்தை அவமானப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். அதற்கு விடுதலைப்புலிகள் என்பது ஒன்றே போதுமான சான்றாகும்! 

நாம் இப்போது அவமானப்படுவதற்கு ஒரே காரணம் நமது பொருளாதார பலவீனம் மட்டுமே!

நம்மை இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறார்களே இதனையே சீன சமூகத்தினரிடம் இந்த வீராப்பைக் காட்ட முடியுமா? காட்டித்தான் இருக்கிறார்களா? இதுவரை அவர்களால் அப்படி செய்ய முடியவில்லையே! ஏன்? ஒரே காரணம் சீனர்களின் பொருளாதார பலம் தான்!

சீனர்கள் எல்லாக் காரியங்கலிலும் மௌனம் காட்டுகிறார்கள். ஆர்ப்பாட்டம் பண்ணுவதில்லை. அரசாங்கத்தை  எதிர்ப்பதில்லை.  ஆனால் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அவைகள் அனைத்தும் கிடைத்து விடுகிறது.  நமக்கு அந்த பணமும் இல்லை, பலமும் இல்லை!

இதோ இப்போது நமது நேரம்.  படித்து விட்டோம் வேலை கிடைக்கவில்லை! அதற்காக  தலையிலா கையைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா? 

சிறிய அளவிலாவது ஒரு தொழிலைத் தொடங்கி விடுங்கள்.   வெறுமனே சோம்பித் திரியாதீர்கள்!

வீழ்ந்து விட்டோம்! அது அவமானமல்ல! வீழ்ந்து கிடப்பது தான் அவமானம்!

No comments:

Post a Comment