Tuesday 11 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (43)

கடற் சார்ந்த பயிற்சிகள் 

இன்றைய சூழலில் நம்மைப் பொறுத்தவரை கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்த்க்கூடிய பலம் பொருந்திய  சாதனம்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், முன்னேற வேண்டும் என்பதெல்லாம் நல்ல சிந்தனைகள் தான்.

ஆனால் இவற்றுக்கெல்லாம் சரியான வழிகாட்டியாக இருப்பது கல்வி ஒன்று தான்.

நம்முடைய இளைஞர்களில் பலர் கடற் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் அதற்கான வழிகாட்டுதல் இல்லை என்பது வருத்தத்திற்குரியதே.

இப்போது இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் துறையில் இயங்கும் மித்ரா அமைப்பின் மூலம் கடற்சார்ந்த பயிற்சி அளிக்கப்பட  விருப்பதாக அறிவிப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய மாணவர்களுக்கு நூறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக மித்ரா அமைப்பு கூறுகிறது.

நாம் முன்னேறுவதற்கு என்ன என்ன தகுதிகள் நமக்குத் தேவையோ அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா. தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ளாதவரை நமது இனம் எடுபிடி வேலைகளுக்குத் தான் இலாயக்கு என்று முத்திரைக் குத்தப்படும்.

இன்றைய நிலையில் நமது நாட்டின் மூன்று பெரிய இனங்களில் மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் யார் என்று தெரியாதா?  எல்லாம் தெரிந்தது தான்! நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! ஒரே காரணம் தான். 

அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகளில் பங்கு பெறுவதில்லை."நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுக்கிறோம்,  சாப்பாடு போடுகிறோம், தங்க இடம் கொடுக்கிறோம்! வாங்க! வாங்க!" என்று அழைத்தாலும் கொஞ்சம் கூட நகர மாட்டோம்! "பிள்ளை எங்களை விட்டுப் போனால் கெட்டுப் போவான்!"  என்று அப்பன் சொல்லுகிறான்! என்னடா இனம இது!

எந்த ஒரு திறனும இல்லாமல் எந்த வேலையைத் தான் உங்களால் செய்ய முடியும்?  மீண்டும் தோட்டங்களுக்குப் போய் பால் மரத்தை வெட்டப் போகிறாயா?

மாணவ மணிகளே படிப்பு விஷயத்தில் பெற்றோர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.  உங்களின் வருங்காலத்தை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கல்வி வேண்டும். ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர். ஒரு எஞ்சினியர் - போன்ற துறைகளில் தேர்ச்சி பெறா விட்டாலும் மற்ற துறைகளில் வெற்றி பெற அரசாங்கம் நிறைய வாய்ப்புக்களைக் கொடுக்கின்றது.  அவைகளைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். 

முன்னேற வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஏதோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து நீங்கள் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். 

இதோ இப்போது இந்த நேரத்தில் கடற் சார்ந்த பயிற்சிகள் பெற வாய்ப்புக்கள் வந்திருக்கின்றன. மித்ரா மூலம் இந்த வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

மேலும் விபரங்களுக்கு: MITRA  - TEL.NO: 03-88866262 / 03-88866322 

வாழ்த்துகள்!
     

No comments:

Post a Comment