Wednesday 26 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (57)

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

வியாபாரத் துறையில் உள்ளவர்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்குவது ஒன்றும் புதிதல்ல. சிக்கல்கள் வரத்தான் செய்யும்.  வரட்டுமே! அதனைச் சரி செய்வது தான் நமது வேலை!

சீனர்கள் காலங்காலமாக என்னன்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் வியாபாரம் என்பதாக அவர்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள். நாமும் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் தீடீரென்று அடித்துக் கொள்ளுவார்கள் நாளை கூடிக் கொள்ளுவார்கள்.   அப்படி செயவதில் அவர்களுக்கு இலாபம் உண்டு.   ஒன்று பண வரவுண்டு அல்லது பதவி  வரம் உண்டு. 

நமது நிலை எல்லாம் இருக்கிற சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொல்ளுவது தான். 

வெளி நாடுகளில் நாம் பார்க்கிறோம். குண்டு போடுகிறார்கள். துப்பாக்கிச்  சூடு நடத்துகிறார்கள். மக்களைக் கொல்லுகிறார்கள். எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அந்த நேரத்தில் வியாபாரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. காரணம் மக்களுக்குச் சாப்பாடு வேண்டும். அவர்கள் உயிர் வாழ வேண்டும். தங்களது அனுதின நல்லவை கெட்டவை யாவும் நிறைவேற்ற வேண்டும்.  இது போன்ற தருணங்களில் வியாபாரிகளுக்கும் தார்மீகக் கடமைகள் உண்டு. அதனை அவர்கள் தவிர்க்க முடியாது. தங்களது உயிரைப் பணயம் வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள். 

வியாபாரிகளைப் பொறுத்தவரை  நாட்டில் எது நடந்தாலும் "சும்மா அடைத்துவிட்டுப் போய்விடலாம்"  என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. 

சாதாரண காலங்களாக  இருந்தாலும் சரி, ஆபத்துக் காலங்களாக இருந்தாலும் சரி வியாபாரிகள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். நமது கடமைகளை நாம் செய்ய வேண்டும். நாம் தொடர்ந்தாற் போல நமது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இப்போது நாட்டில் நடப்பது ஓர் அரசியல் நெருக்கடி.  பேராசை பிடித்த பதவி வெறியர்களால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஓரு நெருக்கடி. 

நம்மைப் பொறுத்தவரை நமது தினசரி கடமைகளை நாம் செய்ய வேண்டும். நெருக்கடியை நெருங்க விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற மனப்போக்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்!

"இதுவும் கடந்து போம்!" வாழ்க! வளர்க!

No comments:

Post a Comment