என்ன தான் ஜ.செ.க. அனைத்து மலேசியர்களின் கட்சி என்று சொன்னாலும் அந்தக் கட்சியால் அதனை நிருபித்துக் காட்ட இயலவில்லை!
அது சீனர்களின் கட்சி தான் என்று மீண்டும் மீண்டும் நினைவுறுத்தப் படுகின்றது. அது எல்லாகாலங்களிலும் சீனர்கள் கட்சி என்பதற்கு சான்று அக்கட்சி சீனர்களின் வாழும் இடங்களில் தான் வெற்றிபெற்று வருவதே போதும். மலாய் வாக்காளர் மத்தியில் அது வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இல்லை. இந்திய வாக்காளர்களும் ஒதுங்கியே நிற்கின்றனர்.
இது தான் அக்கட்சியின் நிலைமை. இப்போது அந்தோணி லோக் ஜ.செ.க. வின் செயலாளராக வந்த பின்னர் அவர் இந்தியர்களைக் களை எடுப்பதாகவே தோன்றுகிறது. கட்சியை சீனர் மயமாக்குவதில் இப்போது கொஞ்சம் அதிகமாகவே அவர் கவனம் செலுத்தி வருகிறார் அது மட்டும் அல்ல அவர் அதற்காகவே பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.இது கட்சியின் தலைமைத்துவத்தின் ஏற்பாடு என்று யூகிக்கலாம்.
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை இந்தத் தேர்தலில் அவரை நிற்கவிடாமல் செய்தது நம்மால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு நல்ல சேவையாளரை அனாவசியமாகத் தூக்கி எறிவது போல செய்திருக்கிறார்கள். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட ஒரு மனிதரை ஏதோ "சிறுவர்களிடம் விளையாடுவது " போல லோக் செயல்பட்டிருக்கிறார். அந்த அசல் 'சீனப்புத்தி' அவரிடம் இருக்கிறது என்பது தெளிவு!
ஏன் நெகிரி செம்பிலானிலும் இதே மாதிரி தான். இந்தியர்கள் இரண்டு பேர் எக்ஸ்கோவில் இருந்தனர். அதனை வேண்டுமென்றே மாற்றினார். ஒருவரை மாற்றிவிட்டு ஓரு சீனரை உள்ளே கொண்டு வந்தார். இது நிச்சயமாக இந்தியர்களை கீழறுப்பு செய்யும் வேலை. ஏன் பொதுத் தேர்தல் வரை கூட அவரால் காத்திருக்க முடியாதா? தேர்தலுக்குப் பிறகு அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தால் யாரும் குறை சொல்ல தேவையில்லையே!
இன்னும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. அந்தோணி லோக் ஒரு மலேசியராக செயபட முடியாதவர். இவர் நடவடிக்கைகள் நவீன கால மலேசியர்களுக்கு ஏற்றதல்ல என்பது நிச்சயம்.
ஒரு காலகட்டத்தில் தேர்தலில் போட்டியிட ஆளில்லாத போது இந்தியர்கள் அதுவும் பட்டதாரி இந்தியர்கள் கைகொடுத்தனர் என்பதை லோக் மறந்துவிட்டார். இப்போது பாதை மாறுகிறார்.
இந்தியர்களை ஜ.செ.க. களையெடுப்பதாகவே தோன்றுகிறது!
No comments:
Post a Comment