நான் அப்படித்தான் நினைக்கிறேன். நான் ரொம்ப, ரொம்ப கூனி, குறுகி, குனிந்து, பணிந்து போகிறோமோ என்கிற எண்ணம் மனதிலே ஏற்படுகிறது!
இதற்கு முன்னால் நமது சமூகம் தானைத் தலைவரிடம் கூனி குறுகி நமது பணிவைக் காட்டியதால் அவர் நம்மை பழங்குடியினரையிடாம் ஒப்படைத்துவிட்டுப் போய் விட்டார்! அவர் என்ன தான் நல்லது செய்திருந்தாலும் அவர் செய்த பொருளாதார சீரழிவு தான் நம் கண்முன்னே நிற்கிறது. பொருளாதாரம் தானே இன்றளவும் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது?
இப்போது நாம் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டோமோ என்று அஞ்சுகிறேன். மீண்டும் தானைதலைவரின் - அதே போன்ற வழிகாட்டுதல், அதே மாதிரி அரசியல் - இது என்னவோ சரியானப்பாதையாக எனக்குப் படவில்லை. அவர் காலத்தில் எப்படியான அரசியல் இருந்ததோ அதே மாதிரியான அரசியலைத்தான் இப்போது காண்கிறேன்.
மெட் ரிக் கல்வியா உங்களுக்கு இல்லை! நீங்கள் கல்வியில் முன்னேறி விட்டீர்கள்! அதனால் கோட்டா உங்களுக்கு ஏற்றதல்ல! கல்லுரியா? நீங்கள் படிக்க விரும்பிதெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது. அது உங்களது உரிமையல்ல! எங்களது உரிமை!
எண்பது விழுக்காடு வாக்களித்தீர்களா? அதற்காக உங்களை ஆட்சிக்குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று எந்த வாக்குறுதியும் நாங்கள் அளிக்கவில்லை! உங்களுக்குப் போட்டியிட இடம் கொடுத்ததே ஏதோ புண்ணியம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மதமாற்றமா? அது உங்கள் பிரச்சனை அல்ல. எங்களது கடமை. எங்களது கடமையில் யாரேனும் தலையிட்டால் நடப்பதேவேறு. எங்களுக்குச் சட்டதிட்டங்கள் உள்ளன. அதைத்தவிர்க்க முடியாது. அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை.
நண்பர்களே! எத்தனை ஆண்டுகாலம் கைக்கட்டி, வாய்ப்பொத்தி, கூனி, குறுகி நாம் வாழப்போகிறோம்? இவர்களின் தயவில் தான் நாம் வாழவேண்டுமா என்ன? இந்த சமுதாய நலன் கருதித் தான் இவர்களிடம் கைக்கோக்கிறோம். நமது சமுதாயம் பிழைக்காத் தெரியாத சமுதாயமா என்ன? இன்று தொழிலில் கொடிகட்டி பறக்கும் நமது சமுதாயத்தினர் எல்லாம் இவர்கள் பின்னால் அலைந்தா திரிந்தார்கள்?
இனி நாம் சுயநலத்தோடு தான் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றம் தான் நமக்கு முக்கியம். அரசியல்வாதிகளின் முன்னேற்றத்திற்காக நாயாய், பேயாய் வாழ வேண்டிய அவசியம் நமக்கில்லை. சீனர்கள் இவர்களை நம்பியா வாழ்கிறார்கள்?
கூனி, குறுகி வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாம் தலை நிமிர்ந்து வாழ்வோம்!
No comments:
Post a Comment