பினாங்கு மாநில துணை முதல்வர் பதவியைப் பற்றி பேசும் போது பல்வேறு கருத்துக்கள் வருவது இயல்பு.
நம்மைப் பொறுத்தவரை அது பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியின் உரிமை என்று அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதனை அவர்கள் செயலில் காட்டியிருக்கிறார்கள். நாம் அது தவறு என்று சொல்லத்தான் முடியுமே தவிர அதனை வலியுறுத்தும் அளவுக்கு அரசியல் வலிமை இல்லை. அது சீனர்களிடம் இருக்கிறது, அவ்வளவு தான்!
ஆனால் ஒரு சிலர் இது பற்றிப் பேசும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாததெல்லாம் பேசுகிறார்கள். அந்தப் பதவி ஒரு மலையாளிக்கோ அல்லது ஒரு தெலுங்கருக்கோ போயிருந்தால் கூட அதனையும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக அவர்களை நாம் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.
நண்பர் ஒருவர் தெலுங்கர்களையும், மலையாளிகளையும் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார். அது எப்படி? இன்றைய தமிழ் நாட்டு நிலவரம் அவருக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக தமிழர்களுக்குச் சாதகமாக இல்லை. இன்றைய தமிழர்களின் வீழ்ச்சிக்கு அந்த இரு இனத்தவருமே முக்கிய காரணியாக இருக்கின்றனர்.
ஏன்? மலேசியாவிலும் அதே நிலை தான். இன்று "மித்ரா" வில் மலையாளிகளே முக்கிய பதவியில் இருக்கின்றனர். அது எந்த அளவுக்கு தமிழர்களுக்குப் பயன்படும்? நிச்சயமாக அவர்கள் மலையாளிகளுக்குத்தான் முதல் சலுகைக் கொடுப்பார்கள்.தமிழர்கள் அவர்கள் கண்களுக்கு அகப்பட மாட்டார்கள்! கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ வை விட கணபதி ராவ் எப்படி உயர்ந்துவராகி விட்டார்? நமது மரபு வேறு அவர்கள் மரபு வேறு! ஒரு முறை தமிழனின் பதவி இவர்களிடம் போனால் அதன் பின்னர் அதைத் தமிழன் மறந்துவிட வேண்டியது தான்.
பஞ்சாபியர் வட இந்தியர் என்று நாம் சொன்னாலும் பஞ்சாபியரிடம் கொஞ்சமாவது ஈவு இரக்கம் உள்ளவர்கள். கர்ப்பால் சிங் குடும்பத்தினரைப் பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை எழுந்ததில்லை. குருத்துவாராவில் தான் வாராவாரம் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கிறார்கள். இந்தியா, பஞ்சாபில் அவர்களுடைய குருத்துவாராவில் தினசரி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் பழக்கும் உள்ளதாம். கடும் உழைப்பாளிகள். இந்தியாவிலும் சரி, மலேசியாவிலும் சரி அவர்களில் ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியாது என்று சொல்லுகிறார்கள். இவர்களை நம்பலாம். நம்பக்கூடிய மனிதர்கள்.
நண்பர் தெலுங்கர்களையும், மலையாளிகளையும் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களோடு இவர்களை ஒப்பிடவே முடியாது. தமிழர்களின் வீழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இவர்கள் கனவில் கூட வருவதில்லை!
அதனால் நண்பரே! மன்னியுங்கள்! தமிழர்கள் தமிழர்களாகவே இருக்கட்டும்!
No comments:
Post a Comment