மித்ரா பற்றியான புதியதொரு பிரச்சாரம் கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. யார் இதன் பின்ணனியிலிருந்து இயக்குகிறார்கள் என்பது நேரடியாக யார் மீதும் குற்ற சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
மித்ரா இப்போது பிரதமர் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் நிதி பங்கீடும் ஓரளவு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எப்படியோ நம் அனைவரையுமே அவர்களால் திருப்திபடுத்த முடியாது. ஆனாலும் செல்லுகின்ற பாதை சரியான பாதை தான்.
இந்த நேரத்தில் மித்ரா அமைப்பை ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும் என்று குரலொலி கேட்கின்றது! இது ஏன் என்று நமக்குத் தெரியவில்லை.
ஒற்றுமைத் துறையில் இருந்த போது தான் அதனை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்று பேசியவர்கள் ஜனநாயக செயல் கட்சியினரும், பி.கே.ஆர். கட்சியினரும் தான். அதை அனைவரும் ஏற்றனர். காரணம் அது தேவையாக இருந்தது. இப்போது அவர்களே மாற்றம் வேண்டும் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பிரதமர் துறைக்கு மாற்றியது நல்ல முடிவு. அதனை நாம் வரவேற்கிறோம். காரணம் கணக்கு வழக்கெல்லாம் பக்காவாக வைக்கப்படும். ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
ஒற்றுமைத்துறைக்கு மீண்டும் மாற்றுவது சரியான முடிவாக இருக்காது. அது மீண்டும் பாழைய நிலைக்கே திரும்பும் என்பதே நமது எதிர்பார்ப்பு. மீண்டும் அது அரசியல்வாதிகளின் கைகளுக்கே போகும் என்பதுதான் நமது அனுபவம். யாரோ சிலருக்கு அது பயன்படுமே தவிர மற்றபடி எதிர்பார்க்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்க நியாயமில்லை.
எப்படியோ நாம் நமது கருத்தைத் தான் சொல்ல முடியும். மற்ற்படி அதற்கு மேல் பிரதமர் தான் அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
மித்ராவுக்கு, இன்றைய நிலையில், எந்த மாற்றமும் தேவையில்லை!
No comments:
Post a Comment