நாட்டில் உணவுப் பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது உண்மை தான். அதற்காக கெட்டுப்போன முட்டைகள் என்று தெரிந்தும் அதனை வியாபாரத்திற்குக் கொண்டு வருவது மிக மிக கண்டிக்கத்தக்கது. முட்டை வியாபாரிகள் அதனைத்தான் செய்கின்றனர். அதனைக் குறைவான விலையில் வாங்கி வந்து சிறு வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். எல்லாம் ஓரளவு தெரிந்து தான் நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்குத் தான் தெரிவதில்லை!
இதோ நாசி லெமாக் பொட்டலத்தை ஆர்வத்தோடு பிரித்த ஓர் ஆடவர் ஆடித்தான் போனார். ஐந்து வெள்ளி போட்டு வாங்கிய நாசிலெமாக் பொட்டாலம் பாதி சாப்பிட்டும் முடித்து விட்டார். அப்போது முட்டையின் மஞ்சள் கருவில் உயிரோடு நெளிந்து கொண்டிருந்த புழுக்கள் கண்ணில் பட்டுவிட்டது. அவ்வளவு தான்! அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
நம்மிடையே நிறைய பெண்கள் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாசிலெமாக் நமது உணவாக இல்லாவிட்டாலும் நமது பெண்களும் இந்த வியாபாரத்தில் பலர் ஈடுப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இது போன்ற செய்திகள் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நாமும் இதை எழுதுகின்றோம். நாசிலெமாக் இன்று அனைத்து மலேசியர் உணவாக மாறிவிட்டது. எல்லாருமே தான் விரும்பி சாப்பிடுகின்றோம்.
இது போன்ற புழுக்கள் உள்ள பொருள்களை விற்று நம்மால் பேர் போட முடியாது. காரணம் நாம் தவறு செய்தால் இந்நேரம் ஒரு படையே வந்து இறங்கியிருக்கும்! சுகாதார அமைச்சு உங்களைச் சும்மா விடாது. முட்டையை வாங்கினீர்களா அல்லது உங்கள் வீட்டுக் கோழி முட்டையா என்று கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பார்கள்! அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி சங்கடத்துக்கு உள்ளாகதீர்கள் என்பது தான் நமது நோக்கம்.
சிறு சிறு தொழில்களில் வளர்ந்து வரும் சமுதாயம் நாம். நம் பெயரை நாம் கெடுத்துக்கொள்ளக் கூடாது. கடையில் வாங்குகின்ற போது நல்ல பொருளாகப் பார்த்து வாங்குங்கள். இன்றைக்கு முட்டை என்று செய்தி வருகிறது. நாளை வேறு ஏதாவது, கீரை வகைகளாக இருக்கலாம். அல்லது கோழி இறைச்சியாகக் கூட இருக்கலாம். சீன வியாபாரிகள் எதனையும் தயங்காமல் விற்பனைச் செய்யும் ஒரு கூட்டம். சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வளர்ந்து வரும் நிலையில் நமது மேல் உள்ள நம்பிக்கையை நாம் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது செய்தி. வாழ்க! வளர்க
No comments:
Post a Comment