சங்கங்களின் பதிவு ரத்தாவது பற்றி நாம் அடிக்கடி நாளிதழ்களில் பார்த்துத் தான் வருகிறோம்.
பலர் பல சங்கங்கள், இயக்கங்கள், மன்றங்கள் என்று என்னன்னவோ பெயரில் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் அதில் பலர் நாடாளுமன்ற /சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையேந்துவதைத் தான் கொள்கையாக வைத்திருக்கின்றனர்!
சரி அதைச் சொன்னால் வேறு யாரிடம் வாங்குவது என்பார்கள்! நமக்கு வாங்குவதில் தான் குறி இவர்கள் எல்லாம் தலைவர் பதவியில் இருந்து கொண்டு அவர்களே கடைசி காலம்வரை ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் பின்னர் அது தானாகவே அந்த இயக்கத்தின் பதிவு ரத்தாகிவிடும். இது நமக்கு ஒன்றும் எந்த வியப்பையும் அளிக்கவில்லை.
ஆனால் கோவில் நிர்வாகங்கள் என்பது வேறு அதன் பதிவு ரத்து ஆகிறதென்றால் அங்கு நிச்சயமாக ஏதோ தில்லுமுல்லு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான் பொருள். கோவில்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பது தான் எனது கொள்கை.
சமீபத்தில் ஓரு கோவில் நிர்வாகத்தில் இதே பிரச்சனை தான். பதிவு ரத்தாகும் நிலை. ஏன் அந்த கோவில் நிர்வாகம் பதிவை புதுப்பிக்கவில்ல? அவர்கள் சொல்லுகின்ற காரணம் முந்தைய நிர்வாகம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்காததினால் தங்களால் புதுப்பிக்க முடியவில்லை என்பது இவர்களின் பதில்.
இந்த இடத்தில் யார் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏன் ஒப்படைக்க மறுக்கிறார்கள்? அவர்கள் கோவில் நடைமுறைகளை, புதிய நிர்வாகம், எதுவும் நடைமுறைப் படுத்தக் கூடாது என்பது தான் அவர்கள் பக்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
பொதுவாகவே நிறைய கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் எழுவதை நாம் பார்க்கிறோம். அதனால் தான் செட்டியார்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், தங்கள் கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஏன் தமிழர் கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன? இங்குத் தமிழர்கள் மட்டும் அல்ல. மிகப் புத்திசாலிகளான மலையாளிகள், தெலுங்கர்களும் இருக்கின்றனர்! அதனால் தான் தமிழர்களால் எந்த ஒரு கோவிலையும் நிம்மதியாக நடத்த முடிவதில்லை.
இப்போது சம்பந்தப்பட்ட அந்த கோவில் நிர்வாகத்தில் கொஞ்சம் நுழைந்து பாருங்கள். அப்போது தான் பிரச்சனை உங்களுக்கு விளங்கும்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு அவசியம் கோயில் வேண்டும். அதனால் தான் அவர்கள் தலையாட்டிகளாகவே இருக்கின்றனர். அதனைப் பிற இனத்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சிவன் சொத்து குல நாசம் என்று தெரிந்தும் "இருந்துவிட்டுப் போகட்டும்" என்று சொல்லுபவர்களை என்ன செய்வது?
No comments:
Post a Comment