இந்த 2023-ம் ஆண்டு இந்தியர்களின் தொழில் சார்ந்த வளர்ச்சி எப்படி இருந்தது என்று கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
தமிழர்கள் வணிகத்தில் இன்னும் முனைப்புக் காட்ட வேண்டும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பலவேறு தொழில்களில் நாம் ஈடுபடுகிறோம். சென்ற ஆண்டைப் பார்க்கும் போது உணவகத் தொழிலில் தான் நாம் அதிகம் ஈடுபாடு காட்டுகிறோமோ என்று தோன்றுகிறது.
தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. எங்குப் பார்த்தாலும் உணவகங்கள் திறப்புவிழா காண்கின்றன. பழைய பாணியில் இல்லாமல் எல்லாம் நவீன பாணி உணவகங்களாக இருக்கின்றன.
உணவகங்களுக்கு ஆள் பற்றாக்குறை என்று சொன்னாலும் உணவகங்கள் திறப்புவிழா தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனாலும் ஒரு வகையில் நாம் திருப்தி அடையலாம். நமக்கு என்ன தொழில் தெரியுமோ அதில் ஈடுபடுவது தான் சரியானது. அதைத் தான் இன்று நமது சமூகத்தினர் செய்து கொண்டிருக்கின்றனர்.
இளைஞர் பலர் கணினி தொழிலில் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நல்ல முயற்சியே. ஆனால் நிறைய உழைப்பு தேவை. மேலும் இந்தத் துறை வெளிநாட்டவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொழில்.
வேறு பல தொழில்களிலும் நமது இளைஞர்கள் பரவலாகச் செய்து வருகின்றனர். எல்லாம் வரவேற்கக் கூடிய முயற்சிகளே. இன்னும் நாம் வளர வேண்டும். பல்வேறு தொழில்களில் ஈடுபட வேண்டும். வரும் புதிய ஆண்டில் இன்னும் பல முயற்சிகளை நம் இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய நிலையில் உணவகங்கள் தான் நம் இளைஞர்களுக்குக் கைகொடுக்கின்றன. பரவாயில்லை. ஏற்றுக்கொள்ளலாம். அவரவர் தெரிந்த தொழில்களில் ஈடுபடுவது தான் சிறப்பு. அந்த வகையில் நம் வளர்ச்சியின் முதல் கட்டம் உணவகத்துறை தான். வருங்காலங்களில் இங்கிருந்து தான் நமது தொழில்கள் கிளைவிட்டுப் பரவ வேண்டும்.
வருகின்ற ஆண்டில் தொழில்துறையில் நமது பங்கு அதிகமாயிருக்கும் என நம்பலாம்!
No comments:
Post a Comment