பலாப்பழ பலகாரத்தில் ஸ்டேப்லர் பின்!
என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய இயலாது!
வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அலட்சியம் காட்டினால் இது தான் நடக்கும். பெரியவர்கள் சாப்பிடும் போதே பல இடையூறுகளைக் காண்கிறோம். சிறியவர்கள் அறியாமல், தெரியாமல் சாப்பிட்டால் என்ன ஆவது?
இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. வியாபாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது. ஒன்று மட்டும் அவர்கள் புரிந்து கொண்டால் போதும். பலகாரங்கள் செய்கின்ற இடத்தில் இது போன்ற ஆபத்தான ஸ்டேப்லெர் பின்களுக்கு என்ன வேலை என்பது தான். அந்த இடத்தில் அது தேவையற்றது. எங்கு தேவையோ அந்த இடத்தில் மட்டும் வைத்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரவழியில்லை.
நாம் பார்ப்பதோ பலகாரத்தின் உள்ளே அந்தப் பின்னைக் காண்கிறோம். அங்கே அந்த பின்னுக்கு எந்த வேலையுமில்லை. அது எப்படி போனது என்பதை நாம் எப்படி வேண்டுமானாலும் கற்பனைச் செய்யலாம். காரணம் அந்தப் பின்னுக்கு அங்கு வேலை இல்லை.
இது சிறு வியாபாரிகளின் அலட்சியப் போக்கு என்று சொல்ல முடியாது. எங்கோ தவறு நடந்திருக்கிறது. ஆனால் அந்தத் தவறு எம்மாம் பெரிய தவறு என்பதை வியாபாரிகள் புரிந்து கொண்டால் மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை சிறு வியாபாரிகளுக்கு சுகாதார அமைச்சு வகுப்புகள் எடுக்க வேண்டும். நல்லது கெட்டது என்பதைப்பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்குச் சில பயிற்சிகள் தேவை. அவர்கள் பெரும்பாலும் காசநோய் இருக்கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
பெரிய நிறுவனங்களாக இருந்தால் அவர்கள் உணவு தயாரிக்கும் முறைகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உண்டு. அப்படி முறையாகத் தயாரித்தும் அங்கும் கூட சமயங்களில் பிரச்சனைகள் எழுவதுண்டு.
ஒரு முறையும் இல்லாமல் உணவு பொருள்களைத் தயாரிக்கும் சிறு வியாபாரிகள் மீது - என்ன குற்றத்தைச் சொல்லுவது? அவர்களாகவே பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் நல்லது.
பொறுப்பை உணராமல் நடந்தால் கடைசியில் கெடுவது அவர்களின் வியாபாரம் தான்!
No comments:
Post a Comment