Splashing hot water on a Down Syndrome man
பூனைகளை அடித்துக் கொல்கிறோம். நாய்களை அடித்துக் கொல்கிறோம். அவைகள் மிருகங்கள் தானே என்கிற அலட்சியம் நமக்கு அதிகமாகிவிட்டது. ஆனால் அவைகளும் உயிருள்ள பிராணிகள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. உயிருள்ள ஜீவன்களைக் கொல்வதை நமது சட்டங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிராணிகளை வளர்க்க வேண்டாம். ஏன்? அவைகளை அப்படியே விட்டுவிடுங்கள். அவைகள் எதையோ தின்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும். மனிதனால் தான் சந்தோஷமாக வாழத்தெரியவில்லை. அவைகளையாவது வாழ விடுங்களேன்.
சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம். அடுக்ககத்தில் உள்ள தனது வீட்டுக்கு மின்தூக்கியில் சென்று கொண்டிருந்த ஒரு டவுன் சின்றோம் நோயாளி மீது சுடுநீரை ஊற்றியிருக்கிறார் ஒரு பெண்மணி. இது என்ன கொடூரம்? திருப்பி அடிக்கும் நிலையிலோ, தப்பிக்கும் நிலையிலோ அந்த மனிதர் இல்லை. இப்போது அந்த மனிதர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஏன் இப்படி ஒரு கொடூரமான செயலை அந்தப் பெண் செய்தார் என்று நமக்குப் புரியவில்லை. எதுவும் செய்ய இயலாத ஒரு மனிதர் மீது ஏன் இந்தக் கொலை வெறி? அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறை என்பது சரியானது தான்.
பூனை ஒன்றை உயிரோடு எரித்ததாக ஒரு செய்தி. எப்படி, இப்படி எல்லாம் செய்ய இவர்களுக்கு மனம் வந்தது.?
அரக்கக் குணம் உள்ளவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். மலேசியர்கள் தங்களது குணங்களை மாற்றி வருகின்றனரோ அல்லது மாறி வருகின்றனவோ, விளங்கவில்லை. எல்லாவற்றுக்கும் உணவு தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. மலேசியர்கள் தவறான உணவுகளை உண்டு சீக்கிரமாக வியாதிகள் வந்து சீக்கிரமாக மண்டையைப் போடுகிறார்கள்! அதில் இந்த இரக்கமற்ற குணமும் ஒன்று!
மனிதாபிமானம் மங்கிப் போனதற்கு யார் காரணம்? பெற்றோர்களுக்கே இல்லை அப்புறம் எப்படி பிள்ளைகளுக்கு?
No comments:
Post a Comment